செய்திகள் :

'ஜனநாயகன் படத்தை லீக் செய்தது யார்?' - முக்கிய குற்றவாளியைக் கைதுசெய்த சைபர் க்ரைம்

post image

விஜய்யின் ஜனநாயகன் படம் கடந்த சில நாள்களுக்கு முன் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியாகியிருந்தது. இது சம்பந்தமாக படக்குழு சார்பில் சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சைபர் க்ரைமின் விசாரணையில் படத்தை லீக் செய்தது யார் என கண்டுபிடிக்கப்பட்டு, அந்த நபர் கைதும் செய்யப்பட்டிருக்கிறார்.

ஜனநாயகன்
ஜனநாயகன்

இது தொடர்பாக சைபர் க்ரைம் வெளியிட்டிருக்கும் பத்திரிகைச் செய்தியில், 'ஜனநாயகன் லீக் விவகாரமாக சைபர் க்ரைமின் விசாரணையில் ஏற்கெனவே 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று மேலும் 3 பேர் இந்த விவகாரம் சம்பந்தமாக கைது செய்யப்பட்டனர்.

படத்தை லீக் செய்ததில் முக்கியமான குற்றவாளி ஒரு ஃப்ரீலான்ஸ் எடிட்டர். அவர் வேலை பார்த்த ஸ்டூடியோவிலிருந்து ஜனநாயகன் படத்தின் காட்சிகளை திருடி, அதை சக குற்றவாளிகளுடன் பகிர்ந்திருக்கிறார். அதன் பிறகே படம் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டிருக்கிறது. இணையத்தில் பரவியிருக்கும் படத்தின் சட்டவிரோத லீக்கை பொதுமக்கள் யாரும் பகிர வேண்டாம். அது தண்டனைக்குரிய குற்றமாகும்' எனக் கூறப்பட்டிருக்கிறது.

விஜய்
ஜனநாயகன் | விஜய்

ஜனநாயகன் படம் சட்டவிரோதமாக லீக் ஆனதில் படக்குழுவும் விஜய் ரசிகர்களும் கடும் அதிருப்தியடைந்திருந்தனர். படத்தை யார் ரிலீஸ் செய்திருப்பார் எனும் குழுப்பத்திலும் இருந்தனர். இப்போது அதற்கு விடை கிடைத்துள்ளது.

தெலங்கானா Vs பாகிஸ்தான்? - பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யாவின் பேச்சால் பரபரப்பு!

நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், மக்களவை உட்பட, இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, மத்திய அரசு இன்று தொகுதி மறுவரையறை மசோதா 2026 மக்களவையில் அறிமுகப்படுத்தியது... மேலும் பார்க்க

"தேசப்பற்றை பற்றி எங்களுக்குப் பாடம் எடுக்க வேண்டாம்.!" - பாஜக எம்.பி-க்கு பதிலடி கொடுத்த ஆ.ராசா

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யாவிற்கு திமுக எம்.பி ஆ.ராசா கொடுத்த பதிலடி இணையத்தில் வைரலாகி இருக்கிறது. நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இன்று மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்... மேலும் பார்க்க

'ஸ்டாலின் சார் மாதிரி பொய் சொல்லமாட்டோம்...' - தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விஜய்!

சென்னையிலுள்ள தனியார் விடுதியில் தவெக தலைவர் விஜய் விவாசியிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் முன்னிலையில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். தேர்தல் அறிக்கை வெளியிட்ட விஜய்பின்னர் பேசிய... மேலும் பார்க்க

"அண்ணன் மேல் ஒரேயொரு குற்றச்சாட்டுதான் இருக்கிறது; அது..!"- ஸ்டாலின் முன் பேசிய பிரேமலதா விஜயகாந்த்

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈ... மேலும் பார்க்க

"என் சொந்தக் காசு 500 ரூபா போச்சு" - திமுக தேர்தல் விளம்பரத்தில் நடித்தது குறித்து 'டெலிபோன்' ராஜ்

'அடேங்கப்பா, நிறைய பண்ணிருக்கீங்களே, இந்த ஆட்சியின் சாதனைகளைச் சொல்ல சுவரே பத்தாது போல..' என நகைச்சுவை நடிகர் டெலிபோன் ராஜ் வியந்து போய் பேச‌, பின்னணியில் 'தமிழ்நாட்டின் பெருமைகள் சொல்லும் திராவிடப் ப... மேலும் பார்க்க