செய்திகள் :

ஈக்வடாரில் அதிர்ச்சி சம்பவம்; தேவாலயத்தில் வழிபாடு செய்துகொண்டிருந்த பாதிரியார் உயிரிழப்பு! - Video

post image

ஈக்வடார் நாட்டின் குவாயாகில் (Guayaquil) நகரில், தேவாலயத்தில் வழிபாடு நடத்திக்கொண்டிருந்த பாதிரியார் மீது பெரிய மரச் சிலுவை விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்ன நடந்தது?

அக்டோபர் 17, 2026 அன்று, குவாயாகில் நகரில் உள்ள Nuestra Señora del Perpetuo Socorro தேவாலயத்தில் வழிபாடு நடைபெற்றது. அப்போது தேவாலயத்தின் பங்குத் தந்தையான ஃபாதர் பாட்ரிசியோ ஆல்ஃபிரெடோ சான்செஸ் மோலினாரி (Father Patricio Alfredo Sánchez Molinari) வழிபாட்டை நடத்திக்கொண்டிருந்தார்.

அவருக்குப் பின்னால் சுவரில் பொருத்தப்பட்டிருந்த பெரிய மரச் சிலுவை திடீரென அவரின் மேல் விழுந்தது. இந்த நிகழ்வு நேரலையில் ஒளிபரப்பப்பட்டதால், சம்பவத்தின் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவின. அங்கிருந்த வழிபாட்டாளர்கள் உடனடியாக அவருக்கு உதவ முயன்றனர்.

குவாயாகில் பேராயர் அலுவலகம் அக்டோபர் 18 அன்று பாதிரியாரின் மரணத்தை உறுதிப்படுத்தியது. அவர் கிறிஸ்தவ மதத்தின் Congregation of the Most Holy Redeemer என்ற மத அமைப்பின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்

வழிபாட்டின்போது நடந்த இந்த விபத்து, தேவாலயங்களில் பெரிய சிலைகள் மற்றும் அலங்காரப் பொருட்களைப் பாதுகாப்பாகப் பொருத்துவதன் அவசியத்தை மீண்டும் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளது.

5 சுற்று துப்பாக்கிச்சூடு; சில நொடிகள் இயங்க மறுத்த துப்பாக்கி; நூலிழையில் உயிர் தப்பிய டைகர் ஷெராப்

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் நேற்று மாலை மும்பை அந்தேரி ஜுகுவில் உள்ள கால்பந்து மைதானத்தில் இருந்து காரில் புறப்பட்ட போது இரண்டு பேர் அவரை நோக்கி சுட்டனர். மொத்தம் 5 ரவுண்ட் சுடப்பட்டதாக கூறப்படுகிறது... மேலும் பார்க்க

நொய்டா: நூடுல்ஸ் சாப்பிட்ட 3 குழந்தைகள், பெற்றோர் இறந்ததில் திருப்பம்; சொத்து பிரச்னையில் தற்கொலையா?

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் வசித்து வந்த மகேஷ் என்பவரும், அவரது மனைவி லலிதா மற்றும் மூன்று குழந்தைகளும் இரண்டு நாட்களுக்கு முன்பு இரவில் நூடுல்ஸ் சாப்பிட்டுவிட்டு படுத்தனர். காலையில் அவர்கள் இறந்... மேலும் பார்க்க

`எங்கள் பேச்சை கேட்காமல் சல்மான் கானுடன் பணியாற்றுகிறார்'- நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் நேற்று மாலை மும்பை ஜுகு பகுதியில் உள்ள கால்பந்து மைதானம் ஒன்றில் இருந்து தனது காரில் கிளம்பியபோது பைக்கில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு நடத... மேலும் பார்க்க

`இரவில் நூடுல்ஸ் சாப்பிட்டு உறங்கினார்கள்'; காலையில் சடலமாக மீட்கப்பட்ட 3 குழந்தைகள், பெற்றோர்!

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் ரபுபுரா பகுதியில் வசித்து வந்தவர் மகேஷ். இவரது மனைவி லலிதா(35). இவர்களுக்கு 11 வயது முதல் 7 வயதுக்குள் மூன்று குழந்தைகள். இவர்கள் இரவில் சாப்பிட்டுவிட்டு உறங்க சென்றனர்.... மேலும் பார்க்க

அனுமதியின்றி கட்டுமானம்: நடிகர் அஜய் தேவ்கன் வீட்டில் சட்டவிரோதமாக கட்டியதை இடித்த மாநகராட்சி!

மும்பை ஜுகு பகுதியில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுக்கு கபோல் ஹவுசிங் சொசைட்டியில் 7,802 சதுர அடி பங்களா இருக்கிறது. அந்த பங்களாவின் குறிப்பிட்ட ஒரு பகுதியை ஸ்பா மற்றும் சலூன் அமைக்க அஜய் தேவ்கன் வாடகை... மேலும் பார்க்க

போராட்டம் நடத்த தடை விதிப்பு: டெல்லி ஜந்தர் மந்தர் கேட்டில் ஏறி குதித்த காக்ரோச் கட்சியினர்!

டெல்லியில் பொதுமக்கள் போராடுவதற்கான இடமாக கருதப்பட்டு வந்த ஜந்தர் மந்தரில் போக்குவரது நெருக்கடி உட்பட பல்வேறு காரணங்களை கூறி அங்கு போராட்டம் நடத்த டெல்லி போலீஸார் தடை விதித்துள்ளனர். இதையடுத்து இன்று ... மேலும் பார்க்க