செய்திகள் :

முட்டாள் என்ற சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்! - முரண்பாடும் விளக்கமும்

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

அறிவு கெட்டவனே... முட்டாள் என்று பெற்றோரிடம் அர்ச்சனை வாங்காமல் வளர்ந்திருப்பவர்கள் மிகவும் அரிதாகவே இருப்பர். ஏனெனில் அறிவு இருப்பர்கள் தான் நன்றாக படித்த அறிவாளிகளாகவும் மற்றும் புத்திசாலிகளாகவும் வலம் வர முடிகிறது என்று இன்றளவும் ஆணித்தரமாக கூறப்படுகிறது.

அறிவாளி மற்றும் புத்திசாலி என ஒருவரை கூறுவதில் சிறிய முரண்பாடுகள் இருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் மனிதன் என்பவன் இயற்கையாக படைக்கப்பட்டவன். இந்த இயற்கை மனிதனுக்கு ஏற்றத்தாழ்வின்றி உடல் உறுப்புகளைக் கொடுத்துள்ளது. அதில் அறிவுக்கு ஆதாரமாக விளங்கக் கூடியது மூளை மிக முக்கியமான ஒன்று. இதனைக் கருத்தில் கொள்ளும் போது அறிவு என்பது அனைவருக்கும் ஒன்றே! பொதுவானதே! இதன் அடிப்படையில் யாரையும் முட்டாள், அறிவு கெட்டவன் என்று கூறுவது முற்றிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை.

எதன் அடிப்படையில் இத்தகைய பிரிவினை வருகிறது என்று வாழ்வில் சாதனை புரிந்த மனிதர்களின் செயல்பாடுகளை உள்வாங்கும் போது கிடைத்த விடைதான் “நினைவாற்றல்”.

நினைவாற்றல் என்பது மூளைக்கும் ஐம்புலன்களுக்கும் இடையேயான தகவல்கள் பரிமாற்றம் ஆகும். இவ்வாறு தகவல் பரிமாற்றம் நடைபெறும் போது ஆறாவது அறிவு (மனதின்) உதவியுடன் ஏன்? எதற்கு? எப்படி? என பல்வேறு வினாக்களுடன் சிந்தனை தூண்டப்படுகிறது. அதன் காரணமாக மாதா, பிதா, குரு, புத்தகம் மூலமாக கிடைக்கப்பெறும் விடைகள்  மூளையில் சேமித்து “முதிர்ச்சி” அடைய வைக்கிறது. இத்தகைய முதிர்ச்சியே “அனுபவம்” என்று அழைக்கப்படுகிறது.

இவ்வாறு எவன் ஒருவன் சிறு வயது முதல் மாதா, பிதா, குரு, புத்தகம் மூலமாக தன் சிந்தனையினை அதிகம் தூண்டும் செயலில் நேரம் தவறாது ஈடுபடுகிறானோ அவனுடைய நினைவாற்றல் படிப்படியாக உயர்ந்த நிலையினை அடைகிறது. 

இதன் மூலம் அறிவு கெட்டவன், அறிவு இல்லாதவன், முட்டாள் எனக் கூறுவதனை தவிர்த்து “நினைவாற்றல் இல்லாதவன்” எனக் கூற வலியுறுத்தப்படுகிறது. 

போட்டித் தோ்வுகளில் 90 சதவீதம் “நினைவாற்றல்” கொண்டவர்கள் மட்டுமே வெற்றி பெருகிறார்கள் என்பதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் நேரம் தவறாது புத்தகத்தினை வாசித்து படிக்கும் போது சிந்தனை தூண்டப்பட்டு மூளை முதிர்ச்சி அடைவதாகும்.

“சிந்தனையால் முதிர்ச்சி அடைந்து அனுபவம் பெற்ற மனிதனாக மாறுகிறான்”

ஒரு தாவரம் தன் வேரினைக் ஆழமாகச் செலுத்தி எவ்வாறு தனக்கு தேவையான தாது பொருட்களை ஊறிஞ்சி தன்னுடைய மற்ற பாகங்களுக்கு உயிர்ப்பு கொடுக்கிறது. இது போல சிந்தனை என்னும் வேரினை ஆழமாகச் செலுத்தி பல்வேறு தகவல்களை ஊறிஞ்சி சிந்தனையின் பயனாக தன்னுடைய மூளையினை பலப்படுத்தினால் “நினைவாற்றல்” உயிர்ப்படைகிறது. சாதிக்கலாம்...

படித்தவன் – அறிவாளி

கற்றவன் – புத்திசாலி

அறிவாளி + புத்திசாலி = அனுபவசாலி (திறமைசாலி)

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

கோபுரங்கள் சாய்வதில்லை! - ஒரு தாயின் பாடம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் /விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தி... மேலும் பார்க்க

அறிவுத் தூதுவர்களுக்கு ஒரு சல்யூட்! : உன்னதமான மனிதர்களை கெளரவிக்கும் புதுக்கோட்டை வாசகர் பேரவை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

திருநெல்வேலி: கல்லூரி மாணவரால் கண்டெடுக்கப்பட்ட பழைமைவாய்ந்த புதைப்பொருள்கள்!

திருநெல்வேலியில் உள்ள மானூரில் மன்னர் காலக் கல்வெட்டுகள் பலவும் கிடைக்கின்றன. இதனால் ஆய்வாளர்கள் அங்கு அடிக்கடி சென்று கள ஆய்வு செய்து வருகின்றனர். சமீபத்தில் மேற்கு செழியநல்லூரில் 450 ஆண்டுகள் பழைமைய... மேலும் பார்க்க

டெல்லி: திருச்சி இளைஞரின் கவிதை புத்தகம் வெளியீடு - மத்திய அமைச்சர்கள், நடிகை ஹூமா குரேஷி பங்கேற்பு!

டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற சர்வதேச விருதுகள் வழங்கும் விழாவில், தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் எழுதிய சுய முன்னேற்றம் குறித்த கவிதை புத்தகம் கோலாகலமாக வெளியிடப்பட்டது.புத்தகத்தின் பெயர்: என்கிரேட்ட... மேலும் பார்க்க

"நினைத்ததையெல்லாம் எழுதி விட்டேன்; இப்போது காலன் வந்தாலும் தயார்"- தெ.ஞானசுந்தரத்திற்கு அரசு மரியாதை

கடந்த ஞாயிற்றுக்கிழமை மறைந்த தமிழறிஞர் தெ.ஞானசுந்தரத்தின் உடல் இன்று சென்னையில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.பேச்சாளர், எழுத்தாளர், பேராசிரியர், ஆய்வாளர் எனப் பன்முக ஆளுமையாகத் திகழ்ந்த முன... மேலும் பார்க்க

மலையாளத்தில் பறம்பின் குரல்: `வீரயுக நாயகன் வேள்பாரி' - நூலை பெற்றுக்கொண்ட சு.வெங்கடேசன்!

சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி-யுமான சு.வெங்கடேசனின் எழுத்திலும், ஓவியர் மணியம் செல்வனின் ஓவியத்துடனும் விகடன் பிரசுரத்தில் வெளியானப் புத்தகம் `வீரய... மேலும் பார்க்க