செய்திகள் :

Lost 140,000 Followers: அம்பலமான உண்மை முகம்! - லட்சக்கணக்கான ஃபாலோயர்களை இழந்த சீன இன்ஃப்ளூயன்சர்?

post image

ஒரு சீன இன்ஃப்ளூயன்சர் தனது ரசிகர்களுடன் நேரலையில் (Livestream) பேசிக்கொண்டிருக்கும் போது, இத்தனை நாளாக அவர் பயன்படுத்திய `பியூட்டி ஃபில்டர்' திடீரென வேலை செய்யாமல் போனது. இதனால் சில வினாடிகளுக்கு அவரது உண்மையான முகம் பார்வையாளர்களுக்குத் தெரிந்தது. அடுத்த சில வினாடிகளில் மீண்டும் ஃபில்டர் வேலை செய்யத் தொடங்கி, அவரது முகத்தை மிகவும் வெள்ளையாகவும், பொம்மை போலவும் மாற்றியது.

china influencer
china influencer

இந்த 4 வினாடி வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியது. ஃபில்டர் இல்லாமல் அவரது உண்மையான முகத்தைப் பார்த்ததால், சில நிமிடங்களிலேயே சுமார் 1,40,000 ஃபாலோயர்கள் அவரைப் பின்தொடர்வதை நிறுத்திவிட்டார்கள் என்று சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

வீடியோ வைரலானாலும், உண்மையிலேயே 1,40,000 ஃபாலோயர்களை இழந்தாரா என்பதற்கோ அல்லது இந்தச் சம்பவம் முழுமையாக உண்மையானது தானா என்பதற்கோ எந்த அதிகாரப்பூர்வ ஆதாரமும் இல்லை. மேலும், வீடியோவில் இருக்கும் அந்தப் பெண் யார் என்பதும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் `பியூட்டி ஃபில்டர்களின்' அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் எதிர்மறையான தாக்கங்கள் குறித்த விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சிலர் அவர் பொய் முகத்தைக் காட்டி மக்களை ஏமாற்றி விட்டதாகக் குற்றம்சாட்டுகின்றனர். இன்னும் சிலர், ஃபில்டர் செய்யப்பட்ட செயற்கையான முகத்தை விட அவரது இயற்கையான முகம் மிகவும் அழகாக இருப்பதாகவும், அவர் ஃபில்டர்களைத் தவிர்க்கலாம் என்றும் ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதே போன்று 2019-ஆம் ஆண்டில், கியாவோ பிலுவோ (Your Highness Qiao Biluo) என்ற பிரபலமான சீன இன்ஃப்ளூயன்சரின் நேரலையில் ஃபில்டர் கோளாறு ஏற்பட்டபோது, இளம்பெண் போல காட்சியளித்த அவர் உண்மையில் ஒரு 58 வயதுப் பெண்மணி என்ற உண்மை வெளிவந்த சம்பவத்தையும் இது பலருக்கு நினைவூட்டியுள்ளது.

Qiao Biluo
Qiao Biluo

இது போன்ற சம்பவங்களில் மக்கள் கோபப்படுவது அந்தப் பெண்ணின் உண்மையான முகத்தைப் பார்த்து அல்ல; இத்தனை நாள்களாகத் தங்களை நம்பவைத்த அந்தப் போலித்தனத்தைப் பார்த்துதான். ஃபில்டர்கள் மூலம் உருவாக்கப்படும் முகம் ஒரு வெறும் மாயை. அந்த மாயையை நிஜம் என நம்பி அன்பைப் பொழிந்தவர்களுக்கு, அது வெறும் தொழில்நுட்பத்தின் மாயம் எனத் தெரியவரும்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது.

உண்மையில், அந்தப் பெண்ணின் உண்மையான முகத்தைப் பார்த்த பல நெட்டிசன்கள், "ஃபில்டரில் தெரிந்த உயிரற்ற வெளிறிய முகத்தை விட, முதிர்ச்சியும் கதகதப்பும் நிறைந்த அவரது இயற்கையான முகம் மிகவும் அழகாக இருக்கிறது" என்றுதான் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

உண்மையான முகமே ஆகச்சிறந்த அழகு!

