செய்திகள் :

இஸ்ரேல் தேர்தல் நாளை: "சிறந்த போர்வீரர் என்பதை நினையுங்கள்" - நெதன்யாகுவுக்கு ட்ரம்ப் ஆதரவு

post image

நாளை (அக்டோபர் 27, 2026) இஸ்ரேலில் தேர்தல் நடைபெற உள்ளது.

2023-ம் ஆண்டு ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேலில் நடக்கும் முதல் தேர்தல் இது. தற்போது ஈரானுடன் போரில் மறைமுகமாக இருந்து வருகிறது இஸ்ரேல்.

இந்த நேரத்தில் வரும் இஸ்ரேல் தேர்தல் தற்போதைய அதிபர் நெதன்யாகுவிற்கு நெருக்கடியை தந்துள்ளது. இவருக்கு எதிராக இஸ்ரேலின் முன்னாள் இராணுவத் தளபதி காடி ஐசன்கோட் களம் காண்கிறார்.

நெதன்யாகுவிற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...
நெதன்யாகு - ட்ரம்ப்
நெதன்யாகு - ட்ரம்ப்

"எதிரி உட்பட அனைவரும் அறிந்தது போல, வெற்றிப் பயணங்களில் பிபியும் (நெதன்யாகு) நானும் ஒரு சிறந்த நல்லுறவைக் கொண்டுள்ளோம்.

உலகின் முதன்மை பயங்கரவாத ஆதரவு நாடான ஈரான் அணுஆயுதத்தைப் பெறுவதைத் தடுக்கும் 'ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்'-ஐ செயல்படுத்தினோம்.

அதன் தொடர்ச்சியாக 'ஆபரேஷன் எபிக் ஃப்யூரி'-ஐ மேற்கொண்டோம். தற்போது ஈரானிடம் கடற்படையோ, விமானப்படையோ எதுவுமில்லை.

ஈரானின் பணவீக்கம் 301% வரை உயர்ந்துள்ளதோடு, அவர்களின் ராணுவமும் பொருளாதாரமும் சீர்குலைந்து போய்விட்டன.

நமது கடற்படை முற்றுகை அவர்களால் கச்சா எண்ணெயைப் பெற முடியாமல் தடுத்துள்ளது. மேலும் அவர்களின் ராணுவ மற்றும் அரசியல் தலைமையின் இரண்டு நிலைகளும் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டன.

நீங்கள் வாக்குச்சாவடிக்குச் செல்லும்போது பிபி ஒரு சிறந்த போர்வீரராகப் பிரதமராகச் செயல்பட்டார் என்பதை நினைவில் வையுங்கள்!

சில கொடிய மனிதர்களால் அமெரிக்கா 'பெரிய சாத்தான்' என்றும், இஸ்ரேல் 'சிறிய சாத்தான்' என்றும் அழைக்கப்பட்டன.

இனி உலகெங்கிலும் 'அமெரிக்காவுக்கு அழிவு, இஸ்ரேலுக்கு அழிவு' என்ற கோஷங்களைக் கேட்க முடியாது. கேட்கவும் கூடாது. பிபி நெதன்யாகுவுக்கு வாக்களித்துப் பிரதமராகத் தேர்ந்தெடுங்கள், நாம் தொடங்கிய வேலையை நாம் முழுமையாக முடித்து ஆக வேண்டும்!"

ட்ரம்ப் பதிவு
ட்ரம்ப் பதிவு

'ஐப்பசி பௌர்ணமி, சிவன் செண்டிமெண்ட், தாமரையோடு காமாட்சி விளக்கு!' - தனுஷ் மகளிரணி கூட்ட ஹைலைட்ஸ்!

நேற்று சென்னை செம்மஞ்சேரியில் தனது நற்பணி இயக்கத்தின் மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தியிருக்கிறார் நடிகர் தனுஷ். தமிழகம் முழுவதுமிருந்து அழைத்து வரப்பட்டிருந்த 2500 க்கும் மேற்பட்ட மகளிர் அணி ந... மேலும் பார்க்க

கனமழையால் மிதக்கும் கோவை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் மக்கள் அவதி!

வடகிழக்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில், நேற்று பரவலாக கனமழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்சமாக மதுக்கரையில் 13 செ.மீ., வாரப்பட்டியில் 12.8 செ.மீ, ப... மேலும் பார்க்க

’தனுஷ் அரசியலுக்கு வந்தால் நாங்கள் வரவேற்போம்’ – கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ.

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் பொதுமக்களிடையே செயற்கை நுண்ணறிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், சரவணம்பட்டி பகுதியில் ‘கற்க ஏ.ஐ.’ திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ்... மேலும் பார்க்க

``அவரை இக்னோர் பண்ணுங்க... அவரும் அவர் ஸ்டேட்மெண்டும்" - சேகர் பாபு குறித்து அமைச்சர் மரிய வில்சன்!

சென்னை காசிமேட்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) மற்றும் TNPTC இணைந்து மானிய விலையிலான எரிபொருள் விற்பனை மையத்தை தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள் ஸ்ரீநாத், மரிய வில்சன் உள்ளிட்டோர் கலந்... மேலும் பார்க்க