செய்திகள் :

ரஷ்யா எடுத்த 'ஒரு' முடிவு? தங்கம் விலையைக் கடும் வீழ்ச்சியில் தள்ளப் போகிறதா?|Gold

post image

கடந்த ஜனவரி மாத இறுதியில் இருந்து தங்கம், வெள்ளி விலை சற்று நிதானமாகவே சென்றுகொண்டிருக்கிறது.

அடுத்து தங்கம் விலை ஏறுமா... இறங்குமா என்று யோசித்துக்கொண்டிருந்த வேளையில், தங்கம் விலை பெரும் வீழ்ச்சியைக் கூட சந்திக்கலாம் என்று கூறுகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்.

"ரஷ்யா மீண்டும் வணிகத்திற்கு அமெரிக்க டாலருக்கு மாற உள்ளது என்கிற அறிக்கை சமீபத்தில் வெளியாகி உள்ளது. அடுத்ததாக, ரஷ்யா - உக்ரைன் போரும் முடிவுக்கு வரப் போகிறது என்கிற பேச்சுகளும் எழுந்துள்ளன.

பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்
பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்

டாலர் இல்லாத வணிகத்தை மேற்கொள்ள வேண்டும் என்கிற பேச்சை முன்னெடுத்ததே பிரிக்ஸ் அமைப்பு தான். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் அந்த அமைப்பில் இடம்பெற்றிருக்கின்றன.

அடுத்ததாக, உக்ரைன் உடனான போருக்குப் பின், ரஷ்யா பெரும் கட்டுப்பாடுகளைச் சந்தித்தது. இதனால், அது தங்களுடைய நாணயமான ரூபிள்ஸ் அல்லது வணிகம் செய்யும் அந்தந்த நாடுகளின் நாணயத்தில் பரிவர்த்தனை செய்து வந்தது.

இந்த நிலையில், மேலே சொன்ன அறிக்கை வெளியாகி உள்ளது. ஆனால், இதை ரஷ்ய அரசாங்கம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

ரஷ்யாவும், சீனாவும் காரணம்

கடந்த சில மாதங்களாக நாம் பார்த்த தங்கம் விலையின் 'கிடுகிடு' ஏற்றத்திற்கு ரஷ்யா மற்றும் சீனா முக்கிய காரணம். இரு நாடுகளும் தங்கத்தை அதிகம் வாங்கிக் குவித்தன.

அடுத்ததாக, அவர்கள் டாலரைத் தாண்டி வேறு நாணயங்களை நோக்கிச் சென்றனர்.

அமெரிக்க டாலர்
அமெரிக்க டாலர்

டாலரைத் தாண்டி வேறு நாணயம் வர்த்தக புழக்கத்திற்கு வருமோ என்று பிற நாடுகளும் தங்கத்தை நோக்கி நகர்ந்தன. இதனால், அமெரிக்க டாலரின் மதிப்பு சற்று சரியத் தொடங்கின.

இப்போது ரஷ்யா குறித்த இந்தத் 'திடீர்' அறிக்கைக்குப் பின், சந்தையில் தங்கம் கொஞ்சம் வலுவான இறக்கத்தைச் சந்தித்து மீண்டது.

ஒருவேளை, இந்த அறிக்கை உண்மையாகும் பட்சத்தில், தங்கம், வெள்ளி விலை கடும் வீழ்ச்சியைச் சந்திக்கலாம்".

Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters

Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed.

INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.

One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration)

Gold Rate: சரிந்த தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 ஆகவும், பவுனுக்கு ரூ.960 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 குறைந்துள்ளது.ஏப்ரல் 1-ம் தேதி முதல் 'இந்த' அனைத்து இடங்களிலும் பான் கார்... மேலும் பார்க்க

'திரும்ப ஒரு ஏற்றமா?' இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.160 ஆகவும், பவுனுக்கு ரூ.1,280 ஆகவும். வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. Gold Rate: 'மிஸ் பண்ணிடாதீங்க' - தங்கம் வாங்க சூப்பர் நேரம் இது! காரணம் தெரி... மேலும் பார்க்க

'இறங்குமுகம்!' ரூ.1,600 குறைந்த தங்கம் விலை - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 ஆகவும், பவுனுக்கு ரூ.1,600 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது.Gold Rate: 'மிஸ் பண்ணிடாதீங்க' - தங்கம் வாங்க சூப்பர் நேர... மேலும் பார்க்க

ஏறிய வேகத்திலேயே இறங்கிய தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.190 ஆகவும், பவுனுக்கு ரூ.1,520 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.தங்கம் விலை ஏன் ஒரே நாளில் இரு முறை ஏறுகிறது? | வாசகர் கேள்விக்கு பதில் ... மேலும் பார்க்க

Gold Rate: 'மிஸ் பண்ணிடாதீங்க' - தங்கம் வாங்க சூப்பர் நேரம் இது! காரணம் தெரியுமா?

தங்க விலை தற்போது சற்று நிதானித்திருக்கிறது. அதனால், இப்போது தங்கத்தில் முதலீடு செய்து வைக்கலாம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருப்பீர்கள்.உங்களுக்கான பதிலைத் தருகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்... மேலும் பார்க்க

Gold Rate: 'கொஞ்சமே கொஞ்சம்' உயர்ந்த தங்கம்; இன்றைய தங்க விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.20வும், பவுனுக்கு ரூ.160வும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.Gold Rate: தங்கம் 'இந்த' விலைக்குக் கீழ் இறங்கிவிட்டால்? உஷார் மக்களே!தங்கம் | ஆப... மேலும் பார்க்க