செய்திகள் :

சேயோன்: 'அன்று கல்லூரி சீனியர்; இன்று இசையமைப்பாளர்'; SK - SANA 24 வருட நட்பு பற்றித் தெரியுமா?

post image

திருச்சியில் இருக்கும் ஜே.ஜே. பொறியியல் கல்லூரி பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். அக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள்தாம் இன்று தமிழ் சினிமாவின் முக்கிய முகங்களாக இருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயனின் கல்லூரி நண்பர்கள்
சிவகார்த்திகேயனின் கல்லூரி நண்பர்கள்

நடிகர் சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ், இயக்குநர் அருண்ராஜா காமராஜ், பாடலாசிரியர் முத்தமிழ், நடிகர்கள் கோபி மற்றும் சுதாகர் உள்ளிட்ட பலரும் இந்தக் கல்லூரியில் படித்தவர்கள்தான்.

நடிகர் சிவகார்த்திகேயனும் சில நேர்காணல்களில் அருண்ராஜா காமராஜ் மற்றும் திபு நினன் தாமஸ் உடனான நட்பு பற்றி பேசியிருக்கிறார்.

நேற்றைய தினம் சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்து பதிவிட்டிருந்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மனைவி மீனாட்சி சந்தோஷ் நாராயணன், “சிவா மற்றும் சந்தோஷ் நாராயணனின் 24 வருட நட்பைக் கொண்டாடுகிறோம்” எனவும் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.

24 வருட நண்பர்களாக இருப்பவர்கள், சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'சேயோன்' படத்தில் முதல் முறையாக இணைந்து பணிபுரிகிறார்கள்.

சந்தோஷ் நாராயணன், சிவகார்த்திகேயனின் கல்லூரி சீனியர். இதனை சிவகார்த்திகேயனும் இன்று நன்றி தெரிவித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். இப்போது, அவர்களுடைய கல்லூரி நாட்களுக்கு ஒரு குட்டி ரீவைண்ட் போவோமா...

Sivakarthikeyan & Santhosh Narayanan
Sivakarthikeyan & Santhosh Narayanan

கல்லூரி நாட்களில், கல்சுரல்ஸ் நிகழ்வுகளில் சந்தோஷ் நாராயணன் முதலில் புல்லாங்குழல் வாசிப்பாராம். அப்படி நண்பர்கள் குழுவோடு சேர்ந்து பெர்ஃபார்ம் செய்யும்போது அங்கிருந்து மியூசிக்கையும் முழுமையாகக் கற்றுக்கொண்டாராம் சந்தோஷ் நாராயணன்.

சந்தோஷ் நாராயணன் மட்டுமல்ல, அக்கல்லூரி கல்சுரல்ஸ் நிகழ்வுகளில் தூள் கிளப்பிய பலரும் இன்று சினிமாவுக்கு வந்துவிட்டார்கள். சிவகார்த்திகேயனும் சில நேர்காணல்களில் அவர்களுடைய கல்லூரி நாட்களில் அவர் செய்த மிமிக்ரி நிகழ்வுகள் குறித்துப் பேசியிருப்பார்.

சிவகார்த்திகேயன், அருண்ராஜா காமராஜ் ஆகியோர் மிமிக்ரி போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த, சந்தோஷ் நாராயணன், திபு நினன் தாமஸ், முத்தமிழ் எனப் பலரும் மியூசிக்கில் பெர்ஃபார்ம் செய்திருக்கிறார்கள்.

கல்லூரியில், சந்தோஷ் நாராயணனுக்கு அடுத்தடுத்த பேட்ச்களில் படித்தவர்கள்தான் சிவகார்த்திகேயன், திபு நினன் தாமஸ், அருண்ராஜா காமராஜ்.

