செய்திகள் :

தட்டில் முடி இருந்தது உண்மைதான்... ஆனா போட்டது யாரு? கேமராவைத் திருப்பிய ஹோட்டல்: Trending video

post image

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள புகழ்பெற்ற 'தி ராக்ஸ்' பகுதியில் அமைந்துள்ள ஒரு சொகுசு உணவகத்தில், கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு மோசடி அரங்கேறியுள்ளது. ஒரு நபர் தனது குடும்பத்தினருடன் அந்த உணவகத்திற்குச் சென்று, இந்திய மதிப்பில் சுமார் 30,000 ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள விலையுயர்ந்த உணவுகளை ஆர்டர் செய்து மிகவும் ருசித்துச் சாப்பிட்டார். அவரின் பில்லில் அந்த உணவகத்தின் மிகச் சிறந்த உணவாகக் கருதப்படும் 'டோமாஹாக் ஸ்டீக்' (Tomahawk steak) மற்றும் மதுபானங்களும் அடங்கும்.

சாப்பிட்டு முடித்த பின், பில் தொகையைச் செலுத்த வேண்டிய நேரத்தில் அந்த நபர் திடீரென ஒரு நாடகத்தை அரங்கேற்றினார். தான் சாப்பிட்ட தட்டில் முடி இருப்பதாகக் கூறி, உணவக ஊழியர்களிடம் ஆவேசமாக வாக்குவாதம் செய்தார். உணவின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாகவும், தன்னால் பணம் செலுத்த முடியாது என்றும் கூறிவிட்டு, தனது குடும்பத்துடன் அங்கிருந்து வெளியேறத் தொடங்கினார். ஊழியர்கள் எவ்வளவோ சமாதானம் செய்தும், அவர் மிகவும் கண்ணியமற்ற முறையில் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

இருப்பினும், அந்த நபரின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட உணவக நிர்வாகம், உடனடியாக சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தது. அப்போதுதான் அந்த அதிர்ச்சிகரமான உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. யாரும் கவனிக்காத நேரத்தில், அந்த நபர் தனது சட்டைக்குள் கையை விட்டு, தனது அக்குள் முடியைப் பிடுங்கி, அதை உணவில் போட்டது கேமராவில் மிகத் தெளிவாகப் பதிவாகியிருந்தது. இலவசமாகச் சாப்பிடுவதற்காக அந்த நபர் இவ்வளவு அருவருப்பான செயலில் ஈடுபட்டதைக் கண்டு உணவக உரிமையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து உணவக நிர்வாகம் சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்டதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் உள்ள மற்ற உணவக உரிமையாளர்களும் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர். இதே நபர் இதற்கு முன்னரும் பல உணவகங்களில், உணவில் சிறிய கற்கள் அல்லது முடி இருப்பதாகப் பொய் புகார்களைக் கூறி, பில் கட்டாமல் ஏமாற்றியது தெரியவந்துள்ளது. இந்த "சீரியல் மோசடி" நபர் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி, பொதுமக்களிடையே பெரும் கண்டனத்தைப் பெற்று வருகிறது.

திடீரென வீலிங் செய்த இளைஞர்; நிலைதடுமாறிய பின்னால் அமர்ந்திருந்த பெண்.. விபரீதத்தில் முடிந்த சாகசம்!

மும்பையின் பிரதான சாலையில் வாலிபர் ஒருவர் இளம்பெண் ஒருவரை இரு சக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு, மிதமான வேகத்தில் ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். இதனால் பின்னால் இருந்த பெண்ணும் எந்தவித முன்னெச்சரிகையும்... மேலும் பார்க்க

24வது கவின்கேர் எபிலிட்டி விருதுகள்: மாற்றத்தை உருவாக்கிய 5 மாற்று திறனாளி சாதனையாளர்களுக்கு கௌரவம்!

தடைகளைத் தாண்டி மாற்றத்தை ஊக்குவிக்கும் கதைகளை கொண்டாடும் வகையில்,கவின்கேர்நிறுவனம்எபிலிட்டி ஃபவுண்டேஷனுடன்இணைந்து24வதுகவின்கேர் எபிலிட்டி விருதுகள் 2026விழாவை ஏற்பாடு செய்தது. நாடு முழுவதும் பல்வேறு ... மேலும் பார்க்க

பிரான்ஸ் அதிபர் மெக்ரான் இந்தியா வருகை; இன்று மோடியுடன் சந்திப்பு! - முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து?

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் 3 நாள் பயணமாக இன்று அதிகாலை மும்பை வந்து சேர்ந்தார். அவரை விமான நிலையத்தில் மாநில ஆளுநர் ஆச்சாரியா, முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே, ... மேலும் பார்க்க

ரூ.60 கோடி சொத்து; வாரிசு இல்லாமல் விட்டுச்சென்ற பெண் டாக்டர் - உரிமை கோரி முட்டி மோதும் உறவுகள்

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரை சேர்ந்தவர் டாக்டர் ஹேமலதா(81). கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த டாக்டர் ஹேமலதா இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். ஆனால் அவர் இறந்த பிறகு அவர் வி... மேலும் பார்க்க

மும்பை ரயில் தண்டவாளத்தில் பட்டப்பகலில் போர்வை மூடி உறங்கிய போதை ஆசாமி! - ரயில் சேவை பாதிப்பு

மும்பை புறநகர் ரயிலில் எப்போதும் கூட்டம் அதிகமாகவே இருக்கும். ரயில் மட்டுமல்லாது மும்பை ரயில் நிலையங்களிலும் காலை, மாலை நேரத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தி... மேலும் பார்க்க

வாழ்நாள் துயரத்தில் முடிந்த Maternity Photoshoot; கவனச்சிதறலால் பறிபோன 3 வயது மகனின் உயிர்

பெங்களூருவின் ஜே.பி நகரைச் சேர்ந்தவர்கள், சுவாதி-சரண் ராஜ் தம்பதியினர். இவர்களுக்கு மூன்று வயதில் லக்ஷ்மீர் என்ற மகன் இருந்தார். சுவாதி தனது இரண்டாவது பிரசவத்திற்காகக் காத்திருந்த நிலையில், கடந்த சனிக... மேலும் பார்க்க