செய்திகள் :

விருதுநகர்: உரிமைத்தொகையை செலவு செய்ததால் கோபித்த மனைவி; விபரீத முடிவெடுத்த கணவரால் சோகம்!

post image

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள நெடுங்குளத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரின் மனைவி ராமு. இவரது வங்கிக் கணக்கில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை ரூ.3 ஆயிரம் மற்றும் கோடைகால சிறப்பு நிதி ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது. இந்த ரூ.5 ஆயிரம் பணத்தை மனைவி ராமுவிற்கு தெரியாமல் ஏ.டி.எம் கார்டு மூலம் எடுத்து செலவு செய்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

கூமாபட்டி காவல் நிலையம்

இதனையடுத்து மனைவி ராமு, ஈஸ்வரனிடம் பணம் எடுத்தது குறித்துகேட்டதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக் கொண்ட ராமு, தனது தாய்வீட்டிற்குச் சென்றுவிட்டாராம். இதனால், மனவேதனையில் இருந்த ஈஸ்வரன், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து கூமாபட்டி காவல் நிலைய போலீஸார் வழக்குபதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

ராமநாதபுரம்: ஒரு தலை காதல் தொல்லை; உயிரை மாய்த்த மாணவி; மாணவரை கைதுசெய்ய குடும்பத்தினர் கோரிக்கை!

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் கோகுல் நகரைச் சேர்ந்த தம்பதியின் மகள், அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அதே பள்ளியில் அதே வகுப்பில் படித்த மாணவர் ஒருவ... மேலும் பார்க்க

`மகனிடம் சேரப் போகிறோம்' - பெற்றோரின் உருக்கமான கடிதம் - சோகத்தில் ஆழ்ந்த கிராமம்!

சத்தீஸ்கர் மாநிலம், ஜான்ஜ்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ளது தார்தேய் (Dhardei) கிராமம். இங்கு கிருஷ்ணா படேல் (48), அவர் மனைவி ரமா பாய் (47) ஆகியோர் வசித்து வந்தனர். இந்த நிலையில், இன்று காலை வீட்டு முற்ற... மேலும் பார்க்க

Taapsee Pannu: ``தினமும் 80 பாலியல் குற்றங்கள்... நாம் பழகிவிட்டோம்" - நடிகை டாப்ஸி பண்ணு ஆவேசம்!

பீகார் மாநிலம், பாட்னாவில் நீட் தேர்வுக்காகத் தயாராகி வந்த 17 வயது மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜஹானாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த ம... மேலும் பார்க்க

நடத்தையில் சந்தேகம்: காதலர் தின விருந்தில் மனைவியைக் கொன்றுவிட்டு நாடகம் - கணவன் சிக்கியது எப்படி?

ஹரியானா மாநிலம், குருகிராம் பஹதுர்கர் பகுதியைச் சேர்ந்த மஹக் என்ற பெண் இரண்டு நாள்களுக்கு முன்பு காதலர் தின இரவில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். மஹக் பிரபல தனியார் வங்கியில் பணியாற்றி வந்தா... மேலும் பார்க்க

சென்னை: கணவன், மனைவியைக் கொலை செய்த பக்கத்து வீட்டுக்காரர் - திருமணம் மீறிய உறவால் விபரீதம்

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் என்கிற பார்த்தசாரதி(42). இவரின் மனைவி ஜமுனா(35). இவர்களது எதிர் வீட்டில் சுசில் (32), அவரின் மனைவி கிரிஜா(29) ஆகி... மேலும் பார்க்க

ஆவியிடம் மன்னிப்பு; காதலியை கொலை செய்து பிணத்துடன் உறவு - மும்பையில் பதுங்கி இருந்த காதலன்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் எம்.பி.ஏ. படித்து வந்த 24 வயது பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது காதலன் பியூஷ் வீட்டில் கொலை செய்யப்பட்டு நிர்வாணமாக கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் கண்டுபி... மேலும் பார்க்க