செய்திகள் :

புதுக்கோட்டை: மாமியாரை எரித்துக் கொன்ற மருமகள்; ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்; என்ன நடந்தது?

post image

புதுக்கோட்டை, மணியம்பளம் மேல செந்திரையைச் சேர்ந்தவர் ராஜம்மாள் (வயது: 58). இவரும், இவரது மகன் ரமேஷ் மற்றும் மருமகள் பிரதீபா (வயது: 27) ஆகியோரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர்.

இந்நிலையில், பிரதீபாவுக்கும், ராஜம்மாளுக்கும் அடிக்கடி சண்டை ஏற்படும். இந்நிலையில், கடந்த 2020 ஆம் வருடம், ஜூன் மாதம், 3 ஆம் தேதி இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.

இதில், கோபமடைந்த பிரதீபா, அவரது மாமியார் ராஜம்மாள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி பற்றவைத்துள்ளார். இதில் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். வல்லத்ராக்கோட்டை காவல் நிலைய போலீஸார் பிரதீபாவைக் கைது செய்தனர்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை

அதோடு, புதுக்கோட்டை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம் தீர்ப்பு வழங்கியுள்ளார். அந்தத் தீர்ப்பில், கொலை செய்த குற்றத்திற்காக பிரதீபாவுக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராதத் தொகை கட்டத் தவறினால் மேலும் ஒரு மாத காலம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மாமியாரைக் கொன்ற மருமகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது, புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Kerala: குறைந்த விலையில் லேப்டாப் வழங்குவதாக மோசடி? நடிகர் ஜெயசூர்யா சொத்து முடக்கம்; நடந்தது என்ன?

கேரள மாநிலம் திருச்சூரில் 2019-ம் ஆண்டு சேவ் பாக்ஸ் கான்ஸ்செப்ட் லிமிடெட் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. ஸ்வாதிக் ரஹீம் என்பவர் அந்த நிறுவனத்தை நடத்திவந்தார்.சேவ் பாக்ஸ் நிறுவனத்துக்கு பணம் செலுத்தினால... மேலும் பார்க்க

சென்னை: வீட்டு ஓனரின் மகளை நம்பவைத்து நூதனமுறையில் ஏமாற்றிய அப்பா, மகள் - தங்க நகைகளுடன் கைது!

திருவண்ணாமலை மாவட்டம், கருடாழ்வார் நகரைச் சேர்ந்தவர், புனிதாஸ்ரீ (22). இவரின் வீட்டின் கீழ் தளத்தில் கோவையைச் சேர்ந்த ஜெகதீஸ் என்பவர், மனைவி மற்றும் மகளுடன் வாடகைக்கு வசித்து வந்தார். அப்போது புனிதாஸ்... மேலும் பார்க்க

"பெண்ணுறுப்பிற்குள் ஊடுருவாமல் விந்தினை வெளியேற்றுவது பாலியல் வன்கொடுமையல்ல" - சத்தீஸ்கர் நீதிமன்றம்

சத்தீஷ்கர் உயர் நீதிமன்றத்தில் பெண் ஒருவர் கொடுத்திருந்த பாலியல் வன்கொடுமை வழக்கில், 20 ஆண்டுகளுக்கு முன்பு குற்றவாளிக்கு விசாரணை நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை கொடுத்திருந்தது. இத்தண்டனையை எதிர்த்து ... மேலும் பார்க்க

கட்டாய கடன் வசூலுக்கு தடை! - புதிய சட்டத்தின் 'முதல்' கைது... அத்துமீறும் நிதி நிறுவனங்களுக்கு செக்!

தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெறும் ஏழை மக்கள், விவசாயிகள் மற்றும் சுய உதவிக்குழுக்கள், குடும்ப சூழல் காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் தவணையை செலுத்த முடியாத நிலைக்குச் செல்கின்றனர். அதனால் அந்தக் கடன... மேலும் பார்க்க

விருதுநகர்: உரிமைத்தொகையை செலவு செய்ததால் கோபித்த மனைவி; விபரீத முடிவெடுத்த கணவரால் சோகம்!

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள நெடுங்குளத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரின் மனைவி ராமு. இவரது வங்கிக் கணக்கில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை ரூ.3 ஆயிரம் ... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: ஒரு தலை காதல் தொல்லை; உயிரை மாய்த்த மாணவி; மாணவரை கைதுசெய்ய குடும்பத்தினர் கோரிக்கை!

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் கோகுல் நகரைச் சேர்ந்த தம்பதியின் மகள், அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அதே பள்ளியில் அதே வகுப்பில் படித்த மாணவர் ஒருவ... மேலும் பார்க்க