செய்திகள் :

``சபாநாயகர் அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்றது செல்லும்!"- சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

post image

அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொறடா உத்தரவை மீறி, தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மதுராந்தகம் - மரகரம் குமரவேல், தாராபுரம் - சத்தியபாமா, அம்பாசமுத்திரம் - இசக்கி சுப்பையா, பெருந்துறை - ஜெயக்குமார், கரூர் - எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை - சி.விஜயபாஸ்கர் ஆகிய ஆறு பேருக்கு எதிரான தகுதிநீக்க நடவடிக்கை நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், அவர்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம் எல் ரவி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி
அக்ரி கிருஷ்ணமூர்த்தி

இந்த வழக்குகளை, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில், இந்த வழக்கில் சபாநாயகர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ராஜினாமா செய்தவர்களிடம் சுயமாக பதவி விலகினார்களா என விசாரணை நடத்தி, திருப்தியடைந்த பின், ஏற்றுக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அர்த்தமுள்ள எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை.

ராஜினாமா கடிதங்களை அளித்த சில நிமிடங்களில், தலைமைச் செயலகத்தில் அமைச்சரை சந்தித்து தவெகவில் இணைந்திருக்கின்றனர். ஆனால் இதுசம்பந்தமாக சபாநாயகர் முழுமையான விசாரணை நடத்தாமல், ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ளார்.

ராஜினாமாவை ஏற்கும் முன், தகுதிநீக்க புகார் அளித்த மனுதாரரான அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு எந்த நோட்டீசும் அனுப்பப்படவில்லை. குதிரை பேரம் நடந்துள்ளது குறித்து ஆளுநருக்கும் புகார் அளிக்கப்பட்டது எனச் சுட்டிக்காட்டப்பட்டது.

சபாநாயகர் தரப்பில், ராஜினாமா ஏற்றுக் கொண்டதால், தகுதிநீக்க நடவடிக்கை இல்லாமல் ஆகி விடாது. ராஜினாமாவை ஏற்றது சட்டப்படி செல்லுபடியானது தான். ஒரு எம்.எல்.ஏ. ராஜினாமா செய்ய விரும்பினால், பதவியில் நீடிக்கும்படி நிர்பந்திக்க முடியாது. உறுப்பினர்களின் ராஜினாமாவை ஏற்காவிட்டால் அது அரசியல் சாசன கடமையை செய்யத் தவறியதாகி விடும்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

சுய விருப்பப்படி ராஜினாமா செய்தாரா என்பதை மட்டும் தான் விசாரிக்கமுடியும். அமைச்சர் பதவி, பணத்துக்காக ராஜினாமா செய்தார்களா, குதிரைபேரம் நடந்ததா என்பதை தகுதிநீக்க நடவடிக்கையில் தான் விசாரிக்க முடியும். ராஜினாமாவின் நோக்கம் என்ன என்பதை, ராஜினாமாவை ஏற்கும் போது விசாரிக்க முடியாது. சபாநாயகர் எந்த விதிமீறலும் செய்யவில்லை. இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் தரப்பில், எம்.எல்.ஏ.வாக இருந்து சலுகைகளை பெற்றுக் கொண்டு வேறு கட்சிக்கு ஆதரவளித்தால் தான் ஊழல் நடவடிக்கை. எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு, வேறு கட்சிக்கு இணைவது, ஜனநாயக அரசியல். எம்.எல்.ஏ.வின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதால், தகுதி நீக்க நடவடிக்கையை தன்னிச்சையாக செல்லாததாக்கி விடாது. எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா உண்மையானவை; சுய விருப்பப்படி அளிக்கப்பட்டவை.

நேரில் சந்தித்து, கைப்பட எழுதி அளித்த ராஜினாமா கடிதத்தின் உண்மைத்தன்மையை சந்தேகிக்க முடியாது. எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை தொகுதி மக்கள் தான் கேள்வி கேட்க முடியும் என வாதிடப்பட்டது.

