செய்திகள் :

Anirudh: 'இது என்னுடைய மிக முக்கிய மைல்கல்!'- புதிய இசை லேபிளைத் தொடங்கிய அனிருத்

post image

இசையின் மூலம் தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் தனக்கென்று தனி முத்திரையை பதித்திருப்பவர் அனிருத்.

கடைசியாக ‘கூலி’ படத்திற்கு இசையமைத்திருந்தார். இதனைத்தொடர்ந்து அவரது இசையில் ‘எல்.ஐ.கே’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

சிம்புவின் ‘அரசரன்’, லோகேஷ் நடிக்கும் ‘டிசி’, ‘ஜெயிலர் -2’, ஷாருக் கானின் ‘கிங்’ போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

அனிருத்
அனிருத்

இந்நிலையில் அனிருத் 'Albuquerque Records' என்ற புதிய இசை லேபிள் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார்.

இதுதொடர்பாக பேசியிருக்கும் அனிருத், “ ‘Albuquerque Records’ மூலமாக இசையை மையப்படுத்திய வியாபாரத்துறைக்குள் நுழைகிறேன்.

இது என்னுடைய படைப்பாக்கத்திலும் மிக முக்கிய மைல்கல்லாக இருக்கும். திரைப்படங்களுக்கு இசையமைப்பதற்கு முன்பாக சுயாதீன பாடல்களில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறேன். 

இந்த நிறுவனம் என்னுடைய சினிமா மற்றும் தனியிசைப் பாடல்களில் புதிய திறமையாளர்களை அறிமுகப்படுத்தி ஊக்கப்படுத்த உதவியாக இருக்குமென நம்புகிறேன்.

அனிருத்
அனிருத்

வளமான குரல்களையும் நம்முடைய கலாசார இசையையும் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம்.

என்னுடைய எல்லா பாடல்கள் மற்றும் குறிப்பிட்ட பின்னணி இசைத் தொகுப்புகளுடன் இந்த நிறுவனத்தை இப்போது ஆரம்பிக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Nayanthara:``மூன்று மாநில விருதுகள், உண்மையிலேயே ஆசிர்வதிக்கப்பட்டதாக.!" - நடிகை நயன்தாரா நெகிழ்ச்சி

தமிழக அரசு, சினிமா மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த விருதுகள் கடந்த 13-ம் தேதி வழங்கப்பட்டது. இ... மேலும் பார்க்க

ஹீரோவாகும் டான்ஸ் மாஸ்டர்; டைரக்டர் ஆக புரொமோஷன் ஆகும் கலை இயக்குநர்! - கதை, படப்பிடிப்பு அப்டேட்!

பா.ரஞ்சித்தின் 'காலா', 'சார்பட்டா பரம்பரை', தனுஷின் 'கர்ணன்', 'கேப்டன் மில்லர்' ஆகிய படங்களின் கலை இயக்குநராகப் பணியாற்றிய த.ராமலிங்கம், இப்போது டைரக்டராக புரொமோஷன் ஆகிறார். சமீபத்தில் வெளியான துல்கர்... மேலும் பார்க்க

பாக்கெட் நாவல்: மீண்டும் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி!

'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா மற்றும் நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் இணையும் புதிய திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.இயக்க... மேலும் பார்க்க

திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல்: புது நிர்வாகிகளை ஏகமனதாக தேர்வு செய்தது ஏன்? - சரண் விளக்கம்

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 2016-29க்கான தேர்தல் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் தலைவர், துணைத்தலைவர், பொருளாளர், செயலாளர் என பல்வேறு முதன்மை பொறுப்புகளுக்கு போட்டியிட்ட வே... மேலும் பார்க்க