செய்திகள் :

சிதைந்த மில்லியன் டாலர் கனவு; ரீல்ஸ் மோகத்தில் கார் ஏற்றிக் கொன்ற சிறுவன்; தாயின் தீராத வேதனை!

post image

டெல்லி துவாரகா பகுதியில் நடந்த கோரமான கார் விபத்து, ஒரு குடும்பத்தின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் சிதைத்துள்ளது. 23 வயதான சாஹில் தனேஸ்ரா என்ற இளைஞர், சிறுவன் ஒருவன் ஓட்டி வந்த ஸ்கார்பியோ கார் மோதி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சாஹில் வெறும் 23 வயது இளைஞர் மட்டுமல்ல; அவர் தனது தாயின் ஒரே நம்பிக்கை. பிபிஏ இறுதி ஆண்டு படித்து வந்த சாஹில், தனது கடின உழைப்பால் இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயில இடம் கிடைத்திருந்தார். இந்த ஆண்டு இறுதியில் அவர் வெளிநாடு செல்லவிருந்தார். "எனது மகன் மிகவும் திறமையானவன், தனது மேற்படிப்புக்கான விண்ணப்பங்கள் அனைத்தையும் அவனாகவே கவனித்துக் கொண்டான். பகுதி நேர வேலை செய்து தனது படிப்பிற்குத் தேவையான உதவிகளைச் செய்து வந்தான்" என்று அவரின் தாய் வேதனையுடன் கூறுகிறார். சாஹில் அறையின் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த ஊக்கமளிக்கும் வாசகங்களும், மெடல்களும் அவரின் லட்சிய வெறியைப் பறைசாற்றுகின்றன. அதில் "My $1,000,000 Year" என்று பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தது. அதாவது, தனது கடின உழைப்பால் ஆண்டுக்கு 10 லட்சம் டாலர் ஈட்டும் நிலைக்கு உயர வேண்டும் என்பதே அந்த இளைஞனின் லட்சியமாக இருந்துள்ளது.

சாஹிலை ஒரு ஒற்றைப் பெற்றோராக போராடி வளர்த்த அவரது தாய் இன்னா மக்கான், சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வீடியோ பார்ப்பவர் நெஞ்சை உலுக்குகிறது. "23 வருடம் ஒரு தாயாக நான் கஷ்டப்பட்டு வளர்த்த என் மகனை, வெறும் சில வினாடி ரீல்ஸ் மோகத்திற்காக ஒரு சிறுவன் கொன்றுவிட்டான். அந்த ஸ்கார்பியோ கார் அதிவேகத்தில் தவறான திசையில் வந்து என் மகனை மோதியது. அவன் ரத்த வெள்ளத்தில் கிடந்தபோது உதவிக்குக் கூட யாரும் வரவில்லை. ஆம்புலன்ஸ் அங்கு நின்றும் கூட, நான் 10 நிமிடங்கள் கத்திய பிறகுதான் அவனைத் தூக்கினார்கள்" என்று அவர் கண்ணீர் மல்கக் கூறுகிறார்.

விபத்தை ஏற்படுத்திய சிறுவன், தனது சகோதரியுடன் சேர்ந்து சமூக வலைதளங்களுக்காக 'ஸ்டண்ட் ரீல்ஸ்' எடுத்துக் கொண்டு காரை ஓட்டியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. அந்த ஸ்கார்பியோ கார் மீது ஏற்கனவே 13 முறை அதிவேகமாகச் சென்றதற்கான அபராதங்கள் விதிக்கப்பட்டிருந்தும், அந்த சிறுவனின் தந்தை தனது மகனுக்கு காரைக் கொடுத்ததுதான் இந்த மரணத்திற்கு முக்கியக் காரணம் என்று சாஹிலின் தாய் குற்றம் சாட்டுகிறார். "பணம் இருப்பதால் எதையும் செய்யலாம் என்ற எண்ணம் சிலருக்கு இருக்கிறது. சாலைகளில் மாணவர்கள் பாதுகாப்பாக இல்லையென்றால் வேறு யாருக்குப் பாதுகாப்பு?" என்ற அவரது கேள்வி ஆழமானது.