அழகு என்பது கறையற்ற சருமத்திலோ, ஃபில்டர்கள் தரும் செயற்கையான பளபளப்பிலோ இல்லை. அது நம் உணர்வுகளைச் சுமந்து நிற்கும் நிஜ முகத்தில் இருக்கிறது. ஒவ்வொரு மனிதனின் முகத்திலும் உள்ள சுருக்கங்களும், நிறமும், அடையாளங்களும் அவர்களது வாழ்க்கைப் பயணத்தின் சாட்சிகள். அதைப் மறைத்து ஒரு பிளாஸ்டிக் பொம்மையைப் போல மாறுவது அழகல்ல.

filter
filter

ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்தமானவர்களிடம் எதிர்பார்ப்பது, தங்களைப் போலவே குறைகள் இருந்தாலும் உண்மையாக இருக்கக்கூடிய ஒரு மனிதரைத்தான். அந்த சீன இன்ஃப்ளூயன்ஸர் எந்த ஃபில்டரின் உதவியும் இல்லாமல், ஆரம்பத்திலிருந்தே தன் உண்மையான முகத்துடனேயே வந்திருந்தால், அவர் இழந்த 1.4 லட்சம் பேரை விடப் பல மடங்கு உண்மையான அன்பான ஃபாலோயர்களைச் சம்பாதித்திருக்க முடியும்.

பஞ்சாப்: மணமகள் மீது ரூ.8.5 கோடியை மழையாக பொழிந்தார்களா உறவினர்கள்? - வைரல் வீடியோவின் பின்னணி!

திருமணம் என்றாலே உறவினர்கள் பணத்தை தண்ணீராக செலவு செய்வார்கள். பஞ்சாப் மாநிலம் டர்ன் தரன் என்ற இடத்தில் நடந்த திருமணத்தில் உறவினர்கள் மணமகள் மீது பணமழை பொழிந்த வீடியோ வைரலாகி இருக்கிறது. திருமணத்தில் ... மேலும் பார்க்க

ஆப்கன்: எலும்பு முறிய கூடாது, காயம் தெரியகூடாது!- பெண்களை அடிக்க சட்டப்பூர்வ அனுமதி வழங்கிய தாலிபான்

ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருக்கும் தாலிபான் அரசு பெண்களுக்கு பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. படிப்பதற்கு கூட கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் தனியாக வெளியில் செல்ல... மேலும் பார்க்க

ஏஐ மாநாட்டில் சீன நாய் ரோபோ; வைரலான பேராசிரியர்; மன்னிப்புக் கேட்ட பல்கலைக்கழகம்; என்ன நடந்தது?

டெல்லியில் சர்வதேச ஏ.ஐ. மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஐ.டி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் கடைகளை அமைத்து அதில் தங்களது தயாரிப்புகளை கண்காட்சிக்கு வைத்துள்ளன. இதில் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த க... மேலும் பார்க்க

"பிள்ளைகளின் படிப்புக்காகத்தான்" - மணியடித்தவுடன் மொபைல், டிவி ஆஃப்; வைரலாகும் மகாராஷ்டிரக் கிராமம்!

மொபைல் போன்களின் பயன்பாடு அதிகரித்த பிறகு சிறார்கள் அனைவரின் கையிலும் மொபைல் போனைப் பார்க்க முடிகிறது. இதனால் அவர்களது படிப்புக்கு மொபைல் போன்கள் தடையாக இருக்கின்றன.போன் பார்க்காமல் குழந்தைகள் படித்து... மேலும் பார்க்க

விஐடி பல்கலைக்கழகத்தில் ஜிஎஸ்டி வரி விழிப்புணர்வு மாநாடு!

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில், இந்திய பட்டய கணக்காளர் சங்கத்தின் வேலூர் கிளை சார்பில், “ஜிஎஸ்டி விதிமுறைகளை கையாளுதல் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துதல்” என்ற தலைப்பில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்ட... மேலும் பார்க்க

சிதைந்த மில்லியன் டாலர் கனவு; ரீல்ஸ் மோகத்தில் கார் ஏற்றிக் கொன்ற சிறுவன்; தாயின் தீராத வேதனை!

டெல்லி துவாரகா பகுதியில் நடந்த கோரமான கார் விபத்து, ஒரு குடும்பத்தின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் சிதைத்துள்ளது. 23 வயதான சாஹில் தனேஸ்ராஎன்ற இளைஞர், சிறுவன் ஒருவன் ஓட்டி வந்த ஸ்கார்பியோ கார் மோதி உயிரி... மேலும் பார்க்க