செய்திகள் :

"தென்னிந்தியர் என்பதால் என்னைக் கிண்டலடித்தார்கள்" - பாலிவுட் பாகுபாடு குறித்து ரெஜினா கசாண்ட்ரா

post image

நடிகை ரெஜினா கசாண்ட்ரா தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் 'Hindustan Times' ஊடகத்திற்குப் பேட்டி அளித்திருக்கும் ரெஜினா கசாண்ட்ரா பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு எதிராகக் காட்டப்படும் பாகுபாடுகள் குறித்து பேசியிருக்கிறார்.

இதுதொடர்பாகப் பேசிய அவர், "எனக்கு இந்தி எழுத, படிக்க, பேசத் தெரியும். இதுவரை இந்தி மொழியில் நான் நடித்த படங்களுக்கு எனது சொந்தக் குரலிலேயே டப்பிங் பேசியிருக்கிறேன்.

ரெஜினா கசாண்ட்ரா
ரெஜினா கசாண்ட்ரா

ஆனால் தென்னிந்தியாவில் இருந்து பாலிவுட் வந்தவர் என்பதால் எனது மொழி உச்சரிப்பு மற்றும் பின்னணி குறித்து கிண்டல் செய்து என்னைச் சிறுமைப்படுத்தினார்கள்.

திரைத்துறையில் அனுபவம் வாய்ந்த என்னை ஒரு புதிய நடிகையைப் போல நடத்தினார்கள்.

இந்தி நடிகர்களின் கண்டிப்பான நடவடிக்கையை ‘நேர்மை’ என்று சொல்கிறார்கள்.

ஆனால், அதே செயலை தென்னிந்திய நடிகர்கள் செய்தால் ‘தலைக்கனம் பிடித்தவர்கள்’ என்று முத்திரை குத்துகிறார்கள்.

மும்பையில் பணியாற்றினாலும் எனது வீடும் இதயமும் தென்னிந்திய சினிமாவிலேயே உள்ளன" என்று கூறியிருக்கிறார்.

சேயோன்: 'அன்று கல்லூரி சீனியர்; இன்று இசையமைப்பாளர்'; SK - SANA 24 வருட நட்பு பற்றித் தெரியுமா?

திருச்சியில் இருக்கும் ஜே.ஜே. பொறியியல் கல்லூரி பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். அக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள்தாம் இன்று தமிழ் சினிமாவின் முக்கிய முகங்களாக இருக்கிறார்கள். சிவகார்த்திகேய... மேலும் பார்க்க

மீண்டும் ரியோ படத்தை தயாரிக்கும் சிவகார்த்திகேயன்; இயக்குநராகும் எஸ்.கே உறவினர் - முழு தகவல்!

இப்போது படங்களில் மிகவும் பிஸியாக இருக்கும் சிவகார்த்திகேயன், அதே வேகத்தை படங்களில் தயாரிப்பிலும் காட்டி வருகிறார். தன்னிடம் விஜய் டிவி காலங்களில் நெருக்கமாக பழகிய நண்பர்களுக்கு உதவும் விதமாகவும் அந்த... மேலும் பார்க்க

டோலிவுட்டில் தடம் பதிக்கும் கார்த்தி; ரெடியாகும் சர்தார் 2 டீசர்; 'மார்ஷல்' கிளைமாக்ஸ்! - அப்டேட்!

கார்த்தியின் 'மார்ஷல்' படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை நோக்கி செல்வதால், அவரது அடுத்த படம் குறித்த பேச்சுக்கள் கிளம்பியிருக்கின்றன. 'வா வாத்தியார்' படத்தை அடுத்து திரைக்கு வரும் படமாக 'சர்தார் 2' ரெடியாக... மேலும் பார்க்க

பிப்ரவரியில் திரைக்கு வந்த மற்றும் வரவிருக்கும் ரீ ரிலீஸ் படங்களின் புகைப்பட தொகுப்பு!| Photo Album

‘கில்லி’ From Feb 20‘துணிவு’ From Feb 20‘சூது கவ்வும்’ From Feb 20‘தெறி’ From Feb 27‘அமைதிப்படை’ Upcoming‘தம்பி’ Upcoming‘உயிருள்ளவரை உஷா’ Released‘மௌனம் பேசியதே’ Released‘மின்னலே’ Released‘காதலர் தின... மேலும் பார்க்க

Sarvam Maya: 'மட்டற்ற மகிழ்ச்சியில் இருக்கிறேன்' ; வாழ்த்திய சூர்யா,ஜோதிகா - நெகிழ்ச்சியில் ரியா

'சர்வம் மாயா' படத்தைப் பாராட்டி நடிகை ரியா ஷிபுவுக்கு சூர்யா - ஜோதிகா வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர். நிவின் பாலி, அஜூ வர்கீஸ், ரியா ஷிபு, பிரீத்தி முகுந்தன் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் 'சர்வம் மா... மேலும் பார்க்க