செய்திகள் :

மகாராஷ்டிரா: பாஜகவிற்கு மேயர் தேர்தலில் கைகொடுத்த உத்தவ் தாக்கரே; உட்கட்சி மோதலால் காங்கிரஸ் தோல்வி

post image

மகாராஷ்டிராவில் கடந்த மாதம் நடந்த மாநகராட்சித் தேர்தலில் பா.ஜ.க அதிகப்படியான இடங்களைப் பிடித்துள்ளது. மும்பையில் 44 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பா.ஜ.க மேயர் பதவியைப் பிடித்திருக்கிறது.

இத்தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா தனித்துப் போட்டியிட்டது. பா.ஜ.க-வும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. மாநகராட்சித் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் மேயர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

சில மாநகராட்சிகளில் மேயர் பதவியைப் பிடிப்பதில் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. சந்திராப்பூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 66 உறுப்பினர்களில் காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சமாக 27 உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

பா.ஜ.க-விற்கு 23 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 6 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. இதில் மேயர் பதவியைப் பிடிக்கும் அளவுக்கு எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இல்லை.

இதையடுத்து மேயர் பதவியைப் பிடிக்க காங்கிரஸ் மூத்த தலைவர் விஜய், உத்தவ் தாக்கரேயின் இல்லத்திற்குச் சென்று அக்கட்சியின் ஆதரவைக் கோரினார்.

விஜய்
விஜய்

அதோடு துணை மேயர் பதவி கொடுப்பதாகவும் குறிப்பிட்டார். ஆனால் மேயர் தேர்தலில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா பா.ஜ.க வேட்பாளருக்கு ஆதரவு கொடுத்தது.

இதனால் பா.ஜ.க வேட்பாளர் 32 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் 31 வாக்குகள் பெற்றார். ஒரு வாக்கு வித்தியாசத்தில் பா.ஜ.க வெற்றி பெற்றது. இங்கு ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி ஒட்டெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தது. இதுவும் பா.ஜ.கவிற்குச் சாதகமாக அமைந்தது.

சிவசேனா இரண்டாக உடைந்ததில் பா.ஜ.க முக்கிய பங்காற்றியதாக உத்தவ் தாக்கரே தொடர்ந்து கூறி வரும் நிலையில் பா.ஜ.க வேட்பாளருக்கு அவரது கட்சி ஆதரவு கொடுத்து இருக்கிறது. காங்கிரஸ் மேயர் பதவியில் தோல்வி அடைந்ததற்கு உட்கட்சி பிரச்னையே காரணம் என்று கூறப்படுகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜய் மற்றும் காங்கிரஸ் எம்.பி பிரதிபா ஆகியோர் இடையேயான மோதல் காரணமாகவே காங்கிரஸ் தோல்வி அடைந்ததாகக் கூறப்படுகிறது. அதேசமயம் பா.ஜ.க மூத்த தலைவர் சுதிர் முங்கந்திவார், உத்தவ் தாக்கரே கட்சிக்கு 15 மாத மேயர் பதவி கொடுப்பதாகக் கூறி தங்களது பக்கம் இழுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

`கூட்டணி ஆட்சியா ஒரு கட்சி ஆட்சியா? மக்கள் முடிவு செய்வார்கள்!' - ஸ்டாலினுக்கு காங்கிரஸ் பதிலடி

'India Today' ஊடகத்தின் கருத்தரங்கில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டிருந்தார்.அவரிடம் காங்கிரஸ் கட்சி உடனானக் கூட்டணி குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், "ஆட்சியில் பங்க... மேலும் பார்க்க

"தவெகவினர் மீது நாங்கள் தாக்குதல் நடத்தினோமா? நடந்தது இதுதான்"- அமைச்சர் சேகர் பாபு விளக்கம்

துறைமுகம் தொகுதியில் கருத்துக்கணிப்புக்காக சென்ற தவெக நிர்வாகிகள் தாக்கப்பட்டிருந்தனர். இந்த தாக்குதலில் அமைச்சர் சேகர்பாபுவின் ஆதரவாளர்கள்தான் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இதனிடையே... மேலும் பார்க்க

'நேரு தவிர்த்ததையும் சேர்த்து' - வந்தே மாதரம் எப்படி பாடப்பட வேண்டும்? - மத்திய அரசின் நெறிமுறைகள்!

வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு இது.இதையொட்டி, வந்தே மாதரம் எப்படி பாடப்பட வேண்டும் என்கிற வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். > 'மதச்சார்ப்பற்ற தேசம்' என்று முன்னாள் பிர... மேலும் பார்க்க

'தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஒத்துவராது, ஆனால்.!' - காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து ஸ்டாலின்

'India Today' ஊடகத்தின் கருத்தரங்கில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டிருக்கிறார். அவரிடம் காங்கிரஸ் கட்சி உடனானக் கூட்டணி குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், "ஆட்சியில் ப... மேலும் பார்க்க

அதிமுக: `எமெர்ஜென்சி ஆதரவு; பாஜக-வின் நட்பு; யாருக்குமில்லா அந்த துணிச்சல்!' | கூட்டணி சர்க்கஸ் 5

அதிமுககூட்டணி சர்க்கஸ் 5ஏறுகிற மேடையிலெல்லாம் 1967 மற்றும் 1977 இல் நிகழ்ந்ததைப் போன்ற மாற்றம் 2026 லும் ஏற்படும் என தவெக தலைவர் விஜய் பேசி வருகிறார். இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் 1967 இல் திமுக... மேலும் பார்க்க

Naravane: பரபரப்பைக் கிளப்பும் 'Four Stars of Destiny'; நாரவனேயின் 'ஒற்றை' வாக்கிய பதில் என்ன?

இந்தியாவின் முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் நாரவனேயின் புத்தகம் 'ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி'. இந்தப் புத்தகம்தான் கடந்த வாரத்தில் இருந்து இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரைப் பரபரப்பாக்கி வர... மேலும் பார்க்க