'ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக் vs தேர்தலுக்கான லஞ்சம்' ஊடகவியலாளர்களின் பார்வையில்...
'யூடியூப்பில் ஃபாலோவர்ஸ் இல்லை' - கோபத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஸ்டூடியோவிற்கு தீ வைத்த வாலிபர்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கார்வா என்ற இடத்தைச் சேர்ந்த விதயக் பிரஜாபதி (27) என்பவர் பெரிய அளவில் பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்தார்.
அதில் வீடியோக்களைப் போட தனது வீட்டில் ரூ.10 லட்சம் செலவு செய்து நவீன முறையில் ஸ்டூடியோ ஒன்றையும் உருவாக்கினார். ஆனால் சேனல் ஆரம்பித்து பல மாதங்கள் ஆன பிறகும் போதிய ஃபாலோவர்கள் வரவில்லை.

சப்ஸ்கிரைப்பர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கவில்லை. இதனால் பிரஜாபதி மன அழுத்தத்திற்குச் சென்றார். இது குறித்து பிரஜாபதி வீட்டிற்கு அருகில் வசிக்கும் பிரகாஷ் குமார் என்பவர் கூறுகையில், பிரஜாபதி கடந்த ஒருவாரமாக ஸ்டூடியோவைப் பூட்டிக்கொண்டு தனிமையில் இருந்தார்.
இரவு 10 மணிக்கு வீட்டைப் பூட்டிக்கொண்டு ஸ்டூடியோவிற்குத் தீவைத்துக்கொண்டார். இத்தீயில் பிரஜாபதி குடும்பத்தினரும் சிக்கிக்கொண்டனர். இரும்புக் கதவை அவர்களால் திறக்க முடியவில்லை. அவர்கள் உதவி கேட்டு கூச்சலிட்டனர்.
இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து சுவர் ஒன்றை உடைத்து உள்ளே இருந்தவர்களை மீட்டனர். குடும்பத்தினர் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டுவிட்டாலும், அங்கிருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகிவிட்டன.
போலீஸார் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்தபோது பிரஜாபதி சுவரில் இருந்து வெளியில் குதித்து தப்பித்து ஓடிவிட்டார். மறுநாள் அவரை உறவினர்கள் கண்டுபிடித்து மனநல நிபுணரிடம் அழைத்துச் சென்று கவுன்சிலிங் கொடுத்தனர்.




















