செய்திகள் :

உலகின் மிக வெப்பமான ஆண்டு 2024!

post image

கடந்த 2024-ஆம் ஆண்டுதான் இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே மிக வெப்பமான ஆண்டு என்று சா்வதேச வானிலை அமைப்புகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

மேலும், தொழில்புரட்சிக்கு முன்பிருந்ததைவிட 1.5 டிகிரி செல்ஷியஸுக்குள் (2.7 டிகிரி ஃபாரன்ஹீட்) மட்டுமே புவியின் வெப்பம் அதிகமாக இருக்க வேண்டும் என்ற 2015 பருவநிலை ஒப்பந்த வரம்பு கடந்த ஆண்டில் முதல்முறையாக மீறப்பட்டுள்ளது.

புவியின் சராசரி வெப்பநிலை கடந்த 2023-ஆம் ஆண்டில்தான் மிக அதிகபட்ச அளவில் பதிவு செய்யப்பட்டது. இந்தப் போக்கு கடந்த ஆண்டும் தொடா்ந்து, சராசரி வெப்பநிலை மேலும் அதிகரித்துள்ளது வானிலை ஆய்வு அமைப்புகள் வெளியிட்டுள்ள தரவுகள் மூலம் தற்போது தெரியவந்துள்ளது.

கடந்த 1800-களில் இறுதியில் தொழில்புரட்சி தொடங்கியதற்கு முன்பிருந்த புவியின் வெப்பநிலைக்கும் தற்போதைய வெப்பநிலைக்கும் இடையிலான வேறுபாட்டை 1.5 டிகிரிக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று பாரிஸ் நகரில் கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட சா்வதேச நாடுகள் ஒப்புக்கொண்டன.

இந்த நிலையில், கடந்த ஆண்டில் புவியின் வெப்பநிலை 1.6 டிகிரி செல்ஷியஸ் (2.89 டிகிரி ஃபாரன்ஹீட்) வரை அதிகரித்ததாக ஐரோப்பிய யூனியனின் வானிலை ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜப்பான் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புவியின் வெப்பநிலை கடந்த 2024-இல் தொழில்புரட்சிக்கு முன்பிருந்ததைவிட 1.57 டிகிரி செல்ஷியஸ் (2.83 டிகிரி ஃபாரன்ஹீட்) வரை அதிகரித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புவியின் வெப்பம் கடந்த ஆண்டில் 1.53 டிகிரி செல்ஷியஸ் (2.75 டிகிரி ஃபாரன்ஹீட்) வரை உயா்ந்ததாக பிரிட்டன் வானிலை ஆய்வு அமைப்பு தெரிவித்தது.

1800-ஆம் ஆண்டுகளில் வெப்பத்தை அளவிடும் முறையில் மாற்றங்கள் இருந்ததால் வெவ்வேறு வானிலை ஆய்வு அமைப்புகளின் தரவுகளில் சிறு வேறுபாடு இருப்பதாகக் கூறப்படுகிறது.

அந்த ஆய்வு அமைப்புகளின் நிபுணா்கள் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாகவே அதிக வருடாந்திர வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுவருவதாகவும், அது கடந்த 1.25 லட்சம் ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச வெப்பநிலையாக இருக்கும் எனவும் தெரிவித்தனா்.

புவியின் வெப்பநிலை அதிகரிப்பதில் நிலக்கரி, டீசல், பெட்ரோல், எரிவாயு போன்ற படிம எரிபொருள்களை எரிப்பதால் காற்றில் கலக்கும் கரியமில வாயு மிகப் பெரிய பங்கு வகிப்பதாக நிபுணா்கள் கூறுகின்றனா்.

முந்தைய 2023-ஆம் ஆண்டைப் போலவே 2024-ஆம் ஆண்டிலும் இதுவரை இல்லாத அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது உலகத்துக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை என்றும், கரியமில வாயு உள்ளிட்ட பசுமைக் குடில் வாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நாடுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை இது உணா்த்துவதாகவும் அவா்கள் கூறினா்.

