செய்திகள் :

சென்னை: எக்மோர் ஸ்டேஷனில் இருந்து ரயிலில் பயணிப்பவரா நீங்கள்? - இதுவெல்லாம் மாறுகிறது கவனிங்க!

post image

சென்னை எக்மோர் ரயில் நிலையத்திலிருந்து பயணிப்பவரா நீங்கள்...

எக்மோர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன. அதனால், வரும் 20-ம் தேதி முதல், எக்மோர் ரயில் நிலையத்தில் சில மாற்றங்கள் வர உள்ளன.

அவை என்னென்ன என்று தெரிந்துகொள்வோம்...

"வழக்கமாக, பிளாட்ஃபார்ம் 10 மற்றும் 11-ல் இருந்து கிளம்பும் புறநகர் மின்சார ரயில்கள் இனி பிளாட்ஃபார்ம் 5 மற்றும் 6-ல் இருந்து கிளம்பும்.

எக்மோர் வழியாக சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் ரயில்கள் பிளாட்ஃபார்ம் 6-ல் இருந்து இயக்கப்படும்.

ரயில் நிலையம் - பிளாட்ஃபார்ம்
ரயில் நிலையம் - பிளாட்ஃபார்ம்

எக்மோர் வழியாக அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நிலையம் வரை செல்லும் ரயில்கள் பிளாட்ஃபார்ம் 5-ல் இருந்து இயக்கப்படும்.

பிளாட்ஃபார்ம் 5 மற்றும் 6 எக்ஸ்பிரஸ் லைன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நடைமுறைகள் அனைத்தும் வருகிற பிப்ரவரி 20-ம் தேதியில் இருந்து ஏப்ரல் 5-ம் தேதி வரை (45 நாள்கள்) தொடரும்".

இந்த நடைமுறைகளின் போது, ரயில்களின் நேரங்கள் மாற்றப்படுகின்றன. அதன் விவரம் இதோ...

மாற்றப்பட்ட நேர அட்டவணை
மாற்றப்பட்ட நேர அட்டவணை
மாற்றப்பட்ட நேர அட்டவணை
மாற்றப்பட்ட நேர அட்டவணை

Bharat Taxi: ஓலா, ஊபருக்கு போட்டியாக களமிறங்கும் மத்திய அரசின் ஆப்; இதில் நமக்கு என்ன பயன்?

ஓலா, ஊபர், ரேப்பிடோவிற்கு மாற்று 'பாரத் டாக்ஸி'.இது மத்திய அரசின் ஆப். இதில் ஓலா, ஊபர், ரேப்பிடோ மாதிரி கால் டாக்ஸி, ஆட்டோ, பைக் போன்றவற்றைப் புக் செய்யலாம்.இந்த ஆப் கடந்த 5-ம் தேதியில் இருந்து டெல்லி... மேலும் பார்க்க

Fastag: 'ஸ்கேன்' பிரச்னை இனி இல்லை; ஃபாஸ்ட் டேக்-ல் அமலாகிய புதிய நடைமுறை - விவரம் என்ன?

டோல் பிளாசாவில் நின்றுகொண்டிருப்போம். நமக்குப் பின்னால் 7 - 8 வாகனங்கள் இருக்கும். இதோ ஃபாஸ்ட் டேக் ஸ்கேன் செய்தால், கிளம்பிடலாம் என்று நினைக்கும்போதுதான்... அந்தச் சம்பவம் நடக்கும். அதாவது ஃபாஸ்ட் டே... மேலும் பார்க்க