செய்திகள் :

``அதிகாரத்தில் இருப்பவர்கள் மௌனம் காப்பதும் கவலையளிக்கிறது" - ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கனிமொழி ஆதரவு

post image

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பாலிவுட் குறித்துப் பேசியிருந்தார். அவரின் பேட்டி சமூக ஊடகங்களில் வைரலானது.

அதைத் தொடர்ந்து, பாலிவுட் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தவறாகப் பேசியிருப்பதாகவும், அவர் முஸ்லிம் என்பதால் வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாகவும் பேசியதாக செய்திகள் வெளியானது. அதைத் தொடர்ந்து பலரும் ஏ.ஆர். ரஹ்மானை விமர்சித்திருந்தனர்.

சமீபத்தில் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் தன் எக்ஸ் பக்கத்தில், ``ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு முஸ்லிம், இந்தியாவில் அவர் அடைந்துள்ள புகழ் ஈடு இணையற்றது. புகழ் பெற்றவர்களும், பணக்காரர்களும் எந்தச் சூழலிலும் சிரமங்களை எதிர்கொள்வதில்லை. சிரமங்கள் என்னைப் போன்ற ஏழை எளியவர்களுக்குத்தான் நேர்கின்றன.

தஸ்லிமா நஸ்ரீன்
தஸ்லிமா நஸ்ரீன்

நான் இந்த நாட்டின் குடிமகள் அல்ல. இந்தியாவில் பிறந்த பலரை விடவும், நான் இந்த நாட்டை அதிகம் நேசிக்கிறேன். எனக்கு ஓட்டுரிமை இல்லாவிட்டாலும், என் கொள்கைகளுக்காகப் போராடிக்கொண்டு இந்த மண்ணிலேயே வாழ்கிறேன். எனவே, ஏ.ஆர்.ரஹ்மான் தன்னை ஒரு பரிதாபத்திற்குரியவராகக் காட்டிக்கொள்வது அவருக்குப் பொருத்தமானதல்ல" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தச் சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத்தான் ஏ.ஆர்.ரஹ்மான் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ``யாரையும் புண்படுத்தும் எண்ணம் என்னுடைய நோக்கமில்லை. இந்தியனாக இருப்பதை ஆசீர்வதிக்கப்பட்டதாகக் கருதுகிறேன். இசையின் மூலம் சேவை செய்ய வேண்டும் என்பதே என் எண்ணம்" எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தன் எக்ஸ் பக்கத்தில், ``நான் ஏ.ஆர். ரஹ்மானுக்குத் துணை நிற்கிறேன். மதம், மொழி மற்றும் அடையாளங்களைக் கடந்து நிற்கும் ஒரு கலைஞனைத் திட்டமிட்டு இலக்கு வைப்பதும், இதற்கு இந்தியாவின் அதிகாரத்தில் இருப்பவர்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் மௌனம் காப்பதும் ஆழ்ந்த கவலையளிக்கிறது.

ஏ.ஆர் ரஹ்மான்
ஏ.ஆர் ரஹ்மான்

ரஹ்மான் இந்த நாட்டின் இசையை உலகிற்கு எடுத்துச் சென்ற ஒரு படைப்பாளி மட்டுமல்ல, அவர் இந்தியாவின் கலாசாரம் மற்றும் விழுமியங்களின் முதன்மையான தூதுவரும் கூட. அவர் பாரபட்சத்திற்கும் வெறுப்பிற்கும் மாறாக மதிப்பிற்கும், நன்றிக்கும் உரியவர். இத்தகைய சகிப்புத்தன்மையற்ற போக்குக்கு ஜனநாயக மற்றும் பன்முகத்தன்மை கொண்ட ஒரு சமூகத்தில் இடமில்லை" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா, ``அன்புள்ள ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு - இந்தியா உங்கள் தாய்; உங்கள் மரியாதையை வற்புறுத்திப் பெறுவதற்கு இங்கு பா.ஜ.க குண்டர்கள் தேவையில்லை. நீங்கள் உமர் போலச் சிறையில் அடைக்கப்படலாம், அலி கான் போல அலைக்கழிக்கப்படலாம், அக்லக் போலத் தாக்கப்படலாம்... ஆனாலும் நீங்கள் பயந்து மௌனமாக இருக்கக்கூடாது.

எட் சல்லிவன், முஹம்மது அலி போன்றவர்கள் பெரிய நட்சத்திரங்களாக இருந்தபோதிலும், எதற்கும் வளைந்து கொடுக்காமல் உறுதியாக, நிமிர்ந்து நின்று பிழைத்தார்கள். வந்தே மாதரம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

``ஏ.ஆர்.ரஹ்மான் கருத்து அவருக்கு பொருத்தமானதல்ல" - தஸ்லிமா நஸ்ரீன்

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில், பாலிவுட் குறித்து பேசியிருந்தார். அவரின் பேட்டி சமூக ஊடகங்களில் வைரலானது. அதைத் தொடர்ந்து, பாலிவுட் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தவறாக பேசியிர... மேலும் பார்க்க

"என் மகள் கட்டாயப்படுத்தினார்" - முன்னாள் மனைவி, பிள்ளைகளோடு மராத்தானில் பங்கேற்ற ஆமீர் கான்!

மும்பையில் நேற்று டாடா மராத்தான் போட்டி நடந்தது. இதையடுத்து தென்மும்பையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. இப்போட்டியில் பங்கேற்க வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தடகள வீரர்கள், வீராங்கனைகள... மேலும் பார்க்க

டான் 3 படத்தில் நடிக்க ஷாருக் கான் விதிக்கும் புதிய நிபந்தனை: பர்ஹான் அக்தர் சம்மதிப்பாரா?

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் இதற்கு முன்பு நடித்த டான் படம் பெரிய அளவில் ஹிட்டானது. டான் 2 படமும் வெளிவந்துவிட்டது. இப்போது டான் 3 படத்தை இயக்க இயக்குநர் பர்ஹான் அக்தர் திட்டமிட்டுள்ளார். இப்படத்தில் ம... மேலும் பார்க்க

'5 ஏக்கர் ரூ.37.9 கோடி' - கோலியின் முதலீடு; அலிபாக் நகரில் பாலிவுட் நடிகர்கள் குவியக் காரணம் என்ன?

கிரிக்கெட் வீரர் விராட் கோலி நடிகை அனுஷ்கா சர்மாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.மும்பையில் வசித்து வந்த விராட் கோலி தம்பதி இப்போது இங்கிலாந்தில் கு... மேலும் பார்க்க

"ஐகானிக்கான ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்!" - ஹான்ஸிம்மருடன் பணியாற்றுவது பற்றி ஏ.ஆர். ரஹ்மான்

இயக்குநர் நிதேஷ் திவாரி பிரமாண்டமாக பாலிவுட்டில் ராமாயணம் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மானும், உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸிம்மரும் இணைந்து இசையமைத்து வருகிறார்கள். Ram... மேலும் பார்க்க

"அதற்கு நோ சொல்லியிருந்தேன்; ஆனால், 'ஜெயிலர் 2'வில் அதை செய்திருக்கிறேன்; காரணம்..." - விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடித்திருக்கும் சைலண்ட் திரைப்படமான 'காந்தி டாக்ஸ்' இம்மாதம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. மராத்தி சினிமா இயக்குநரான கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கியிருக்கும் இப்படத்தில் அரவிந்த் சாம... மேலும் பார்க்க