செய்திகள் :

ஈரானுடன் வணிகம் செய்த 4 இந்திய நிறுவனங்கள்; இப்போது அமெரிக்காவின் ‘தடை’ வலையில்! என்ன நடக்கும்?

post image

ராணுவத் தாக்குதலிலிருந்து பொருளாதாரத் தாக்குதலுக்கு மாறியுள்ளது ஈரான் போர்.

அமெரிக்க அரசு ஈரானுக்கு எதிராக ‘Operation Economic Outcast’ என்கிற ஆபரேஷனைத் தொடங்கியுள்ளது.

இதன்படி, ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்காவின் ‘இரண்டாம் கட்ட’ வரிகள் பாயும்.

இந்த வலையில் தற்போது நான்கு இந்தியாவைச் சேர்ந்த நிறுவனங்கள் சிக்கியுள்ளன.

அவை என்னென்ன நிறுவனங்கள்? அவற்றின் மீது அமெரிக்கா சொல்லும் குற்றச்சாட்டு என்ன?

PORTEASE PARTNERS LLP (PORTEASE): ஈரானிய பெட்ரோ கெமிக்கல் பொருள்களை இந்தியாவில் இறக்குமதி செய்யப் பல சலுகைகளையும் உதவிகளையும் செய்துகொடுத்த இந்தியாவைச் சேர்ந்த சுங்கத் தரகு நிறுவனம் இது.

ஈரான் கச்சா எண்ணெய்
ஈரான் கச்சா எண்ணெய்

SADASHIVA OVERSEAS: 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2025-ம் ஆண்டு ஜூன் வரை, அமெரிக்காவால் தடைவிதிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து சுமார் 69 மில்லியன் டாலர் மதிப்பிலான ஈரானியக் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்த இந்தியாவைச் சேர்ந்த நிறுவனம் இது.

PP SOFTTECH: ஜனவரி 2024 முதல் ஜூன் 2025 வரை, சுமார் 25 மில்லியன் டாலர் மதிப்பிலான ஈரானியக் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருள்களை இறக்குமதி செய்த இந்தியாவைச் சேர்ந்த நிறுவனம் இது.

PRAKRUTEES INFRA: 2023-ம் ஆண்டு மே மாதம் முதல் 2026-ம் ஆண்டு பிப்ரவரி வரை, அமெரிக்காவால் தடைவிதிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து கிட்டத்தட்ட 25 மில்லியன் டாலர் மதிப்பிலான ஈரானியக் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்த இந்தியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இது.

இந்த நான்கு நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் தடைகள் என்னென்ன?

இந்த நிறுவனங்களின் சொத்துக்கள் மற்றும் சொத்துக்களின் மீதான உரிமைகள் அமெரிக்காவில் இருந்தாலோ அல்லது அமெரிக்க நபர்களின் கட்டுப்பாட்டில் இருந்தாலோ, அவை அனைத்தும் முடக்கப்படும்.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

இந்தச் சொத்துகள் சார்ந்த பரிவர்த்தனை அமெரிக்காவிலோ, அமெரிக்கா சார்ந்த வழியிலோ நடந்தால், அவற்றிற்குத் தடை.

இந்த நிறுவனங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட நபர்களைத் தடை செய்துள்ளது அமெரிக்கா. அவர்களுக்கு நிதி உள்ளிட்ட வகைகளில் உதவி செய்வதோ அல்லது அவர்களிடமிருந்து இந்த மாதிரியான உதவிகளைப் பெறுவதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

"இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்களில் ஸ்டாலினும் ஒருவர்..!" - CJP அபிஜித் தீப்கே

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே. டெல்லி ஜந்தர் மந்தரின் போராட்ட வெற்றிக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள பல மாநிலங்களின் பள்ளிகளுக்கு சென்று, அங்குள்ள கட்டமைப்புகளைப் பார்வையிட்டு வர... மேலும் பார்க்க

'அப்படி பேசியிருக்கக் கூடாது..!'- மதிமுக குறித்து பேசிய செங்கோட்டையன்; துரை வைகோ ரியாக்ஷன் என்ன?

மதிமுக குறித்த தவெக அமைச்சர் செங்கோட்டையனின் பேச்சு குறித்து அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ பேசியிருக்கிறார்.கோபிசெட்டிப் பாளையத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன... மேலும் பார்க்க

அமெரிக்க வரியால் வணிகங்களுக்கு பாதிப்பு; இதனால், அவற்றுக்கு $7.5 பில்லியன் கனட அரசு உதவி!

கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி முதல், கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி ஆகும் சில பொருள்களுக்கு 50 சதவிகித வரியை விதித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். மேலும், “2027-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி மு... மேலும் பார்க்க

கச்சா எண்ணெய் விலையில் அமெரிக்காவிற்கும், ட்ரம்பிற்கும் சறுக்கல்; ஓமன், ஈரானுக்கு சக்சஸ்?

ஈரான் போர் காரணமாக, கடந்த சில நாள்களாகவே கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாவிற்கு 90 டாலர்களைத் தாண்டி விற்பனையாகிக் கொண்டிருந்தது. இந்த நேரத்தில்தான், கடந்த 19-ம் தேதி, ஈரானுக்கு எதிரான ‘பொருளாதார D-Day’-... மேலும் பார்க்க

`பரந்தூர் விமான நிலையத்திற்குப் பதிலாக மீனம்பாக்கத்தில் 5-வது முனையம்'- எம்.பி சச்சிதானந்தம் யோசனை!

திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு பகுதியில் செயல்பட்டு வந்த பாஸ்போர்ட் அலுவலகம் தற்போது திண்டுக்கல் தலைமை தபால் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான கூட்டம் பாஸ்போர்ட் அலுவலகம் அருகே உள்ள தனியார் திர... மேலும் பார்க்க