செய்திகள் :

Doctor Vikatan: ஒல்லியான குழந்தைகளுக்கு சாக்லேட், பிஸ்கட், ஸ்வீட்ஸ் கொடுத்தால் வெயிட் ஏறுமா?

post image

Doctor Vikatan: என் உறவினரின் 4 வயது பெண் குழந்தை மிகவும் ஒல்லியாக இருக்கிறாள். அவளது வெயிட்டை அதிகரிக்க என் உறவினர், அவளுக்கு நிறைய சாக்லேட், பிஸ்கட், ஸ்வீட்ஸ் எல்லாம் கொடுக்கிறார். 'குழந்தைதானே... ஒண்ணும் ஆகாது....' என்கிறார். இந்த அணுகுமுறை சரியா... உடல் எடை குறைவான குழந்தையை எப்படித் தேற்றுவது?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரான ஷைனி சுரேந்திரன்.

சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.
சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.

குழந்தையின் எடை குறித்துக் கவலைப்படுவதற்கு முன், முக்கியமான ஒன்றைச் செய்ய வேண்டும். குழந்தைகள் கண்ட இடங்களில் விளையாடுவார்கள். கை கழுவாமல் சாப்பிடுவார்கள். அதனால் ஏராளமான கிருமிகள் அவர்களது உடலுக்குள் போகும்.

எனவே, டீவேர்மிங் (Deworming) எனப்படும் புழு நீக்கம் மிக முக்கியம். வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்கள் என்றால் இந்த டீவேர்மிங் விஷயத்தை நிச்சயம் பின்பற்ற வேண்டும்.

குழந்தைகளுக்கு எந்த உணவைக் கொடுத்தாலும் அதில் நிறைய வைட்டமின்கள், தாதுக்கள், புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் என எல்லாம் இருக்கும்படி, ஊட்டச்சத்து மிக்கதாகப் பார்த்துக் கொடுக்க வேண்டும்.

உதாரணத்துக்கு, குழந்தைகளுக்கு வெறும் இட்லி, தோசை மட்டும் கொடுக்காமல், வேகவைத்த நேந்திரம் பழம், வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சேனைக்கிழங்கு வறுவல் போன்றவற்றைக் கொடுக்கலாம். முதலில் கொஞ்சமாகக் கொடுத்துப் பழக்கிவிட்டு, போகப் போக அளவை அதிகரிக்கலாம்.

உணவு இடைவேளைகளுக்கு இடையில் வெற்று கலோரிகள் கொண்ட சிப்ஸ் போன்றவற்றைக் கொடுக்கக்கூடாது. சிலர் குழந்தைகளுக்கு நிறைய தண்ணீர் கொடுப்பார்கள். அதனால் வயிறு நிறைந்துவிடும். ஆனால், மறுபடி கொஞ்ச நேரத்திலேயே பசிக்கிறது என்பார்கள்.

எனவே, மூன்று வேளை உணவை நல்ல ஊட்டச்சத்து மிக்கதாகப் பார்த்துக் கொடுக்க வேண்டும். உதாரணத்துக்கு, சப்பாத்தி கொடுக்கிறீர்கள் என்றால், அதனுள் முட்டை வைத்து 'எக் ரோல்' ஆகக் கொடுக்கலாம். அல்லது சப்பாத்திக்குள் கேரட், பீட்ரூட் எனக் காய்கறிக் கலவையை ஸ்டஃப் செய்து கொடுக்கலாம். பனீர் ஸ்டஃப் செய்தும் கொடுக்கலாம்.

சாதம் கொடுக்கும்போதும், அதை பனீர் புலாவ், காய்கறி புலாவ் என சத்தானதாகச் செய்து கொடுக்கலாம்.

சாதம் கொடுக்கும்போதும், அதை பனீர் புலாவ், காய்கறி புலாவ் எனச் சத்தானதாகச் செய்து கொடுக்கலாம். வேகவைத்து மசித்த உருளைக்கிழங்குடன், காய்கறிகள், பனீர் சேர்த்து கட்லட்டாகச் செய்து கொடுக்கலாம்.

குழிப்பணியாரத்தில் கொத்துக்கறி சேர்த்துச் செய்து கொடுக்கலாம். முட்டை தோசை குழந்தைகளுக்கான மிகச் சிறந்த உணவு. காய்கறிகள் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு அவற்றை மஃபின்ஸ் வடிவில் செய்து கொடுக்கலாம்.