சட்டப்பேரவை செயலாளர் தரப்பில், உண்மையாக , சுய விருப்பத்தின் அடிப்படையில் எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகல் கடிதம் அளித்தால், அதை சபாநாயகர் ஏற்காமல் இருக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தனர்.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

இந்த நிலையில், இந்த வழக்குகளில் தலைமை நீதிபதி அமர்வு இன்று பிறப்பித்த தீர்ப்பில், ஆறு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது சரியே; தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருப்பதால் ராஜினாமா ஏற்க தடையில்லை;

ராஜினாமா ஏற்ற உத்தரவு சட்டப்படி செல்லுபடியானது என உத்தரவிட்டுள்ளனர். மேலும், தகுதி நீக்க நடவடிக்கை குறித்த முடிவை சபாநாயகர் இரண்டு மாதங்களில் எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

"ஒருவேளை வந்தால் உடனே சேர்த்துக்கொள்ளுங்கள்" - பாஜக தலைவருக்கு முதல்வர் சிவக்குமார் பதிலடி

கர்நாடகாவில் ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து, பா.ஜ.க ஆட்சியை பிடித்தது. தற்போதும் அது போன்ற ஒரு முயற்சியில் பா.ஜ.க ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் கர்நாடகா முதல்வர் சிவக்குமா... மேலும் பார்க்க

டெல்லி: 1993 முதல் 2026 வரை ! - ஜந்தர் மந்தரில் நடைபெற்ற முக்கிய போராட்டங்கள் என்னென்ன?

SIR விவகாரம் தொடர்பாக, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக 'இந்தியா' கூட்டணி மற்றும் 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) ஆகியவை மத்திய டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் சூழலில் ஜந்தர் மந்தர் பகுதியை... மேலும் பார்க்க

“சோதனை காலகட்டத்தில் அன்புமணிக்கு உறுதுணையாக நின்றது அதிமுக!” - அக்ரி கிருஷ்ண மூர்த்தி பேட்டி

55-வது ஆண்டுவிழாவைக் கொண்டாடிவரும் அ.தி.மு.க, இடைத்தேர்தலில் சிட்டிங் தொகுதிகள் இரண்டையும் த.வெ.க-விடம் பறிகொடுத்திருக்கிறது. இதையடுத்து, மீண்டும் 'அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரா... மேலும் பார்க்க

ரஷ்யாவுடன் டீசல் 'டீல்' போட்ட ட்ரம்ப்; இப்போது குற்றச்சாட்டுகளை ஐரோப்பா பக்கம் திருப்புகிறார்!

ரஷ்யாவுடன் வணிகம் செய்யக்கூடாது. அப்படி வணிகம் செய்யும் டாப் 5 நாடுகள் மீது இரண்டாம் கட்ட வரி விதிக்கப்படும் என்றும்,ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்பவர்கள் உக்ரைன் போருக்கு நிதி அளிக்கிறார்க... மேலும் பார்க்க

ADMK: " நல்லவேளை, எடப்பாடி பழனிசாமி என்னை கட்சியில் இருந்து நீக்கினார்" செங்கோட்டையன்!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள செம்மாண்டம் பாளையம் பகுதியில் இயங்கி வந்த பகுதி நேர நியாய விலை கடையை முழு நேர கடையாக மாற்றி வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று காலை ரிப்பன் வெட்டி ... மேலும் பார்க்க

"திமுக ஆட்சியில் ரூ.5-9-க்கு வாங்கிய ஒரு யூனிட் மின்சாரம் இப்போது ரூ.37-ஆ?" - TRB ராஜா கேள்வி

தமிழ்நாட்டில் தொடரும் மின்வெட்டு தவெக அரசிற்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்து வருகிறது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, தனியாரிடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்குக் கொள்முதல் செய்ய உள்ளதாக நேற்... மேலும் பார்க்க