KH x RK: ரஜினி கமலின் `12-07' சென்டிமென்ட்; நெல்சனுக்கு ஸ்வீட் ஷாக் கொடுத்த ரஜின...
WhatsApp Update: இனி குரூப்பில் பழைய மெசேஜ்களைப் பார்க்க 'ஸ்கிரீன்ஷாட்' தேவையில்லை!
வாட்ஸ்அப் தனது குரூப் பயனர்களுக்காக ஒரு முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. ஒரு வாட்ஸ்அப் குழுவில் நாம் இணையும் போது, இணைந்த பிறகு வரும் செய்திகளை மட்டுமே பார்க்க முடியும். ஆனால், இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள 'குரூப் மெசேஜ் ஹிஸ்டரி' (Group Message History) வசதி அந்தத் தடையை நீக்கியுள்ளது.

இனி, புதிய உறுப்பினர்கள் இணைந்ததற்கு முந்தைய 14 நாட்களில் பகிரப்பட்ட செய்திகளில், அதிகபட்சம் 100 செய்திகள் வரை அவர்களுக்குக் காட்டப்படும். இந்த வசதி தானாகச் செயல்படாது. குழுவின் அட்மின்கள்தான் செயல்படுத்த முடியும்.
Group Settings சென்று 'Send message history' என்ற விருப்பத்தை ஆன் (On) அல்லது ஆஃப் (Off) செய்யலாம். புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் போது, அவர்களுக்கு எத்தனை செய்திகளைக் காட்ட வேண்டும் (25, 50, 75 அல்லது 100) என்பதையும் அட்மின்கள் முடிவு செய்யலாம்.
பழைய செய்திகள் புதிய உறுப்பினருக்குப் பகிரப்படும்போது, குழுவில் உள்ள மற்றவர்களுக்கு அது குறித்த அறிவிப்பு உடனடியாகச் செல்லும். யார் செய்திகளைப் பகிர்ந்துள்ளார், எந்த நேரத்திலான செய்திகள் பகிரப்பட்டுள்ளன போன்ற விவரங்கள் குழுவில் உள்ள அனைவருக்கும் தெரியும். இதனால் குழுவின் அந்தரங்கம் (Privacy) உறுதி செய்யப்படுகிறது.

யாருக்கு அதிக பயன்?
* அலுவலகக் குழுக்களில் புதிய பணியாளர்கள் சேரும் போது முந்தைய விவாதங்களைத் தெரிந்துகொள்ள உதவும்.
* மாணவர்கள் இடையில் இணையும்போது பாடங்கள் குறித்த முந்தைய தகவல்களைப் பெறலாம்.
* சமூகக் குழுக்களில் நடக்கும் விவாதங்களின் பின்னணியைப் புரிந்துகொள்ள இது வசதியாக இருக்கும்.
இந்த அம்சம் தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் (iOS) பயனர்களுக்குப் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. உங்கள் வாட்ஸ்அப் செயலியைப் புதுப்பிப்பதன் மூலம் (Update) இந்த வசதி உங்களுக்குக் கிடைத்துள்ளதா என்பதைச் சரிபார்க்கலாம்.




















