செய்திகள் :

Kadhalar Dhinam: பரபரப்பான மும்பை ஸ்டேஷனில் ஷூட்; 1 கோடிக்கு செட் - 'காதலர் தினம்' பட சுவாரஸ்யங்கள்!

post image

காதலர் தினத்தை முன்னிட்டு 'உயிருள்ளவரை உஷா', 'மௌனம் பேசியதே', 'மின்னலே', 'காதலர் தினம்' ஆகிய திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் ஆகின்றன.

இதில் இயக்குநர் கதிர் இயக்கத்தில் 1999-ம் ஆண்டு வெளிவந்த 'காதலர் தினம்' 90ஸ் கிட்ஸுக்கு அத்தனை பேவரிட் என்றே சொல்லலாம்.

பலருக்கும் பேவரிட்டான இத்திரைப்படம் இந்த வாரம் 'காதலர் தினம்' ஸ்பெஷலாக திரைக்கு வருகிறது.

இத்திரைப்படத்திற்கு இயக்குநர் கதிர் ஏன் காதலர் தினம் என்கிற டைட்டில் வைத்தார் தெரியுமா?

Kadhalar Dhinam Still
Kadhalar Dhinam Still

1999-ல், ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் இதே கேள்விக்கு இயக்குநர் கதிர் பதிலளித்திருப்பார்.

அவர், "'டீச்சர்ஸ் டே, மதர்ஸ் டே, இன்டிபெண்டன்ஸ் டே'னு ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒரு நாள் இருக்கும். ஆனா, எல்லாவற்றையும்விட உயர்ந்தது 'காதலர் தினம்'னு சொல்வேன்.

ஏன்னா... காதல்தான் மனிதகுலத்தையே நாகரிகப்படுத்தின விஷயம். ஆதி மனிதனுக்குக் கட்டுப்பாடுகள் கிடையாது. அவன் எல்லோரோடும் வாழ்ந்தான்.

பிறகு ஒரு பெண்ணைப் பார்த்தான். அவள் அழகில் மயங்கினான். அவளது அண்மை, அவனுக்குப் பேரின்பமாக இருந்தது. அவள் தனக்கு மட்டுமே சொந்தம் என்று உரிமை கொண்டாடத் துவங்கினான்.

உறவுகள் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வந்தன. அதற்குக் காரணம், காதல்! அத்தனை உறவுகளுக்கும் அடிப்படை வித்து காதல். காதலைத் தீண்டாத ஜீவனே இந்தப் பூமியில் கிடையாது. இளைஞர்களுக்கு அது நாளைய கனவு.

Kadhalar Dhinam Still
Kadhalar Dhinam Still

பெரியவர்களுக்கு அது நேற்றைய நினைவு. காதலுக்குப் பரிசா என்னென்னவோ தருவாங்க. தன்னையே தர நினைச்ச ஒரு மனசோட கதைதான் காதலர் தினம். இது ஹை-டெக் காலம்.

ஒரு காலத்துல லெட்டர் எழுதினான். அப்புறம் போன்லேயே டெவலப் பண்ணினான். இப்போ இன்டர்நெட் மூலமாதான் நிறைய லவ் நடக்குது. என் ஹீரோவும் ஹீரோயினும் அப்படி கம்ப்யூட்டர் காதலர்கள்!" எனக் கூறியிருந்தார்.

மும்பை நகரத்தில் பயங்கர பிஸியாக இருந்த, இருக்கும்... விக்டோரியா ரயில்வே ஸ்டேஷனை (சத்ரபதி சிவாஜி டெர்மினஸ்) ஒரு வாரத்திற்கு வாடகைக்கு எடுத்து படக்குழு படப்பிடிப்பை நடத்தியிருந்தது.

அதுமட்டுமல்ல, இப்படத்திற்காக மட்டும் படக்குழு ஒரு கோடி ரூபாய்க்கு செட் அமைத்திருக்கிறார்கள்.

இப்படியான பிரமாண்ட செட் வேலைகள் குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், "'இந்தியன்' படத்திற்குப் பண்ணதைவிட, அதிகமா செலவு பண்றேன். காதல்ங்கிறதால என்ன ஏதுனு இன்னும் கணக்கு கூடப் பார்க்கலை" எனக் கூறியிருக்கிறார்.

Kadhalar Dhinam Still
Kadhalar Dhinam Still

1999-ம் ஆண்டில் காதலர் தினத்தன்றுதான் இப்படத்தின் ஆடியோ காஸட்டுகள் வெளியிடப்பட்டன.

அப்போது அது குறித்து இயக்குநர், "வாலன்டைன்ஸ் டே அன்னிக்கு ஒவ்வொரு பையன், பொண்ணு கையிலயும் இந்த காஸட்டுகள்தான் காதல் பரிசா இருக்கும் பாருங்க..." எனக் கூறியிருந்தார்.

காலத்திற்கேற்ப வடிவங்கள் பல மாறிவிட்டன. ஆனால், 'காதலர் தினம்' படத்தின் பாடல்கள் அனைத்து வடிவங்களிலும் பயணித்து, இன்றைய ஸ்பாடிஃபை தளத்திலும் பலரின் ப்ளேலிஸ்டில் இடம்பிடித்திருக்கின்றன.

மௌனம் பேசியதே: "என்னோட ஹீரோ சூர்யா சார் கூட நடிச்சது சந்தோஷமா இருந்துச்சு" - நடிகை லைலா

இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் சூர்யா, த்ரிஷா, லைலா நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் 'மௌனம் பேசியதே'. காதலர் தினத்தை முன்னிட்டு இப்படம் வரும் பிப். 13 ஆம் தேதி ரீ... மேலும் பார்க்க

Ponnambalam: "ஷூட்டிங் ஸ்பாட்ல குடிப்பேன்னு கதை சொல்லிட்டு இருக்காங்க!" - பொன்னம்பலம் பேட்டி

‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’ போன்ற படங்களின் மூலம் ஸ்டண்ட்மேனாக சினிமாவுக்குள் வந்த நடிகர் பொன்னம்பலம், பல்வேறு வில்லன் கேரக்டர்களில் நடித்து மக்களுக்கு பரிச்சயமானார்.கடந்த சில வருடங்க... மேலும் பார்க்க

"இன்றையக் காலக்கட்டத்தில தியேட்டருக்கு நடிப்பதா, ரீல்ஸுக்கு நடிப்பதா எனத் தெரியல.!"- சரத்குமார்

'கொம்பு சீவி' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாதவ் தாசன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'ஆழி' படத்தில் நடித்திருக்கிறார் சரத்குமார்.கடலை மையமாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில... மேலும் பார்க்க

"அந்த சமயத்துல நான் அழுதிட்டேன்"- ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடல் உருவான விதம் குறித்து ஏ.ஆர் ரஹ்மான்

‘மின்சார கனவு’ படத்தில் இடம்பெற்ற ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடல் உருவான விதம் குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். ராஜிவ் மேனன் இயக்கத்தில் 1997ஆம் ஆண்டு வெள... மேலும் பார்க்க