செய்திகள் :

Doctor Vikatan: குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதில் மன அழுத்தம்; பெண்ணின் வைரல் வீடியோ, தீர்வு என்ன?

post image

Doctor Vikatan: சமீபத்தில் ஒரு பெண்ணின் வீடியோ வைரலானது. அதில் அந்தப் பெண் தன் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள முடியாத மன அழுத்தத்துக்கு உள்ளானது பற்றிப் பேசியிருந்தார்.

தொடர்ந்து சில வருடங்களாக அந்த வேலையைச் செய்ததில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக, வீட்டில் உள்ளவர்களை அடித்துவிட்டு வெளியேறியதாகவும், இப்போது மனநல சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பேசியிருந்தார்.

பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது. குழந்தை பிறந்து இத்தனை வருடங்கள் கழித்து மன அழுத்தம் வர வாய்ப்பு உண்டா.... இவரைப் போன்றவர்களுக்கு என்னதான் தீர்வு?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் மருத்துவர் மிதுன் பிரசாத்

மனநல மருத்துவர் மிதுன் பிரசாத்
மனநல மருத்துவர் மிதுன் பிரசாத்

அந்த வீடியோவை நானும் பார்த்தேன். அதில் அந்தப் பெண், குழந்தைகளைப் பராமரிப்பது எவ்வளவு கடினம் என்பதைப் பற்றிப் பேசுகிறார். அவர் பேசியதை வைத்துப் பார்க்கும்போது அவர், பிரசவத்துக்குப் பிறகு பெண்களைப் பாதிக்கும் 'போஸ்பார்ட்டம் டிப்ரெஷன்' (Postpartum Depression) பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பார் என்றே தோன்றுகிறது.

போஸ்பார்ட்டம் டிப்ரெஷன் என்பது குழந்தை பிறந்து ஒரு வருடத்திற்குள் வரும் மன அழுத்தம். குழந்தை பிறந்து ஒரு வருடத்திற்குப் பிறகு ஏற்படும் மன அழுத்தத்தை 'மேஜர் டிப்ரெஷன்' (Major Depression) என்று அழைக்கிறோம்.

அந்தப் பெண்மணி பேசுவதிலிருந்து அவருக்கு மன அழுத்தம் இருப்பது தெரிகிறது, ஆனால், அதற்குத் தேவையான சமூக மற்றும் குடும்ப ஆதரவு அவருக்குக் கிடைக்கவில்லை என்பது புரிகிறது.

பொதுவாக நாம் யாரிடமாவது மன அழுத்தம் பற்றிப் பேசினால், அவர்கள் உடனே 'தைரியமா இரு', 'மனசை அமைதியா வெச்சுக்கோ, 'யோகா பண்ணு, தியானம் செய்' என்று எளிதாகக் கூறிவிடுவார்கள்.

குறிப்பாக, டிப்ரெஷன், பதற்றம் உள்ளவர்கள், பெண்களுக்கெல்லாம் இந்தத் தலைவலி அதிகம் வரலாம்.

ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தத்திற்கும் (Stress) டிப்ரெஷன்  (Depression) எனப்படும் மனச்சோர்வுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஸ்ட்ரெஸ் என்பது மனம் சம்பந்தப்பட்டது. டிப்ரெஷன் என்பது  மூளை சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னை. 

டிப்ரெஷன் என்பது மன அழுத்தத்தைவிடத் தீவிரமான மனநல பாதிப்பு. சம்பந்தப்பட்ட நபர் முயற்சி செய்தாலும், அதிலிருந்து வெளியே வர நினைத்தாலும் மூளை ஒத்துழைக்காது.

மூளையில் உள்ள சில நியூரோ கெமிக்கல்கள் (Neuro-chemicals) மற்றும் சர்க்யூட்கள் சரியாகச் சுரக்காவிட்டாலோ, சரியாக வேலை செய்யாவிட்டாலோ, எவ்வளவு ஸ்ட்ராங்கான நபராக இருந்தாலும், மனஉறுதி உள்ள நபர்களுக்கும் டிப்ரெஷன் வரலாம். அதைச் சரியாகப் புரிந்துகொண்டால்தான் டிப்ரெஷன் குறித்த மனத்தடை நீங்கும்.

உடல் ரீதியான தைராய்டு பிரச்னைக்கு எப்படி மருத்துவரை நாடுகிறோமோ, அதேபோல் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் ஆணோ, பெண்ணோ, மனநல மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம்.

ஆரம்ப கட்டத்தில் முறையான கவுன்சலிங் மட்டுமே போதுமானது.
ஆரம்ப கட்டத்தில் முறையான கவுன்சலிங் மட்டுமே போதுமானது.

