செய்திகள் :

IND vs PAK: ' இஷான் கிஷனின் ‘அவுட் ஆஃப் த பாக்ஸ்’ சிந்தனை' - கேப்டன் சூர்யகுமார் யாதவ்

post image

2026 டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றிருக்கிறது.

இதன்மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. நேற்றையப் போட்டிக்கு பிறகு இந்திய அணியின் வெற்றி குறித்து பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், “ இந்த வெற்றி முழுக்க முழுக்க இந்தியாவுக்கானது.

நாங்கள் விளையாட நினைத்த அதே விதமான கிரிக்கெட்டையே இந்தப் போட்டியிலும் விளையாடினோம். இந்த ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்வதே சிறந்த முடிவு என்று நினைத்தோம்.

indian team
indian team

ஆட்டம் தொடங்கியதும் 0/1 என்ற நிலையில், யாரோ ஒருவர் பொறுப்பை ஏற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

அந்த நேரத்தில் இஷான் கிஷன் சற்று வித்தியாசமாக, ‘அவுட் ஆஃப் த பாக்ஸ்’ சிந்தனையுடன் விளையாடினார்.

அவர் அந்த பொறுப்பை எடுத்த விதம் உண்மையிலேயே அசாதாரணமானது. முதலில் பேட்டிங் செய்யும் போது ஆடுகளத்தை கணிப்பது சற்று கடினம்.

இரவில் பனி (Dew) இருக்கும் அளவு, பிச்சின் நடத்தை எல்லாம் எப்படி இருக்கும் என்பது தெரியாது.

இருந்தாலும், நாங்கள் எடுத்த ஸ்கோர், தேவையான ரண்களை விட சுமார் 15 ரன்கள் அதிகம் என்று உணர்ந்தோம். 155 இருந்தால்கூட அது கடினமான போட்டியாக மாறியிருக்கும். 

ind vs pak
ind vs pak

பந்து வீச்சில் அனைவரும் தங்களது பங்கினை சிறப்பாக செய்தது மிகவும் சந்தோஷம். ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை அளித்தார்கள். 

இப்போது நாங்கள் ஒரு அணியாக ஒன்றாகச் சேர்ந்து இந்த வெற்றியை கொண்டாடுவோம். அதன் பிறகு அகமதாபாத் செல்லும் பயணத்தின் போது, அடுத்த போட்டிகளைப் பற்றி யோசிப்போம்” என்று பேசியிருக்கிறார். 

IND vs PAK: "அவர்களை அதிகம் ஓட வைக்க முயன்றேன்; அது நன்றாக வேலை செய்தது" - ஆட்டநாயகன் இஷான் கிஷன்

2026 டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றிருக்கிறது. இதன்மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. நேற்றையப் போட்டியில் ... மேலும் பார்க்க

Ind vs Pak : 'இலங்கையில் பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா!' - சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் “நடக்குமா, நடக்காதா?” என்று ஆரம்பத்திலிருந்தே காத்திருந்த இந்த T20 தொடரின் மிகப்பெரிய போட்டியான இந்தியா vs பாகிஸ்தான் ஆட்டம், பல சர்ச்சைகளுக்குப் பிறகு இன்று கொழும்ப... மேலும் பார்க்க

T20 WC: ஆஸ்திரேலியா ஆல் அவுட்; சம்பவம் செய்த ஜிம்பாப்வே! - கொழும்புவில் என்ன நடந்தது?

கொழும்புவில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அதிர்ச்சியளித்திருக்கிறது ஜிம்பாப்வே அணி.Zimbabweடாஸை ஆஸ்திரேலிய அணியே வென்றிருந்தது. முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தது. கொழும்பு மைதானம் கொஞ்... மேலும் பார்க்க

'தீப்பொறியாக நமீபியா; ஊதி அணைத்த மென் இன் ப்ளூ! - எப்படி வென்றது இந்தியா?

உலகக்கோப்பைப் போட்டிகளின் முதல் சுற்றில் இந்தியா போன்ற பெரிய அணிகளுக்கு பெரும்பாலும் சிக்கல் இருக்காது. ஆனால், இந்த உலகக்கோப்பையில் சின்னச்சின்ன அணிகளெல்லாம் சிறப்பாக ஆடுகின்றன. அதனால் நமீபியாவுக்கு எ... மேலும் பார்க்க

T20 WC: `என்னா மேட்ச்!' - இரண்டு சூப்பர் ஓவர்; ஆனாலும் லாஸ்ட் பால் த்ரில்லர்! SA-வை பதற வைத்த AFG!

டி20 உலகக் கோப்பையின் 13-வது லீக் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ரசிகர்களை நாற்காலியின் நுனியில் அமர வைத்த பரபரப்பான திரில்லராக மாறியது.தென் ஆப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய இந்தப்... மேலும் பார்க்க

CSK: சிஎஸ்கே அணியுடன் கைகோக்கும் ஸ்கைபேக்ஸ் - இளைஞர்களைச் சென்றடைய எடுத்த முடிவு!

ஐபிஎல் 2026 சீஸனை முன்னிட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியுடன் பிரபல லக்கேஜ் பிராண்டான ஸ்கைபேக்ஸ் அதிகாரபூர்வ கூட்டணியில் இணைந்துள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம், வரும் சீஸனில் சிஎஸ்கே அணியின் அதிகாரப்... மேலும் பார்க்க