செய்திகள் :

விஐடி பல்கலைக்கழகத்தில் ஜிஎஸ்டி வரி விழிப்புணர்வு மாநாடு!

post image

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில், இந்திய பட்டய கணக்காளர் சங்கத்தின் வேலூர் கிளை சார்பில், “ஜிஎஸ்டி விதிமுறைகளை கையாளுதல் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துதல்” என்ற தலைப்பில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விழிப்புணர்வு மாநாடு இன்று நடைபெற்றது.

புதுடெல்லி ஐசிஏஐ மத்திய கவுன்சில் உறுப்பினர் பி.ராஜேந்திர குமார் சிறப்பு விருந்தினராக காணொலி வாயிலாகப் பங்கேற்று, ஜிஎஸ்டி துறையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்கள் குறித்து விளக்கி பேசினார்.

மாநாட்டிற்கு தலைமை வகித்து விஐடி பல்கலைக்கழக செயல் இயக்குநர் சந்தியா பென்டாரெட்டி பேசும்போது, “ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக, கல்வி நிறுவனங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் போது விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியானது, மாணவர்கள் செலுத்தும் கல்விக்கட்டணத்தில் பிரதிபலிக்க வாய்ப்புள்ளது" என்றார்.

கவுரவ விருந்தினராக கலந்து கொண்டு, வேலூர் கோட்ட ஜிஎஸ்டி உதவி ஆணையர் டி.பி. சுரேஷ் பேசும்போது, “நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஜிஎஸ்டி முக்கியப் பங்காற்றி வருகிறது. வருங்காலத் தலைமுறையினர் ஜிஎஸ்டி வரி நடைமுறைகளை தெளிவாக புரிந்து கொள்வது அவசியமாகும்” என்றார்.

மாநாட்டில் வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தொழில்முறை வல்லுநர்கள், 1000-க்கும் மேற்பட்ட வணிகவியல் துறை மாணவர்கள், 50 பட்டய கணக்காளர் சங்க மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், விஐடி சமூக அறிவியல் மற்றும் மொழிகள் துறை முதன்மையர் வி.செல்வம், இணை முதன்மையர் சரிகா குப்தா, வணிகவியல் துறை தலைவர் எஸ்.உஷா ஆகியோர் பங்கேற்றனர்.

"பிள்ளைகளின் படிப்புக்காகத்தான்" - மணியடித்தவுடன் மொபைல், டிவி ஆஃப்; வைரலாகும் மகாராஷ்டிரக் கிராமம்!

மொபைல் போன்களின் பயன்பாடு அதிகரித்த பிறகு சிறார்கள் அனைவரின் கையிலும் மொபைல் போனைப் பார்க்க முடிகிறது. இதனால் அவர்களது படிப்புக்கு மொபைல் போன்கள் தடையாக இருக்கின்றன.போன் பார்க்காமல் குழந்தைகள் படித்து... மேலும் பார்க்க

சிதைந்த மில்லியன் டாலர் கனவு; ரீல்ஸ் மோகத்தில் கார் ஏற்றிக் கொன்ற சிறுவன்; தாயின் தீராத வேதனை!

டெல்லி துவாரகா பகுதியில் நடந்த கோரமான கார் விபத்து, ஒரு குடும்பத்தின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் சிதைத்துள்ளது. 23 வயதான சாஹில் தனேஸ்ராஎன்ற இளைஞர், சிறுவன் ஒருவன் ஓட்டி வந்த ஸ்கார்பியோ கார் மோதி உயிரி... மேலும் பார்க்க

தட்டில் முடி இருந்தது உண்மைதான்... ஆனா போட்டது யாரு? கேமராவைத் திருப்பிய ஹோட்டல்: Trending video

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள புகழ்பெற்ற 'தி ராக்ஸ்' பகுதியில் அமைந்துள்ள ஒரு சொகுசு உணவகத்தில், கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு மோசடி அரங்கேறியுள்ளது. ஒரு நபர் தனது குடும்பத்தினருடன் அந்த உணவக... மேலும் பார்க்க

திடீரென வீலிங் செய்த இளைஞர்; நிலைதடுமாறிய பின்னால் அமர்ந்திருந்த பெண்.. விபரீதத்தில் முடிந்த சாகசம்!

மும்பையின் பிரதான சாலையில் வாலிபர் ஒருவர் இளம்பெண் ஒருவரை இரு சக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு, மிதமான வேகத்தில் ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். இதனால் பின்னால் இருந்த பெண்ணும் எந்தவித முன்னெச்சரிகையும்... மேலும் பார்க்க

24வது கவின்கேர் எபிலிட்டி விருதுகள்: மாற்றத்தை உருவாக்கிய 5 மாற்று திறனாளி சாதனையாளர்களுக்கு கௌரவம்!

தடைகளைத் தாண்டி மாற்றத்தை ஊக்குவிக்கும் கதைகளை கொண்டாடும் வகையில்,கவின்கேர்நிறுவனம்எபிலிட்டி ஃபவுண்டேஷனுடன்இணைந்து24வதுகவின்கேர் எபிலிட்டி விருதுகள் 2026விழாவை ஏற்பாடு செய்தது. நாடு முழுவதும் பல்வேறு ... மேலும் பார்க்க

பிரான்ஸ் அதிபர் மெக்ரான் இந்தியா வருகை; இன்று மோடியுடன் சந்திப்பு! - முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து?

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் 3 நாள் பயணமாக இன்று அதிகாலை மும்பை வந்து சேர்ந்தார். அவரை விமான நிலையத்தில் மாநில ஆளுநர் ஆச்சாரியா, முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே, ... மேலும் பார்க்க