இந்த வார ராசிபலன் பிப்ரவரி 17 முதல் 22 வரை #VikatanPhotoCards
புதிய வேளாண் காடுகள் கொள்கை `டு' பாசன வசதி - MRK பன்னீர்செல்வம் வாசித்த வேளாண் பட்ஜெட்!
இன்று தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு, தமிழ்நாடு வேளாண் இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வேளாண் பட்ஜெட்டை தமிழ்நாடு விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
அந்த பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய பாயின்ட்டுகள்...
> வேளாண் காடுகளை ஊக்குவிக்க, 'தமிழ்நாடு வேளாண் காடுகள் கொள்கைக்கு' ஒப்புதல் அளிக்கப்பட்டு, இக்கொள்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது.

உயர்மதிப்புள்ள தேக்கு, சந்தன மரம், செம்மரம், மகோகனி போன்ற மரங்களை உழவர்கள் தயக்கமின்றி சாகுபடி செய்திட ஏதுவாக, மரங்களை வெட்டுதல், வெட்டிய மரங்களை எடுத்துச் செல்லுதல் ஆகியவற்றுக்கான விதிகளைத் தளர்த்திடவும், மரங்களை நட்டுப் பராமரிக்கத் தேவையான உதவிகள் வழங்கிடவும், திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்தவும் இக்கொள்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
> நெல் சாகுபடிப் பரப்பையும், உணவு தானிய உற்பத்தியையும் அதிகரிக்க, கடந்த ஐந்து ஆண்டுகளாக காவிரி டெல்டா பகுதிகளில் மேட்டூர் அணை குறுவை சாகுபடிக்காக குறித்த காலங்களில் திறந்துவிடப்பட்டது.
அத்துடன் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டமும் 5.482 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு, 19.51 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
> முதலமைச்சரின் 1,000 உழவர் நல சேவை மையங்கள் அமைக்கும் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.
உழவர் நல சேவை மையங்களை அமைக்கும் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மைப் பொறியியல் பட்டதாரிகள், பட்டயதாரர்களுக்கு 30 சதவிகித மானியமாக 3 லட்சம் ரூபாய் முதல் 6 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
> 'ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தில்' 15 லட்சம் காய்கறி விதைத் தொகுப்புகள், 9 லட்சம் பழச்செடித் தொகுப்புகள் மற்றும் 1 லட்சம் பயறுவகை விதைத் தளைகள் மொத்தம் 25 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.19 கோடி நிதியில் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இதனால் போதுமான அளவு காய்கறிகள், பழங்கள் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு அவற்றுக்கான தட்டுப்பாடு நேராமல் ஊட்டச்சத்துப் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

> கடந்த ஐந்து ஆண்டுகளில், இதுவரை சுமார் 2 லட்சம் புதிய இலவச மின்சார இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும், மொத்தமுள்ள 23.86 லட்சம் விவசாய மின் இணைப்புகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்குவதற்கென இத்துறையால் இதுவரை ரூ.33,904 கோடி நிதி செலவிடப்பட்டுள்ளது.
> தமிழ்நாட்டில் கூடுதலாக 3.48 லட்சம் ஹெக்டர் விவசாய நிலங்களுக்குப் பாசன வசதி கிடைத்துள்ளது.
> 10 கோடி ரூபாய் வரையிலான புதிய திட்டங்களுக்கு 25 சதவிகிதம் முதல் 35 சதவிகிம் வரை என ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
> மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில், 101 புதிய பயிர் ரகங்கள், 21 வேளாண் நுட்பங்கள், 16 புதிய பண்ணைக் கருவிகள் உழவர்களின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

> ஐந்து ஆண்டுகளில், 4 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 253 நவீன நெல் சேமிப்புத் தளங்கள் 331 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்டுள்ளன.
> வனவிலங்குகளால் குறிப்பாக காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் சேதத்திலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் விதமாக, காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்வதற்கான முறைகள் வகுக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன.
முழு பட்ஜெட்டையும் வாசிக்க...


