மஃபின், கப் கேக் எல்லாம் இனிப்பாகத்தான் இருக்க வேண்டும் என அவசியமில்லை. காரமாகவும் இருக்கலாம். இப்படி ஒவ்வொரு வேளை உணவிலும் புரதம் இருக்கும்படி பார்த்துக்கொடுக்க வேண்டும். இவற்றின் மூலம் ஆரோக்கியமான வழிகளில் குழந்தையின் உடல் எடையை அதிகரிக்கச் செய்யலாம்.

மிக முக்கியமாக, குழந்தைகளை இரவு 7.30 - 8 மணிக்குள் தூங்கப் பழக்க வேண்டும். தாமதமான தூக்கம் அவர்களது வளர்ச்சியை நிச்சயம் பாதிக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

'ஜிம்' ஓவர்டோஸ்: கவனிக்க வேண்டிய மனநல அறிகுறிகள்!

இன்று பலரும் ஃபிட்னஸில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஜிம்முக்கு செல்வதில் தொடங்கி நடைப்பயிற்சி, ஜாகிங் செல்வது என தங்களால் இயன்ற வகையில் ஃபிட் ஆக இருக்க முயற்சித்து வருகின்றனர். இது ஆரோக்கியமானதுதான் எ... மேலும் பார்க்க

Doctor Vikatan: கோடையில் படுத்தும் கிட்னி ஸ்டோன்ஸ்... வாழைத்தண்டு ஜூஸ்தான் சரியான தீர்வா?

Doctor Vikatan: எனக்கு கோடைக்காலம் ஆரம்பித்தாலேகிட்னி ஸ்டோன்ஸ் எனப்படும் சிறுநீரகக் கற்கள் பிரச்னை வர ஆரம்பித்துவிடும். இந்த வருடமாவது கோடையில் அந்தப் பிரச்னையில்இருந்து விலகி இருக்க நினைக்கிறேன். தின... மேலும் பார்க்க

Apollo: 8000 ரோபோடிக் அறுவை சிகிச்சை; வெற்றிகரமாக செய்து சாதனைப் படைத்த அப்போலோ

அப்போலோ மருத்துவமனைகள் (Apollo Hospitals) பல்வேறு மருத்துவப் பிரிவுகளில் 8,000-க்கும் மேற்பட்ட ரோபோடிக் (எந்திர மனித கரம் மூலம் செய்யப்படும் அறுவை வெற்றிகரமாக நிறைவு செய்து சாதனை படைத்துள்ளது. மிகத் த... மேலும் பார்க்க

Doctor Vikatan: திரும்பத் திரும்ப வரும் ஒரே கனவு... நிஜமாகப் போவதற்கான அறிகுறியா?

Doctor Vikatan: கடந்த சில மாதங்களாக எனக்கு ஒரே மாதிரியான கனவு, அதுவும் மோசமான, விரும்பத்தகாத கனவு மீண்டும் மீண்டும் வருகிறது. ஒரே கனவு திரும்பத் திரும்ப வரும்போது, அது ஒருவேளை உண்மையாகி விடுமோ என்று ந... மேலும் பார்க்க

டயாபட்டீஸை உறுதிசெய்யும் HbA1c டெஸ்ட்; ரிசல்ட் தவறாகலாம் - எச்சரிக்கும் ஆய்வும் மருத்துவ விளக்கமும்!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை (MDRF) இணைந்து நடத்திய ICMR-INDIAB ஆய்வின்படி, இந்தியாவில் சர்க்கரைநோயைக் கண்டறியஹெச்பிஏ1சி (HbA1c) எனப்படும் ... மேலும் பார்க்க

நாளை சூரிய கிரகணம் - கிரகண நேரத்தில் கர்ப்பிணிகள் வெளியே செல்லக் கூடாதா? - மருத்துவர் விளக்கம்!

கிரகண நேரத்தில் வெளியே செல்லக் கூடாது, சாப்பிடக் கூடாது, தண்ணீர் குடிக்கக் கூடாது என்று காலம் காலமாக பல அறிவுரைகளைக் கேட்டு வருகிறோம். இதில் அதிகமான எச்சரிக்கைகள் சொல்லப்படுவது கர்ப்பிணிகளுக்குத்தான்.... மேலும் பார்க்க