செய்திகள் :

"அண்ணன் மேல் ஒரேயொரு குற்றச்சாட்டுதான் இருக்கிறது; அது..!"- ஸ்டாலின் முன் பேசிய பிரேமலதா விஜயகாந்த்

post image

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று (ஏப்ரல் 15) பிரசாரம் செய்தார். இந்தப் பிரசாரத்தில் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டிருந்தார்.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

அப்போது மேடையில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "என்றைக்கு ஒரு பெண் தனியாக நடு இரவில் போகிறாளோ, அன்றைக்குத்தான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம் என்று தந்தை காந்தியடிகள் சொன்னார். இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் ஒரே ஒரு குற்றச்சாட்டுதான் அண்ணன் (முதல்வர் மு.க. ஸ்டாலின்) மேல் இருக்கிறது.

அதுவும் இந்தப் பெண்கள் கூட்டத்தில் நான் சொல்கிறேன். எங்கே பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை, போதை கலாசாரம் இருக்கிறது. இதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்? இந்த ஆட்சியின் மேல் வேறு ஒன்றும் சொல்ல முடியாது.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

ஒரு சகோதரியாக இன்றைக்கு இந்தக் கூட்டணியிலே அண்ணனுக்கு வலது கரமாக இணைந்திருக்கிறேன். எங்காவது ஒரு பெண்ணுக்கு ஏதாவது என்றால்... நான் அண்ணனிடம் (மு.க.ஸ்டாலின்) உரிமையாகப் பேசுவேன்" என்று பேசியிருக்கிறார். ஸ்டாலின் மேடையில் இருக்கும்போதே பிரேமலதா விஜயகாந்த் இவ்வாறு பேசியது, இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

தெலங்கானா Vs பாகிஸ்தான்? - பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யாவின் பேச்சால் பரபரப்பு!

நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், மக்களவை உட்பட, இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, மத்திய அரசு இன்று தொகுதி மறுவரையறை மசோதா 2026 மக்களவையில் அறிமுகப்படுத்தியது... மேலும் பார்க்க

"தேசப்பற்றை பற்றி எங்களுக்குப் பாடம் எடுக்க வேண்டாம்.!" - பாஜக எம்.பி-க்கு பதிலடி கொடுத்த ஆ.ராசா

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யாவிற்கு திமுக எம்.பி ஆ.ராசா கொடுத்த பதிலடி இணையத்தில் வைரலாகி இருக்கிறது. நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இன்று மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்... மேலும் பார்க்க

'ஸ்டாலின் சார் மாதிரி பொய் சொல்லமாட்டோம்...' - தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விஜய்!

சென்னையிலுள்ள தனியார் விடுதியில் தவெக தலைவர் விஜய் விவாசியிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் முன்னிலையில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். தேர்தல் அறிக்கை வெளியிட்ட விஜய்பின்னர் பேசிய... மேலும் பார்க்க

'ஜனநாயகன் படத்தை லீக் செய்தது யார்?' - முக்கிய குற்றவாளியைக் கைதுசெய்த சைபர் க்ரைம்

விஜய்யின் ஜனநாயகன் படம் கடந்த சில நாள்களுக்கு முன் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியாகியிருந்தது. இது சம்பந்தமாக படக்குழு சார்பில் சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சைபர் க்ரைமின் வ... மேலும் பார்க்க

"என் சொந்தக் காசு 500 ரூபா போச்சு" - திமுக தேர்தல் விளம்பரத்தில் நடித்தது குறித்து 'டெலிபோன்' ராஜ்

'அடேங்கப்பா, நிறைய பண்ணிருக்கீங்களே, இந்த ஆட்சியின் சாதனைகளைச் சொல்ல சுவரே பத்தாது போல..' என நகைச்சுவை நடிகர் டெலிபோன் ராஜ் வியந்து போய் பேச‌, பின்னணியில் 'தமிழ்நாட்டின் பெருமைகள் சொல்லும் திராவிடப் ப... மேலும் பார்க்க