செய்திகள் :

IND vs PAK: "அவர்களை அதிகம் ஓட வைக்க முயன்றேன்; அது நன்றாக வேலை செய்தது" - ஆட்டநாயகன் இஷான் கிஷன்

post image

2026 டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றிருக்கிறது.

இதன்மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. நேற்றையப் போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷன் ஆட்டநாயகன் விருதை வாங்கி இருக்கிறார்.

அதன் பிறகு இஷான் கிஷன், "தொடக்கத்தில் ஆடுகளம் அவ்வளவு எளிதாக இல்லை.

ஆனால் சில நேரங்களில், நாம் என்ன விளையாட வேண்டும், எந்த ஷாட்கள் நமக்குப் பொருந்தும் என்பதை நம்பி விளையாட வேண்டியது அவசியம்.

indian team
indian team

அதனால் என் பலத்தை மட்டுமே கவனத்தில் வைத்து, எளிமையாக விளையாடினேன்.

பந்தைக் கவனமாக பார்த்து, பீல்டுக்கு ஏற்றாற்போல் ஷாட்களை தேர்வு செய்தேன்.

அவர்களை அதிகம் ஓட வைக்க முயன்றேன். அது எனக்கு நன்றாக வேலை செய்தது.

சமீப காலமாக நிறைய உழைத்திருக்கிறேன். அதனால் பந்து வீச்சாளர்கள் நான் விரும்பும் இடத்திற்கே பந்து வீச வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

மைதானம் பெரியதாக இருந்ததால், இடைவெளிகளும் அதிகம். அதனால் இடைவெளிகளை நோக்கி அடிப்பதே என் நோக்கம்.

விக்கெட் சுலபமாக இல்லாததால், குறைந்தது இரண்டு ரன்கள் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

160–170 ரன்கள் எடுத்தாலே அது நல்ல இலக்கு என்று நினைத்தேன்.

அதுமட்டுமல்லாமல் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி எப்போதும் சிறப்பான ஒன்று. நமக்கு மட்டுமல்ல, நம் நாட்டுக்கே.

இஷான் கிஷன்
இஷான் கிஷன்

இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். அவர்களிடம் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தார்கள்.

சரியான ஷாட்களை தேர்வு செய்து விளையாடினோம். பாகிஸ்தானை வீழ்த்திய இந்த வெற்றி, தொடரின் மீதம் இருக்கும் போட்டிகளுக்கு எங்களுக்கு பெரும் நம்பிக்கையை தரும்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து பெற முயற்சிப்போம். மொத்தத்தில் இந்த போட்டியை நாங்கள் வென்றத்தில் எங்களுக்கு மகிழ்ச்சி" என்று பேசியிருக்கிறார்.

IND vs PAK: குல்தீப் யாதவிடம் கோபப்பட்ட ஹர்திக்; இணையத்தில் வைரலாகும் வீடியோ! - நடந்தது என்ன?

2026 டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றிருக்கிறது.இதன்மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. நேற்றையப் போட்டியில் த... மேலும் பார்க்க

IND vs PAK: ' இஷான் கிஷனின் ‘அவுட் ஆஃப் த பாக்ஸ்’ சிந்தனை' - கேப்டன் சூர்யகுமார் யாதவ்

2026 டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றிருக்கிறது. இதன்மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. நேற்றையப் போட்டிக்கு ... மேலும் பார்க்க

Ind vs Pak : 'இலங்கையில் பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா!' - சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் “நடக்குமா, நடக்காதா?” என்று ஆரம்பத்திலிருந்தே காத்திருந்த இந்த T20 தொடரின் மிகப்பெரிய போட்டியான இந்தியா vs பாகிஸ்தான் ஆட்டம், பல சர்ச்சைகளுக்குப் பிறகு இன்று கொழும்ப... மேலும் பார்க்க

T20 WC: ஆஸ்திரேலியா ஆல் அவுட்; சம்பவம் செய்த ஜிம்பாப்வே! - கொழும்புவில் என்ன நடந்தது?

கொழும்புவில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அதிர்ச்சியளித்திருக்கிறது ஜிம்பாப்வே அணி.Zimbabweடாஸை ஆஸ்திரேலிய அணியே வென்றிருந்தது. முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தது. கொழும்பு மைதானம் கொஞ்... மேலும் பார்க்க

'தீப்பொறியாக நமீபியா; ஊதி அணைத்த மென் இன் ப்ளூ! - எப்படி வென்றது இந்தியா?

உலகக்கோப்பைப் போட்டிகளின் முதல் சுற்றில் இந்தியா போன்ற பெரிய அணிகளுக்கு பெரும்பாலும் சிக்கல் இருக்காது. ஆனால், இந்த உலகக்கோப்பையில் சின்னச்சின்ன அணிகளெல்லாம் சிறப்பாக ஆடுகின்றன. அதனால் நமீபியாவுக்கு எ... மேலும் பார்க்க

T20 WC: `என்னா மேட்ச்!' - இரண்டு சூப்பர் ஓவர்; ஆனாலும் லாஸ்ட் பால் த்ரில்லர்! SA-வை பதற வைத்த AFG!

டி20 உலகக் கோப்பையின் 13-வது லீக் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ரசிகர்களை நாற்காலியின் நுனியில் அமர வைத்த பரபரப்பான திரில்லராக மாறியது.தென் ஆப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய இந்தப்... மேலும் பார்க்க