செய்திகள் :

'அதிமுகவிலிருந்து 15 பேர் தவெக வருவார்கள்; யானை தேய்ந்து கட்டெறும்பாக போன கதையாக.!'-செங்கோட்டையன்

post image

'அதிமுகவிலிருந்து மேலும் 15 பேர் தவெகவுக்கு வர இருக்கிறார்கள்' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய செங்கோட்டையன், " அதிமுகவில் இருந்து 15 பேர் சீக்கிரமே வெளியே வர போகிறார்கள்.. இதெல்லாம் அவருக்கு (எடப்பாடி பழனிசாமி) தெரிகிறதா? என்று தெரியவில்லை.

விஜய் - செங்கோட்டையன்
விஜய் - செங்கோட்டையன்

நல்லவேளை பழனிசாமி என்னை நீக்கினார், அங்கு இருந்து வந்ததால் மக்கள் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இன்று நான் எங்கிருக்கிறேன் என்று பார்க்க வேண்டும். தப்பித்துவந்து இங்கு நான் வருவாய்த்துறை அமைச்சராக இருக்கிறேன்.

தேர்தலில் நான் வருவேன், நீ வருவாய் என்று பேசியவர்கள் இரண்டாம், மூன்றாம் இடத்துக்கு சென்றுவிட்டனர். யானை தேய்ந்து கட்டெறும்பாக போன கதையாக தற்போது அதிமுக-வின் நிலை உள்ளது. தற்போது தேர்தல் களத்தில் கூட பலரால் நிற்க முடியவில்லை.

நாங்கள் அதைச் செய்வோம், இதைச் செய்வோம். ஆட்சி இருக்காது என்று.. என்னய்யா ஆட்சி இருக்காது. எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பின் முதல்வர் விஜய்யை போல் ஒருவரை நான் பார்த்ததில்லை" என்று பேசியிருக்கிறார்

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

ADMK: " நல்லவேளை, எடப்பாடி பழனிசாமி என்னை கட்சியில் இருந்து நீக்கினார்" செங்கோட்டையன்!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள செம்மாண்டம் பாளையம் பகுதியில் இயங்கி வந்த பகுதி நேர நியாய விலை கடையை முழு நேர கடையாக மாற்றி வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று காலை ரிப்பன் வெட்டி ... மேலும் பார்க்க

"திமுக ஆட்சியில் ரூ.5-9-க்கு வாங்கிய ஒரு யூனிட் மின்சாரம் இப்போது ரூ.37-ஆ?" - TRB ராஜா கேள்வி

தமிழ்நாட்டில் தொடரும் மின்வெட்டு தவெக அரசிற்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்து வருகிறது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, தனியாரிடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்குக் கொள்முதல் செய்ய உள்ளதாக நேற்... மேலும் பார்க்க

“ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு ரூ.35-க்கு ஒரு யூனிட் மின்சாரமா?” - பழனிவேல் தியாகராஜன் கண்டனம்

சில மாதங்களாகவே தமிழ்நாட்டு மக்கள் மின்வெட்டால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்தப் பிரச்னையால் தவெக ஆட்சி தொடர்ந்து நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது.அமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்... மேலும் பார்க்க

கேரள கவர்னராக ஓம் பிரகாஷ் நியமனம்; ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழ்நாட்டின் முழு நேர கவர்னரானார்!

தமிழகம், கேரளா உள்ளிட்ட ஆறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ராஜேந்திர வி... மேலும் பார்க்க

"ஞானேஷ் குமாருக்கு எதிராக ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவில் 14 குறைகள்" - உச்ச நீதிமன்றம்

வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்துள்ளன என்று இந்தியா கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன.மேலும், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சி... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்; கேரளத்திற்கு ஆளுநர் மாற்றம்!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, கடந்த மார்ச் மாதம், தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவியை மேற்கு வங்கத்திற்கும், கேரளத்தின் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரை தமிழ்நாட்டிற்குப் பொறுப்பு ஆளுநர... மேலும் பார்க்க