கல்லூரி கல்சுரல்ஸ் நிகழ்வுகளைத் தாண்டி சினிமாவுக்கு வந்த பிறகு சிவகார்த்திகேயன், அருண்ராஜா காமராஜ், சந்தோஷ் நாராயணன், முத்தமிழ் என நால்வரும் இணைந்து சுயாதீன ஆல்பம் ஒன்றைத் தயார் செய்திருக்கிறார்கள்.

'இதம்' எனப் பெயரிடப்பட்ட அந்தச் சுயாதீன ஆல்பம் வெளியிடப்படவில்லை. முத்தமிழ், அருண்ராஜா காமராஜ் பாடல் எழுத, சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, அதில் சிவகார்த்திகேயன் பெர்ஃபார்ம் செய்ய என அப்பாடலை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால், அப்பாடல் அதன் பிறகு வெளியிடப்படவில்லை.

இன்று சந்தோஷ் நாராயணன் - சிவகார்த்திகேயன் கூட்டணி 'சேயோன்' படத்திற்காக ஒன்றிணைந்திருக்கிறது!

"தென்னிந்தியர் என்பதால் என்னைக் கிண்டலடித்தார்கள்" - பாலிவுட் பாகுபாடு குறித்து ரெஜினா கசாண்ட்ரா

நடிகை ரெஜினா கசாண்ட்ரா தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் சமீபத்தில் 'Hindustan Times' ஊடகத்திற்குப் பேட்டி அளித்திருக்கும் ரெஜினா கசாண்ட்ரா பாலிவுட்டில் தென்... மேலும் பார்க்க

மீண்டும் ரியோ படத்தை தயாரிக்கும் சிவகார்த்திகேயன்; இயக்குநராகும் எஸ்.கே உறவினர் - முழு தகவல்!

இப்போது படங்களில் மிகவும் பிஸியாக இருக்கும் சிவகார்த்திகேயன், அதே வேகத்தை படங்களில் தயாரிப்பிலும் காட்டி வருகிறார். தன்னிடம் விஜய் டிவி காலங்களில் நெருக்கமாக பழகிய நண்பர்களுக்கு உதவும் விதமாகவும் அந்த... மேலும் பார்க்க

டோலிவுட்டில் தடம் பதிக்கும் கார்த்தி; ரெடியாகும் சர்தார் 2 டீசர்; 'மார்ஷல்' கிளைமாக்ஸ்! - அப்டேட்!

கார்த்தியின் 'மார்ஷல்' படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை நோக்கி செல்வதால், அவரது அடுத்த படம் குறித்த பேச்சுக்கள் கிளம்பியிருக்கின்றன. 'வா வாத்தியார்' படத்தை அடுத்து திரைக்கு வரும் படமாக 'சர்தார் 2' ரெடியாக... மேலும் பார்க்க

பிப்ரவரியில் திரைக்கு வந்த மற்றும் வரவிருக்கும் ரீ ரிலீஸ் படங்களின் புகைப்பட தொகுப்பு!| Photo Album

‘கில்லி’ From Feb 20‘துணிவு’ From Feb 20‘சூது கவ்வும்’ From Feb 20‘தெறி’ From Feb 27‘அமைதிப்படை’ Upcoming‘தம்பி’ Upcoming‘உயிருள்ளவரை உஷா’ Released‘மௌனம் பேசியதே’ Released‘மின்னலே’ Released‘காதலர் தின... மேலும் பார்க்க

Sarvam Maya: 'மட்டற்ற மகிழ்ச்சியில் இருக்கிறேன்' ; வாழ்த்திய சூர்யா,ஜோதிகா - நெகிழ்ச்சியில் ரியா

'சர்வம் மாயா' படத்தைப் பாராட்டி நடிகை ரியா ஷிபுவுக்கு சூர்யா - ஜோதிகா வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர். நிவின் பாலி, அஜூ வர்கீஸ், ரியா ஷிபு, பிரீத்தி முகுந்தன் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் 'சர்வம் மா... மேலும் பார்க்க