செய்திகள் :

பாகிஸ்தான்: `நட்சத்திர அந்தஸ்து மட்டுமே... ஒரு போட்டியைக்கூட வென்று தர முடியவில்லை' - சாடிய அக்தர்

post image

இலங்கையின் கொழும்பு மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவிடம் 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. அதன் பின்னர், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கடுமையான கருத்துகளை முன்வைத்திருக்கிறார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தையும், அணியின் மூத்த வீரர்களையும் அவர் நேரடியாகக் குறிவைத்து கடுமையாகச் சாடியுள்ளார்.

'நட்சத்திர அந்தஸ்து மட்டுமே… வெற்றி எங்கே?'

2026 டி20 உலகக் கோப்பை குரூப் 'ஏ' போட்டியில் இந்தியா 175 ரன்கள் குவிக்க, அதனைத் தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 114 ரன்களில் ஆல்-அவுட் ஆகி தோல்வியடைந்தது.

இந்தத் தோல்விக்குப் பிறகு நேரலைத் தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய அக்தர்,

"Babar Azam, Shaheen Afridi, Shadab Khan போன்ற மூத்த வீரர்கள் முக்கியமான போட்டிகளில் தொடர்ந்து சொதப்புகிறார்கள். ஆனாலும் இவர்களுக்கு ஏன் தொடர்ந்து ஆதரவு? பெரிய நட்சத்திரங்களாகக் கொண்டாடுகிறீர்கள்… ஆனால் ஒரு போட்டியைக்கூட வென்று தர முடியவில்லை!" எனக் கேள்வி எழுப்பினார்.

சோயிப் அக்தர்

இதோடு நிற்காமல், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரையும் அவர் விட்டுவைக்கவில்லை.

Pakistan Cricket Board தலைவர் Mohsin Naqvi குறித்து பேசுகையில்,

"உலகிலேயே மிகப்பெரிய குற்றம் என்ன தெரியுமா? தகுதி இல்லாத ஒருவரிடம் மிகப்பெரிய பொறுப்பை ஒப்படைப்பது. திறமை இல்லாதவரிடம் பதவி கொடுத்தால், அவர் அந்த அமைப்பையே அழித்துவிடுவார்!" என்று கடுமையாக விமர்சித்தார்.

இந்தியாவிடம் தொடர்ந்து அடிவாங்கும் பாகிஸ்தான் அணியின் நிலைமைக்கு, வீரர்களைவிட நிர்வாகமே அதிக பொறுப்பு ஏற்க வேண்டும் என வலியுறுத்திய அக்தர்,

"பதவியின் முக்கியத்துவம் தெரியாதவர்களிடம் அதிகாரம் கொடுத்தால் விளைவுகள் இப்படித்தான் இருக்கும்" என்று வேதனை தெரிவித்தார்.

இந்தியாவிடம் ஏற்பட்ட அவமானகரமான தோல்வியும், அதனைத் தொடர்ந்து சோயப் அக்தர் முன்வைத்த இந்தக் கடும் விமர்சனங்களும், தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன.!

'எனக்கு எல்லாம் கொடுத்தது இந்த சின்னசாமி மைதானம்தான்!' - டிராவிட் நெகிழ்ச்சி

பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தின் ஒரு ஸ்டாண்டுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இது குறித்து பேசியிருக்கும் ராகுல் டிராவிட், "சின்ன... மேலும் பார்க்க

ஜடேஜா, ஜெய்ஸ்வால் இல்லை! - புதிய கேப்டன் ரியான் பராக் - அறிவிப்பை வெளியிட்ட RR

ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் தொடங்கவுள்ள நிலையில், Rajasthan Royals அணி இன்று தங்களின் புதிய கேப்டனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இளம் ஆல்ரவுண்டர் ரியான் பராக் (Riyan Parag) ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்... மேலும் பார்க்க

T20 WC: 'இந்திய அணிக்கு மட்டும் வாய்ப்பு, எங்களுக்கு?'- அதிருப்தியை வெளிப்படுத்திய நமீபியா கேப்டன்

டி20 உலககோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக, நமீபியா அணிக்கு இரவுநேரப் பயிற்சி வழங்கப்படாதது குறித்து அதன் கேப்டன் கெர்ஹார்ட் எராஸ்மஸ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார். 10வது... மேலும் பார்க்க

தொழிலதிபரைக் கரம்பிடிக்கும் சச்சின் டெண்டுல்கர் மகன்! - யார் இந்த சானியா சந்தோக்?

சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கும், இளம் தொழிலதிபர் சானியா சந்தோக்-குக்கும், மும்பையில் அடுத்த (மார்ச்)மாதம் 5 ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, அடுத்த மாதம் 3 ஆம் தேதி... மேலும் பார்க்க

T20 WC: பாகிஸ்தான் வீரரின் பந்து வீச்சு; கிளம்பும் எதிர்ப்புகள் - ஆதரிக்கும் அஷ்வின்

கொழும்புவில் நடைபெற்ற அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில், உஸ்மான் டரிக் பந்துவீசிய விதம், தற்போது பேசுப்பொருளாக மாறியிருக்கிறது. பேசுப்பொருளான உஸ்மான் டரிக் பந்துவீச்சு உஸ்மான் டரிக், பந்துவீச வரும்போ... மேலும் பார்க்க

IPL 2026: தோனி ஓய்வு; விசில் தடை குறித்த கேள்விகள்; காசி விஸ்வநாதன் அளித்த பதில் என்ன?

19-வது ஐ.பி.எல் சீசன் வரும் மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது. எப்போதும் அனுபவம் வாய்ந்த வீரர்களை எடுக்கும் சிஎஸ்கே இந்த முறை இளம் வீரர்களை ஏலத்தில் அதிகமாக எடுத்திருக்கிறது. இந்நிலையில் சிஎஸ்கே ceo காசி... மேலும் பார்க்க