செய்திகள் :

வறுமையில் விழவிருக்கும் 25 லட்சம் இந்தியர்கள், ஐ.நா எச்சரிக்கை... என்ன செய்யப்போகிறது அரசு?

post image

ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்ட அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை, இந்தியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தும் போர் ஏழு வாரங்களைக் கடந்திருக்கும் நிலையில், இன்னும் தொடர்ந்து நீடித்தால் உலகம் முழுவதும் 8.8 மில்லியன் மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள்; இந்தியாவில் 2.5 மில்லியன் மக்கள் ஏழைகளாவார்கள் என்று கூறியுள்ளது அவ்வறிக்கை.

போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதன் விளைவாக தொடர் கச்சா எண்ணெய் விலை உயர்வு, சரக்கு கப்பல்களுக்கான கட்டணங்கள் உயர்வு, உரப் பற்றாக்குறை, அந்நியச் செலாவணி இழப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளை உலக நாடுகள் சந்தித்துவருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, கச்சா எண்ணெய், எரிவாயு, விவசாயத்துக்குத் தேவையான உரப் பொருள்கள் என, இறக்குமதியையே நம்பியுள்ளது. எனவேதான், போரின் விளைவு அனைத்துப் பொருள்களின் விலைகளிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

‘இந்நிலை தொடர்ந்தால் இந்தியாவில் 25 லட்சம் பேர் வறுமையில் தள்ளப் படுவார்கள். விலைவாசி ஏற்றம், உணவுத் தட்டுப்பாடு, பஞ்சம் எனத் தலைவிரித்தாடும்’ என்று எச்சரிக்கிறது ஐ.நா. இந்தியாவில் தற்போது 23.9% ஆக இருக்கும் வறுமை விகிதம் 24.2% ஆக உயரும்; மனித வளர்ச்சிக் குறியீட்டில் (Human Development Index) 0.03 - 0.12 வரை பின்னடைவு ஏற்படும் என்று கணிக்கப் படுகிறது. ஆனால், இந்திய அரசு இது குறித்து எந்தவித ஆய்வோ, ஆலோசனையோ இதுவரை நடத்தவில்லை. பல போர்கள், நெருக்கடிகளைப் பார்த்த பிறகும் எந்தவித படிப்பினைகளையும் பெறவில்லை. இப்போதும், அரசு சூழலை எதிர்கொள்ளத் தயாராவதற்கு முன்னரே பல லட்சக்கணக்கானோர் வேலை இழப்பு, ஊதியக் குறைவு, பட்டினி என மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவார்கள் என்பதே நிலை.

ஐ.நா எச்சரிக்கையைத் தொடர்ந்து, இந்திய அரசு துணிச்சலுடன், வெளிப்படையாக, அவசரமாகச் செயல்பட வேண்டிய நேரம் இது. இறக்குமதி சார்பைக் குறைக்க உடனடியாகத் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். எங்கெல்லாம், எதிலெல்லாம் பற்றாக்குறை, நெருக்கடி ஏற்படுமோ அதைச் சமாளிக்கும் வழிகளை ஆராய வேண்டும். விலைவாசி உயர்வினால் மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். தொழில், வேலைவாய்ப்பு என மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படாத வகையில் கொள்கைகளையும், நலத்திட்டங்களையும், ஊக்குவிப்புத் திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும். உணவுப் பாதுகாப்புக் கொள்கை மூலம் பஞ்சம், பட்டினி உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அரசு இப்போதும் தன் பொறுப்புகளில் இருந்து தவறினால், எங்கோ நடக்கும் போரின் நெருப்பில் லட்சக்கணக்கான இந்தியர்களின் வயிறு தகிக்கவிருப்பதைத் தடுக்க முடியாமல் போய்விடும்.

- ஆசிரியர்

தெலங்கானா Vs பாகிஸ்தான்? - பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யாவின் பேச்சால் பரபரப்பு!

நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், மக்களவை உட்பட, இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, மத்திய அரசு இன்று தொகுதி மறுவரையறை மசோதா 2026 மக்களவையில் அறிமுகப்படுத்தியது... மேலும் பார்க்க

"தேசப்பற்றை பற்றி எங்களுக்குப் பாடம் எடுக்க வேண்டாம்.!" - பாஜக எம்.பி-க்கு பதிலடி கொடுத்த ஆ.ராசா

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யாவிற்கு திமுக எம்.பி ஆ.ராசா கொடுத்த பதிலடி இணையத்தில் வைரலாகி இருக்கிறது. நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இன்று மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்... மேலும் பார்க்க

'ஸ்டாலின் சார் மாதிரி பொய் சொல்லமாட்டோம்...' - தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விஜய்!

சென்னையிலுள்ள தனியார் விடுதியில் தவெக தலைவர் விஜய் விவாசியிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் முன்னிலையில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். தேர்தல் அறிக்கை வெளியிட்ட விஜய்பின்னர் பேசிய... மேலும் பார்க்க

"அண்ணன் மேல் ஒரேயொரு குற்றச்சாட்டுதான் இருக்கிறது; அது..!"- ஸ்டாலின் முன் பேசிய பிரேமலதா விஜயகாந்த்

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈ... மேலும் பார்க்க

'ஜனநாயகன் படத்தை லீக் செய்தது யார்?' - முக்கிய குற்றவாளியைக் கைதுசெய்த சைபர் க்ரைம்

விஜய்யின் ஜனநாயகன் படம் கடந்த சில நாள்களுக்கு முன் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியாகியிருந்தது. இது சம்பந்தமாக படக்குழு சார்பில் சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சைபர் க்ரைமின் வ... மேலும் பார்க்க