செய்திகள் :

ஈரோடு: கலெக்டர் கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த நபர்; போலீஸ் விசாரணை

post image

ஈரோடு மாவட்ட ஆட்சியராக பதவி வகித்து வருகிறார் கந்தசாமி. தமிழ்நாடு அரசின் 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் இன்று நடைபெற்ற சிறப்பு முகாமில் பங்கேற்றுள்ளார்.

அங்கு பல்வேறு அரசுத் திட்டப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளார்.‌

வாகன விபத்து

ஆய்வுகளை முடித்துக் கொண்டு, அரசு வாகனம் மூலம் சத்தியமங்கலத்தில் இருந்து கோபிசெட்டிபாளையம் வழியாக ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த‌ நிலையில், கோபிசெட்டிபாளையம் அடுத்த வெள்ளாளபாளையம் பிரிவு அருகே சண்முகம் என்ற நபர் தனது இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றுள்ளார்.

அப்போது, கோபியிலிருந்து வந்த மாவட்ட ஆட்சியரின் அரசு வாகனம், எதிர்பாராதவிதமாக சண்முகத்தின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு நிலைதடுமாறி சாலையில் விழுந்த சண்முகத்திற்கு தலையிலும் உடலிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்களும், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரும் உடனடியாக அவரை மீட்டு, சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதிலும், சண்முகம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த சண்முகம்
உயிரிழந்த சண்முகம்

இது குறித்து தெரிவித்த காவல்துறையினர், "ஈரோடு மாவட்டம் வெள்ளாங்கோயில் பகுதியைச் சேர்ந்த சண்முகம் (50) என்பவர் இன்று காலை கோபிசெட்டிபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தனது ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிப்பதற்காகச் சென்றுள்ளார். அங்கு பணிகளை முடித்துவிட்டு அவர் தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த சமயத்தில் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றனர்.

கார் மோதியதில் சாலையோரம் நின்ற 8 பேர் பலி: ஆம்புலன்ஸ்க்கு காத்திருந்து உயிரிழந்த தொழிலாளர்கள்

பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டத்தின் லெஹ்ராககா பகுதியில் சோடியன் கிராமத்திற்கு அருகில் உள்ள ஜக்கல் சாலையில் சாலை கட்டுமானத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் சாலையோரம் நின்று கொண்டிருந்தனர். ... மேலும் பார்க்க

Kolkata Stampede: ``என் அம்மா என் கண்முன்பே உயிரை விட்டார்..!" - தாயை பறிகொடுத்த இளைஞரின் துயரம்!

மேற்கு வங்க மாநிலம், வடக்கு கொல்கத்தாவில் உள்ள சோா்பாகன் பகுதியில் நேற்று துா்கா பூஜை பந்தல் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பந்தலைப் பாா்வையிட நுழைவாயில் பகுதியில் ஏராளமான மக்கள் காத்திருக்கின்றனர். த... மேலும் பார்க்க

நள்ளிரவில் பக்தர்கள் மீது ஏறிய லாரி; 15 பேர் பலி... நவராத்திரி விழாவில் சோகம்!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ளது புகழ்பெற்ற சீத்லா மாதா கோயில். நேற்று நவராத்திரியை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபாட்டுக்காக திரண்டிருந்தனர். இந்த நிலையில், நள்ளிரவு சுமார் 1:30 ம... மேலும் பார்க்க

சாலையோரம் மீன் விற்ற பெண்... கான்க்ரீட் இயந்திரம் மோதி பலி - தொட்டியத்தில் அரங்கேறிய சோகம்!

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள சீலைப்பிள்ளையார் புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராணி (வயது: 47). இவர், திருச்சி - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக மீன்கடை நடத்தி வந்தார். இந்நிலையி... மேலும் பார்க்க

பீகார்: கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து; சிறார் உட்பட 11 பேர் நீரில் மூழ்கி பலியான சோகம்

பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தைச் சேர்ந்த 20 பேர் பக்கத்து கிராமத்தில் நடக்கும் விருந்து ஒன்றில் பங்கேற்பதற்காக படகு ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் ரகோபூர் என்ற இடத்தில் கங்கை ஆற்றில் ஒரு கரை... மேலும் பார்க்க

'எல்லாம் எங்க அப்பா பார்த்துப்பார் ' போதையில் கார் ஓட்டி 3 உயிரைப் பறித்த தொழிலதிபர் மகன்!

கேரளத்தைச் சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனமான ‘இஹா டிசைன்ஸ்’ சேர்மன் சஜீவ் மற்றும் அதன் நிர்வாக இயக்குநர் நூஹா ஆகியோரின் மகனான சுஹைல் சஜீவ்(19). இவர் காக்கநாடு ராஜகிரி கல்லூரியில் பி.காம் பயின்று ... மேலும் பார்க்க