செய்திகள் :

இந்தியில் பேச சொன்ன சூர்யா; 'எனக்கு இந்தி தெரியாது மச்சி!' என பதில் அளித்த வருண்! - வைரலாகும் வீடியோ

post image

டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது.

இந்நிலையில், அந்த பாகிஸ்தான் போட்டிக்கு முன்பான இந்திய அணியினரின் உரையாடலின் போது தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 'எனக்கு இந்தி தெரியாது' எனக் கூறியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்

பாகிஸ்தான் போட்டிக்கு முன்பாக இந்திய அணி வீரர்கள் ஜாலியாக கலந்தாலோசித்த வீடியோ ஒன்றை பிசிசிஐ வெளியிட்டிருக்கிறது.

அந்த வீடியோவில் போட்டிக்கு முன்பான கலந்துரையாடலின் போது வருண் சக்ரவர்த்தியிடம் 'இந்தியில் பேசு மச்சான் ப்ளீஸ்!' என்று சூர்யகுமார் யாதவ் சொல்கிறார். அதற்கு 'எனக்கு இந்தி தெரியாது மச்சி' என்று வருண் சக்ரவர்த்தி பதிலை அளிக்கிறார்.

தொடர்ந்து அந்த வீடியோவில் பேசியிருக்கும் வருண் சக்ரவர்த்தி, " 'ஹர்திக் பாண்ட்யாவிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

இதே மாதிரியான பெரிய போட்டிகளில் நாம் இழக்க நேரிடும் விஷயங்களைப் பற்றி யோசிக்காதீர்கள்.

வருண் சக்கரவர்த்தி
வருண் சக்கரவர்த்தி

நாம் அடையப்போகும் விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்துங்கள் எனக்கூறினார். அந்த அறிவுரை மிக முக்கியமானது' என வருண் பேசியிருந்தார்.

`ஆஸ்திரேலியாவை சிதறடித்த `அசல்' சம்பவக்காரன்' - யார் இந்த பதும் நிசாங்கா?

டி20 உலகக்கோப்பைத் தொடரின் நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது. இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய இல... மேலும் பார்க்க

SL vs Aus : ஆஸ்திரேலியாவுக்கு அடி மேல் அடி... முதல் சுற்றோடு வெளியேறுகிறதா?

ஆஸ்திரேலியா – இலங்கை அணிகளின் உலக கோப்பை போட்டி, இலங்கையின் Pallekele International Cricket Stadium மைதானத்தில் நடந்து முடிந்தது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி, இந்தப் போட்டியில் மிகப் பெரிய... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: `நட்சத்திர அந்தஸ்து மட்டுமே... ஒரு போட்டியைக்கூட வென்று தர முடியவில்லை' - சாடிய அக்தர்

இலங்கையின் கொழும்பு மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவிடம் 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. அதன் பின்னர், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கட... மேலும் பார்க்க

'எனக்கு எல்லாம் கொடுத்தது இந்த சின்னசாமி மைதானம்தான்!' - டிராவிட் நெகிழ்ச்சி

பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தின் ஒரு ஸ்டாண்டுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இது குறித்து பேசியிருக்கும் ராகுல் டிராவிட், "சின்ன... மேலும் பார்க்க

ஜடேஜா, ஜெய்ஸ்வால் இல்லை! - புதிய கேப்டன் ரியான் பராக் - அறிவிப்பை வெளியிட்ட RR

ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் தொடங்கவுள்ள நிலையில், Rajasthan Royals அணி இன்று தங்களின் புதிய கேப்டனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இளம் ஆல்ரவுண்டர் ரியான் பராக் (Riyan Parag) ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்... மேலும் பார்க்க

T20 WC: 'இந்திய அணிக்கு மட்டும் வாய்ப்பு, எங்களுக்கு?'- அதிருப்தியை வெளிப்படுத்திய நமீபியா கேப்டன்

டி20 உலககோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக, நமீபியா அணிக்கு இரவுநேரப் பயிற்சி வழங்கப்படாதது குறித்து அதன் கேப்டன் கெர்ஹார்ட் எராஸ்மஸ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார். 10வது... மேலும் பார்க்க