செய்திகள் :

ஊட்டி : தேசிய கட்சிகளுடன் போட்டி போடும் கழகங்கள் - கூட்டணிக்குள் வெடிக்கும் களேபரங்கள்!

post image

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு தேதி நெருங்கி வரும் சூழலில், கூட்டணி மாற்றம், தொகுதி பங்கீடு என தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

குளிர்ச்சி நிறைந்த நீலகிரி மாவட்டத்திலும் தேர்தல் வெப்பம் உக்கிரமாகி வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தின் தலைநகரான ஊட்டித் தொகுதியை தக்க வைக்கவும் தட்டிப் பறிக்கவும் கூட்டணி கட்சிகளுக்கு இடையே பெரிய அளவிலான களேபரங்களே நடைபெற்று வருகின்றன.

Ooty

திமுக - காங்கிரஸ்

ஊட்டி தொகுதியில் கடந்த இரண்டு தேர்தல்களில் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி வெற்றி வாகை சூடியிருப்பதால், மூன்றாவது முறையாக இந்த முறையும் தங்களுக்கே ஊட்டி தொகுதியை ஒதுக்க வேண்டியது தான் கூட்டணி தர்மம் என அந்த கட்சியினர் திட்டவட்டமாக கூறி வருகின்றனர்.

அதேவேளையில், ஆளுங்கட்சியாக இருந்தும் மாவட்ட தலைநகரான ஊட்டியை தொடர்ந்து கூட்டணிக்கு தாரை வார்ப்பதால் தி.மு.க- வின் செல்வாக்கு சரிவதுடன், கட்சிக்காக உழைக்கும் கழக நிர்வாகிகளுக்கான வாய்ப்பு மறுக்கப்படுவதாக ஆளுங்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலகக்‌ குரல் எழுப்பி வருகின்றனர்.

அதிமுக - பாஜக

அதேவேளையில், கடந்த தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் ஊட்டி தொகுதியை விடாப்பிடியாக கேட்டுப்‌ பெற்றது பா.ஜ.க. ஆனால், காங்கிரஸிடம் தோல்வியைத் தழுவியது.

கூட்டணிக்காக ஊட்டி தொகுதியை அ.தி.மு.க விட்டுக்கொடுத்து குன்னூர் தொகுதியில் களமிறங்கியது. ஆனால், அங்கும் தி.மு.க -விடம் வெற்றியை கோட்டை விட்டது. இந்த முறை அப்படி நிகழாமல் இருக்க ஊட்டி தொகுதியை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என அ.தி.மு.க கட்சியைச் சேர்ந்த நீலகிரி மாவட்ட நிர்வாகிகள் உறுதியாக நிற்கின்றனர்.

ஊட்டி
ஊட்டி

அதேவேளையில், ஊட்டியை விட்டுக் கொடுப்பதாக இருந்தால், அதற்கு ஈடாக கொங்கு பகுதியில் கூடுதலாக தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பா.ஜ.க தரப்பில் வேண்டுகோள் வலுத்து வருவதாக தகவல்கள் வெளியாகின்றன.

எந்தெந்த கட்சிகளுக்கு ஊட்டியில் களமிறங்க வாய்ப்பு வழங்கப்படுகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.!

'ஓ.பி.எஸ்க்காக உயிரை விட முடியுமா?' - 89 வயதில் புதுக்கட்சி தொடங்கிய பண்ருட்டி ராமச்சந்திரன்

ஓ.பி.எஸ் ஆதரவாளராக இருந்த மூத்த அரசியல்வாதி பண்ருட்டி ராமச்சந்திரன் புதிதாக 'எம்.ஜி.ஆர் அண்ணா திமுக' என்ற பெயரில் ஒரு கட்சியை தொடங்கியிருக்கிறார்.பத்திரிகையாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், 'எ... மேலும் பார்க்க

"திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது மக்களின் மனநிலைக்கு நேர்மாறாக உள்ளது!" - ஜி.கே.வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய டெல்டா மண்டல, மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் கலந்தாய்வு கூட... மேலும் பார்க்க

இரான் மீது எப்போது தாக்குதல்? - ட்ரம்ப் தலை அசைவிற்காக காத்திருக்கும் அமெரிக்கப் படைகள்!

2025-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பின்... மீண்டுமா? - அமெரிக்கா - இரான் இடையே உருவாகி உள்ள இந்த மோதல்போக்கு இந்தக் கேள்வியை எழுப்புகிறது. இரான் மீது அமெரிக்கா தாக்குதல் 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேல்... மேலும் பார்க்க

`தேர்தலில் எதிர்த்ததால் 5 வருடம் சம்பளம் போடவில்லை!' - திமுக நிர்வாகிக்கு எதிராக குமுறும் ஆபரேட்டர்

கும்பகோணம், திருப்பனந்தாள் அருகே உள்ள மணலூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் தினேஷ். இவரின் தந்தை சுந்தரமூர்த்தி திமுக-வில் கிளைச் செயலாளர், வர்த்தக அணி அமைப்பாளர் உள்ளிட்ட பதவிகள் வகித்துள்ளார். அதே ஊராட்சியா... மேலும் பார்க்க

வடிவேலுவை வைத்து வசை பாடிய திமுக; கட்சியை உடைத்த அதிமுக! - தேர்தலில் தேமுதிக கடந்த பாதை!

தேசிய முற்போக்கு திராவிட கழகம், முதல் முறையாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது தமிழக அரசியலில் இன்றைய ஹாட் நியூஸ் ஆக உள்ளது.தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என்ற இரு துருவங்கள் கோலோச்சிய காலத்தில... மேலும் பார்க்க

கோவை உடன்பிறப்புகள் vs கரூர் கம்பெனி; திமுகவில் வெடித்த மோதல்; செந்தில் பாலாஜி திட்டத்தில் டிவிஸ்ட்!

சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தங்களின் வியூகங்களை பட்டை தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சியை தக்க வைத்து, ஏழாவது முறை அரியணை ஏறுவதற்கு திமுக காய் நகர்த்தி வருகிறது. கடந்த காலங்களில் கோட்டை வ... மேலும் பார்க்க