மனநலக் கோளாறுகளைப் பற்றிய விழிப்பு உணர்வு குறைவாக இருப்பதையும், அது குறித்த சமூகத் தயக்கம் (Stigma) அதிகமாக உள்ளதையுமே இந்த  வீடியோ நமக்கு உணர்த்துகிறது. மனது சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்னையாக இருந்தாலும், அதை 'ஸ்ட்ரெஸ்' என்ற பெயரில் கடந்து போகிறோம்.

மனநலம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் பல வகைகள் உள்ளன. அவை நம் மன உறுதியையும் கட்டுப்பாட்டையும் மீறி பாதிப்பவை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். 

வீடியோவில் பேசியிருக்கும் பெண்ணின் மேஜர் டிப்ரெஷனை நிச்சயம் குணப்படுத்த முடியும். ஆரம்ப கட்டத்தில் முறையான கவுன்சலிங் மட்டுமே போதுமானது.

பாதிப்பு தீவிரமாகும் போது, கவுன்சலிங்குடன் மருத்துவ சிகிச்சையும் சேர்த்து அளிக்கப்படும்போது இதிலிருந்து முழுமையாக வெளிவர முடியும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Doctor Vikatan: ஒல்லியான குழந்தைகளுக்கு சாக்லேட், பிஸ்கட், ஸ்வீட்ஸ் கொடுத்தால் வெயிட் ஏறுமா?

Doctor Vikatan: என் உறவினரின் 4 வயது பெண் குழந்தை மிகவும் ஒல்லியாக இருக்கிறாள். அவளது வெயிட்டைஅதிகரிக்க என் உறவினர், அவளுக்கு நிறைய சாக்லேட், பிஸ்கட், ஸ்வீட்ஸ் எல்லாம் கொடுக்கிறார். 'குழந்தைதானே... ஒண... மேலும் பார்க்க

'ஜிம்' ஓவர்டோஸ்: கவனிக்க வேண்டிய மனநல அறிகுறிகள்!

இன்று பலரும் ஃபிட்னஸில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஜிம்முக்கு செல்வதில் தொடங்கி நடைப்பயிற்சி, ஜாகிங் செல்வது என தங்களால் இயன்ற வகையில் ஃபிட் ஆக இருக்க முயற்சித்து வருகின்றனர். இது ஆரோக்கியமானதுதான் எ... மேலும் பார்க்க

Doctor Vikatan: கோடையில் படுத்தும் கிட்னி ஸ்டோன்ஸ்... வாழைத்தண்டு ஜூஸ்தான் சரியான தீர்வா?

Doctor Vikatan: எனக்கு கோடைக்காலம் ஆரம்பித்தாலேகிட்னி ஸ்டோன்ஸ் எனப்படும் சிறுநீரகக் கற்கள் பிரச்னை வர ஆரம்பித்துவிடும். இந்த வருடமாவது கோடையில் அந்தப் பிரச்னையில்இருந்து விலகி இருக்க நினைக்கிறேன். தின... மேலும் பார்க்க

Apollo: 8000 ரோபோடிக் அறுவை சிகிச்சை; வெற்றிகரமாக செய்து சாதனைப் படைத்த அப்போலோ

அப்போலோ மருத்துவமனைகள் (Apollo Hospitals) பல்வேறு மருத்துவப் பிரிவுகளில் 8,000-க்கும் மேற்பட்ட ரோபோடிக் (எந்திர மனித கரம் மூலம் செய்யப்படும் அறுவை வெற்றிகரமாக நிறைவு செய்து சாதனை படைத்துள்ளது. மிகத் த... மேலும் பார்க்க

Doctor Vikatan: திரும்பத் திரும்ப வரும் ஒரே கனவு... நிஜமாகப் போவதற்கான அறிகுறியா?

Doctor Vikatan: கடந்த சில மாதங்களாக எனக்கு ஒரே மாதிரியான கனவு, அதுவும் மோசமான, விரும்பத்தகாத கனவு மீண்டும் மீண்டும் வருகிறது. ஒரே கனவு திரும்பத் திரும்ப வரும்போது, அது ஒருவேளை உண்மையாகி விடுமோ என்று ந... மேலும் பார்க்க

டயாபட்டீஸை உறுதிசெய்யும் HbA1c டெஸ்ட்; ரிசல்ட் தவறாகலாம் - எச்சரிக்கும் ஆய்வும் மருத்துவ விளக்கமும்!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை (MDRF) இணைந்து நடத்திய ICMR-INDIAB ஆய்வின்படி, இந்தியாவில் சர்க்கரைநோயைக் கண்டறியஹெச்பிஏ1சி (HbA1c) எனப்படும் ... மேலும் பார்க்க