செய்திகள் :

போராட்டம் நடத்த தடை விதிப்பு: டெல்லி ஜந்தர் மந்தர் கேட்டில் ஏறி குதித்த காக்ரோச் கட்சியினர்!

post image

டெல்லியில் பொதுமக்கள் போராடுவதற்கான இடமாக கருதப்பட்டு வந்த ஜந்தர் மந்தரில் போக்குவரது நெருக்கடி உட்பட பல்வேறு காரணங்களை கூறி அங்கு போராட்டம் நடத்த டெல்லி போலீஸார் தடை விதித்துள்ளனர். இதையடுத்து இன்று காலையில் ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி தொண்டர்கள் அதன் தலைவர்கள் அசுதோஷ் ரங்கா மற்றும் சவுரவ் தாஸ் தலைமையில் அங்கு குவிந்தனர். அவர்கள் அங்கு போடப்பட்டு இருந்த கேட்டில் ஏறிக்குதித்தனர். காக்ரோச் ஜனதா கட்சி தலைவர் அபிஜீத் திப்கே ஜந்தர் மந்தரில் நடந்த திடீர் போராட்டத்தின் வீடியோவை வெளியிட்டார்.

அதில் அங்கு காக்ரோச் ஜனதா கட்சி தொண்டர்கள் அதன் தலைவர்கள் தலைவர் ரங்கா மற்றும் தாஸ் ஆகியோர் கைகளில் கொடிகளுடன் ஒரு இரும்பு கேட்டில் ஏறி குதித்து, அந்தப் பகுதிக்குள் நுழைந்து போராட்டம் நடத்துவதைக் காணலாம். அப்போது அங்கு நின்றிருந்த போலீசார் அவர்களை விரட்டியடித்ததால் அந்த கும்பல் முழக்கங்களை எழுப்பியது. போராட்டக்காரர்கள் பாரத் மாதா கி ஜெய் மற்றும் இன்குலாப் ஜிந்தபாத் கோஷங்களை எழுப்பிய போது அவர்களை தடுக்க முயன்ற போலீசாருடன் சிறிது சிறிதாக ஓடினார்கள்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தி அழைத்துச் சென்றனர். வீடியோவை வெளியிட்டு, "நீங்கள் எதிர்ப்பை குறைத்து மதிப்பிட முடியாது. ஜந்தர் மந்தரை போராட்டத் தளமாக நீக்கியதில் இருந்து பிரதமரின் அச்சம் தெளிவாகிறது. ஜந்தர் மந்தரை இனி நியமிக்கப்பட்ட போராட்டத் தளத்தில் இருந்து நீக்கினால் போராட்டங்கள் நின்றுவிடும் என்று அவர் நினைக்கிறார். ஆனால் அது நடக்காது. ஜந்தர் மந்தர்கள் இப்போது நாடு முழுவதும் உருவாகும்," என்று அவர் கூறினார். இது குறித்து காக்ரோச் ஜனதா கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ் கூறுகையில், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு போலீஸாருக்கு கடிதம் கொடுத்ததாகவும், அதனை போலீசார் ஏற்றுக்கொண்டனர். இருப்பினும், கட்டுப்பாடுகள் குறித்து எந்த தேதியும் வழங்கப்படவில்லை மற்றும் விளக்கமும் அளிக்கப்படவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.

ஹூதிகள் தாக்குதல்: ஒவ்வொரு அரண்மனையாக மாற்றிக்கொண்டே இருக்கும் சவுதி இளவரசர்!

வளைகுடாவில் உள்ள ஏமன் நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபிய கூட்டுப்படை கிளர்ச்சி அமைப்பான ஹூதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது. அதோடு ஹூதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் இடத... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: யாசகம் பெற்ற பணத்தில் நிவாரண நிதி வழங்கிய முதியவர் - நெகிழ்ந்த மாவட்ட ஆட்சியர்!

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த முதியவர் ஒருவர் தான் தர்மமாக பெற்ற ரூ.10 ஆயிரம் பணத்தை கல்வி வளர்ச்சிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி ... மேலும் பார்க்க

இனி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த முடியாது: டெல்லியில் போராட்டம் நடத்த புதிதாக 3 இடங்கள் அறிவிப்பு

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பெண் மல்லியுத்த வீராங்கனைகள், காக்ரோச் ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டங்கள் பெரிய அளவில் பேசப்பட்டது. இப்போதும் தொடர்ந்து அங்கு போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் ... மேலும் பார்க்க

``இனி பெற்றோருடன் நேரத்தை செலவிட விரும்புகிறேன்..!" - மைக்ரோசாஃப்ட் துணைத் தலைவர் ஓய்வு அறிவிப்பு

ஐ.டி கம்பெனிகள் தொடர்ந்து ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விசாவிற்காக புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்த பிறகு இந்தியர்களிடம் படிப்படியாக அமெரிக்க மோகம் கு... மேலும் பார்க்க

டெல்லி: "என் நண்பனைக் கைது செய்துள்ளனர்"- மும்பையில் போலீஸ் வேனை மறித்த காக்ரோச் கட்சி பெண் ஆதரவாளர்

டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சியினர் தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை பதவியில் இருந்து விலக கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தில் பங்கேற்க வந்த காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்களை டெல்லி போ... மேலும் பார்க்க

இங்கிலாந்து வனவிலங்கு பூங்கா: புலி அடைப்பிடத்தில் நுழைந்தவர் உயிரிழப்பு; பதற வைக்கும் வீடியோ

இங்கிலாந்தில் உள்ள வனவிலங்கு பூங்காவில், புலி அடைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் நுழைந்த நபர், அதன் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இங்கிலாந்தின் டான்காஸ்டர் அருகே அமைந்துள்ள Y... மேலும் பார்க்க