விபத்தை ஏற்படுத்திய சிறுவனுக்கு 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வேண்டும் என்ற காரணத்திற்காக இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. தனது மகனின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும், பொறுப்பற்ற முறையில் காரைக் கொடுத்த அந்த சிறுவனின் தந்தை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி சாஹிலின் தாய் தொடர்ந்து போராடி வருகிறார். ஒரு இளைஞனின் அழகான எதிர்காலம் மற்றும் ஒரு தாயின் 23 ஆண்டுக்கால தவ வாழ்க்கை, ஒரு நொடிப் பொழுது 'ரீல்ஸ்' ஆசையினால் சாம்பலாகிப் போனது ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

"பிள்ளைகளின் படிப்புக்காகத்தான்" - மணியடித்தவுடன் மொபைல், டிவி ஆஃப்; வைரலாகும் மகாராஷ்டிரக் கிராமம்!

மொபைல் போன்களின் பயன்பாடு அதிகரித்த பிறகு சிறார்கள் அனைவரின் கையிலும் மொபைல் போனைப் பார்க்க முடிகிறது. இதனால் அவர்களது படிப்புக்கு மொபைல் போன்கள் தடையாக இருக்கின்றன.போன் பார்க்காமல் குழந்தைகள் படித்து... மேலும் பார்க்க

விஐடி பல்கலைக்கழகத்தில் ஜிஎஸ்டி வரி விழிப்புணர்வு மாநாடு!

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில், இந்திய பட்டய கணக்காளர் சங்கத்தின் வேலூர் கிளை சார்பில், “ஜிஎஸ்டி விதிமுறைகளை கையாளுதல் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துதல்” என்ற தலைப்பில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்ட... மேலும் பார்க்க

தட்டில் முடி இருந்தது உண்மைதான்... ஆனா போட்டது யாரு? கேமராவைத் திருப்பிய ஹோட்டல்: Trending video

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள புகழ்பெற்ற 'தி ராக்ஸ்' பகுதியில் அமைந்துள்ள ஒரு சொகுசு உணவகத்தில், கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு மோசடி அரங்கேறியுள்ளது. ஒரு நபர் தனது குடும்பத்தினருடன் அந்த உணவக... மேலும் பார்க்க

திடீரென வீலிங் செய்த இளைஞர்; நிலைதடுமாறிய பின்னால் அமர்ந்திருந்த பெண்.. விபரீதத்தில் முடிந்த சாகசம்!

மும்பையின் பிரதான சாலையில் வாலிபர் ஒருவர் இளம்பெண் ஒருவரை இரு சக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு, மிதமான வேகத்தில் ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். இதனால் பின்னால் இருந்த பெண்ணும் எந்தவித முன்னெச்சரிகையும்... மேலும் பார்க்க

24வது கவின்கேர் எபிலிட்டி விருதுகள்: மாற்றத்தை உருவாக்கிய 5 மாற்று திறனாளி சாதனையாளர்களுக்கு கௌரவம்!

தடைகளைத் தாண்டி மாற்றத்தை ஊக்குவிக்கும் கதைகளை கொண்டாடும் வகையில்,கவின்கேர்நிறுவனம்எபிலிட்டி ஃபவுண்டேஷனுடன்இணைந்து24வதுகவின்கேர் எபிலிட்டி விருதுகள் 2026விழாவை ஏற்பாடு செய்தது. நாடு முழுவதும் பல்வேறு ... மேலும் பார்க்க

பிரான்ஸ் அதிபர் மெக்ரான் இந்தியா வருகை; இன்று மோடியுடன் சந்திப்பு! - முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து?

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் 3 நாள் பயணமாக இன்று அதிகாலை மும்பை வந்து சேர்ந்தார். அவரை விமான நிலையத்தில் மாநில ஆளுநர் ஆச்சாரியா, முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே, ... மேலும் பார்க்க