செய்திகள் :

ADMK: " நல்லவேளை, எடப்பாடி பழனிசாமி என்னை கட்சியில் இருந்து நீக்கினார்" செங்கோட்டையன்!

post image

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள செம்மாண்டம் பாளையம் பகுதியில் இயங்கி வந்த பகுதி நேர நியாய விலை கடையை முழு நேர கடையாக மாற்றி வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று காலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்துள்ளார். தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், " எல்லாரிடமும் சகோதர பாசத்தோடு பழகக்கூடிய ஒரே மனிதராக முதலமைச்சர் விஜய் அவர்கள் இருக்கிறார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோருக்குப் பின் இவரைப் போல ஒரு உன்னதமான மனிதரை நான் பார்த்ததில்லை.

அமைச்சர் செங்கோட்டையன்

நல்லவேளையாக எடப்பாடி பழனிசாமி என்னை கட்சியில் இருந்து நீக்கினார். அங்கிருந்து வந்ததால்தான், இன்று மக்கள் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. யானை தேய்ந்து கட்டெறும்பான கதையில் இருக்கிறது இன்றைய அதிமுக. மிக விரைவில் 15 பேர் அங்கிருந்து வெளியே வர இருக்கிறார்கள். அதற்காக நேற்றுக் கூட அவர்கள் கூட்டம் போட்டுப் பேசியிருக்கிறார்கள். மிக விரைவிலேயே அது நடக்கும்" என்றார்.

"திமுக ஆட்சியில் ரூ.5-9-க்கு வாங்கிய ஒரு யூனிட் மின்சாரம் இப்போது ரூ.37-ஆ?" - TRB ராஜா கேள்வி

தமிழ்நாட்டில் தொடரும் மின்வெட்டு தவெக அரசிற்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்து வருகிறது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, தனியாரிடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்குக் கொள்முதல் செய்ய உள்ளதாக நேற்... மேலும் பார்க்க

'அதிமுகவிலிருந்து 15 பேர் தவெக வருவார்கள்; யானை தேய்ந்து கட்டெறும்பாக போன கதையாக.!'-செங்கோட்டையன்

'அதிமுகவிலிருந்து மேலும் 15 பேர் தவெகவுக்கு வர இருக்கிறார்கள்' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய செங்கோட்டையன், " அதி... மேலும் பார்க்க

“ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு ரூ.35-க்கு ஒரு யூனிட் மின்சாரமா?” - பழனிவேல் தியாகராஜன் கண்டனம்

சில மாதங்களாகவே தமிழ்நாட்டு மக்கள் மின்வெட்டால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்தப் பிரச்னையால் தவெக ஆட்சி தொடர்ந்து நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது.அமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்... மேலும் பார்க்க

கேரள கவர்னராக ஓம் பிரகாஷ் நியமனம்; ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழ்நாட்டின் முழு நேர கவர்னரானார்!

தமிழகம், கேரளா உள்ளிட்ட ஆறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ராஜேந்திர வி... மேலும் பார்க்க

"ஞானேஷ் குமாருக்கு எதிராக ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவில் 14 குறைகள்" - உச்ச நீதிமன்றம்

வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்துள்ளன என்று இந்தியா கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன.மேலும், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சி... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்; கேரளத்திற்கு ஆளுநர் மாற்றம்!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, கடந்த மார்ச் மாதம், தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவியை மேற்கு வங்கத்திற்கும், கேரளத்தின் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரை தமிழ்நாட்டிற்குப் பொறுப்பு ஆளுநர... மேலும் பார்க்க