செய்திகள் :

Doctor Vikatan: கோடையில் படுத்தும் கிட்னி ஸ்டோன்ஸ்... வாழைத்தண்டு ஜூஸ்தான் சரியான தீர்வா?

post image

Doctor Vikatan: எனக்கு கோடைக்காலம் ஆரம்பித்தாலே கிட்னி ஸ்டோன்ஸ் எனப்படும் சிறுநீரகக் கற்கள் பிரச்னை வர ஆரம்பித்துவிடும். இந்த வருடமாவது கோடையில் அந்தப் பிரச்னையில் இருந்து விலகி இருக்க நினைக்கிறேன். தினமும் வாழைத்தண்டு ஜூஸ் குடித்தால் கிட்னி ஸ்டோன்ஸ் வராது என்கிறார்களே... அது எந்த அளவுக்கு உண்மை.... எவ்வளவு குடிக்க வேண்டும்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி  

அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

சிறுநீரகக் கற்கள் வராமலிருக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியது அடிப்படை. கோடையில் உடலின் நீர்த்தேவை அதிகரிக்கும் என்பதால் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.  

வாழைத்தண்டு சாற்றுக்கு சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் தன்மை உண்டு என்பது உண்மைதான். ஆனால், இந்த விஷயத்தில் சிறுநீரகக் கற்களின் அளவு முக்கியம். அந்த அளவைப் பொறுத்துதான் அந்தக் கற்களைக் கரைக்க வாழைத்தண்டு சாறு மட்டுமே போதுமா என்று தீர்மானிக்க முடியும். அளவில் மிகச் சிறிய கற்கள் என்றால் வாரத்தில் மூன்று நாள்களுக்கு 30 மில்லி அளவுக்கு வாழைத்தண்டு சாறு குடிக்கலாம். பெரிய கற்களுக்கு இந்தச் சிகிச்சையை மட்டுமே நம்புவது சரியல்ல. சித்த மருத்துவ சிகிச்சை எடுக்க விரும்பினால், மருத்துவரை கலந்தாலோசியுங்கள். அவர் வாழைத்தண்டு சாற்றுடன் வேறென்ன மூலிகைகள் சேர்த்து எடுக்க வேண்டும் என்று பரிந்துரைப்பார்.

சிறுநீரகக் கற்களைப் போக்க வாழைத்தண்டை சிறுபருப்புடன் சேர்த்து கூட்டாகச் செய்து சாப்பிடுவது, சாலடாக எடுத்துக்கொள்வது போன்றவற்றுடன் முள்ளங்கி, மூக்கிரட்டை, சிறுபீளை, நெருஞ்சில், ஆவாரம்பூ, பூசணிச்சாறு, வெள்ளரி விதை, கற்றாழை, கறிவேப்பிலை போன்றவற்றையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

வாழைத்தண்டு சாற்றுக்கு சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் தன்மை உண்டு என்பது உண்மைதான். ஆனால், இந்த விஷயத்தில் சிறுநீரகக் கற்களின் அளவு முக்கியம்.

வெளியே செல்லும்போது சோடா போன்ற செயற்கை பானங்களைத் தவிர்த்து, நீராகாரம், இளநீர், நுங்கு ஜூஸ், பழச்சாறுகள் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். உப்புச்சத்து அதிகமுள்ள கருவாடு, ஊறுகாய் போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும். கீரை சமைக்கும்போது தக்காளி சேர்த்துச் சமைப்பதைத் தவிர்க்கவும். கீரையோடு பூண்டு மட்டும் சேர்த்துக் கடைந்து சாப்பிடுவது போதுமானது.

உடலைக் குளிரச்செய்யும் விஷயங்களைப் பின்பற்ற வேண்டியது அவசியம். சரியான தூக்கம், வாரம் ஒருமுறை எண்ணெய்க் குளியல் எடுப்பது, வெட்டிவேரும் விளாமிச்சை வேரும் ஊறவைத்த தண்ணீரைப் பருகுவது, தாழம்பூ சேர்த்த பானங்களைக் குடிப்பது போன்றவை உதவும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.     

'ஜிம்' ஓவர்டோஸ்: கவனிக்க வேண்டிய மனநல அறிகுறிகள்!

இன்று பலரும் ஃபிட்னஸில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஜிம்முக்கு செல்வதில் தொடங்கி நடைப்பயிற்சி, ஜாகிங் செல்வது என தங்களால் இயன்ற வகையில் ஃபிட் ஆக இருக்க முயற்சித்து வருகின்றனர். இது ஆரோக்கியமானதுதான் எ... மேலும் பார்க்க

Apollo: 8000 ரோபோடிக் அறுவை சிகிச்சை; வெற்றிகரமாக செய்து சாதனைப் படைத்த அப்போலோ

அப்போலோ மருத்துவமனைகள் (Apollo Hospitals) பல்வேறு மருத்துவப் பிரிவுகளில் 8,000-க்கும் மேற்பட்ட ரோபோடிக் (எந்திர மனித கரம் மூலம் செய்யப்படும் அறுவை வெற்றிகரமாக நிறைவு செய்து சாதனை படைத்துள்ளது. மிகத் த... மேலும் பார்க்க

Doctor Vikatan: திரும்பத் திரும்ப வரும் ஒரே கனவு... நிஜமாகப் போவதற்கான அறிகுறியா?

Doctor Vikatan: கடந்த சில மாதங்களாக எனக்கு ஒரே மாதிரியான கனவு, அதுவும் மோசமான, விரும்பத்தகாத கனவு மீண்டும் மீண்டும் வருகிறது. ஒரே கனவு திரும்பத் திரும்ப வரும்போது, அது ஒருவேளை உண்மையாகி விடுமோ என்று ந... மேலும் பார்க்க

டயாபட்டீஸை உறுதிசெய்யும் HbA1c டெஸ்ட்; ரிசல்ட் தவறாகலாம் - எச்சரிக்கும் ஆய்வும் மருத்துவ விளக்கமும்!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை (MDRF) இணைந்து நடத்திய ICMR-INDIAB ஆய்வின்படி, இந்தியாவில் சர்க்கரைநோயைக் கண்டறியஹெச்பிஏ1சி (HbA1c) எனப்படும் ... மேலும் பார்க்க

நாளை சூரிய கிரகணம் - கிரகண நேரத்தில் கர்ப்பிணிகள் வெளியே செல்லக் கூடாதா? - மருத்துவர் விளக்கம்!

கிரகண நேரத்தில் வெளியே செல்லக் கூடாது, சாப்பிடக் கூடாது, தண்ணீர் குடிக்கக் கூடாது என்று காலம் காலமாக பல அறிவுரைகளைக் கேட்டு வருகிறோம். இதில் அதிகமான எச்சரிக்கைகள் சொல்லப்படுவது கர்ப்பிணிகளுக்குத்தான்.... மேலும் பார்க்க

Kerala: "மகளின் உடல் உறுப்புகள் பொருத்தப்பட்ட குழந்தைகளைக் காணச் செல்வோம்" - ஆலின் ஷெரினின் பெற்றோர்

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் மல்லப்பள்ளி மலையாற்றூரைச் சேர்ந்த அருண் ஆபிரகாம் - ஷெரின் ஆன் ஜான் தம்பதியினரின் ஒரே மகள் ஆலின் ஷெரின் ஆபிரகாம்.பிறந்து 10 மாதங்களே ஆன ஆலின் ஷெரினுடன் ஷெரின் ஆன் ஜா... மேலும் பார்க்க