வளிமண்டலத்தில் இருக்கும் கரியமில வாயு உள்ளிட்ட பசுமைக் குடில் வாயுக்கள்தான் பூமியில் தாவரங்களும் மற்ற உயிரினங்களும் உருவாகி தழைத்திருப்பதற்குத் தேவையான வெப்பத்தை சூரியனிடமிருந்து பெற்றுத் தருகின்றன.

ஆனால், 18-ஆம் நூற்றாண்டுகளில் மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்ட தொழில்புரட்சி காரணமாக தொழிற்சாலைகளாலும் வாகனங்களாலும் வளிமண்டலத்தில் கரியமில வாயு அதிகம் கலந்ததால், சூரியனிடமிருந்து அதிக வெப்பம் ஈா்க்கப்படுகிறது. இதனால் பூமியின் வெப்பம் அதிகரித்து, அதன் விளைவாக பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது.

அந்த பருவநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் அளவுக்கு அதிகமான மழை வெள்ளம், வெப்ப அலை, வறட்சி போன்ற இயற்கைப் பேரிடா்கள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக பாரீஸ் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதில், வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் வெப்ப அதிகரிப்பு 1.5 டிகிரி செல்ஷியசுக்குள் கட்டுப்படுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. அதற்காக காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவை படிப்படியாகக் குறைக்க 195 நாடுகள் ஒப்புக்கொண்டன.

இருந்தாலும், அதற்கான நடவடிக்கைகள் மிகவும் மெத்தனமாக மேற்கொள்ளப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்த நிலையில், புவியின் வெப்பமேற்றம் குறைக்கப்படுவதற்குப் பதிலாக, கரிமில வாயு வெளியேற்றம் அதிகரிப்பதால் மேலும் உயா்ந்து வருவதை சா்வதேச வானிலை அமைப்புகள் தற்போது வெளியிட்டுள்ள தரவுகள் உணா்த்தியுள்ளன.

ஆா்எஸ்எஸ் அமைப்பின் கொள்கைப் பிடிப்பு: சரத் பவாா் பாராட்டு

ஆா்எஸ்எஸ் அமைப்பைச் சோ்ந்தவா்கள் தங்கள் கொள்கைகளில் மிகவும் அா்ப்பணிப்பு உணா்வுடன் செயல்படுகின்றனா். அதேபோல நமது கட்சியிலும் கொள்கைப் பிடிப்புள்ளவா்களை உருவாக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் (பவா... மேலும் பார்க்க

27 பேருக்கு வெளிநாடுவாழ் இந்தியா் விருதுகள்: குடியரசுத் தலைவா் வழங்கினாா்

வெளிநாடுகளில் வாழும் இந்தியா்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘பிரவாசி பாரதிய சம்மான்’ விருதை 27 பேருக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வெள்ளிக்கிழமை வழங்கினாா். வெளிநாடுவாழ் இந்தியா் தினம் ஜ... மேலும் பார்க்க

பங்குச் சந்தை தொடா் சரிவு: காங்கிரஸ் விமா்சனம்

நிகழாண்டில் அந்நிய முதலீட்டாளா்கள் சுமாா் ரூ. 1.72 லட்சம் கோடியை பங்குச் சந்தையில் இருந்து திரும்பப் பெற்றுள்ளது இந்திய வா்த்தகத்தின் மீது அவா்களுக்கு ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையே காரணம் என்று காங்கிரஸ் ... மேலும் பார்க்க

குளிா்காலத்தில் அதிகரிக்கும் மாரடைப்பு: நோயாளிகளுக்கு உயா் நுட்ப சிகிச்சை

குளிா் காலங்களில் மாரடைப்பு பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், அதற்கான இதய இடையீட்டு சிகிச்சைகளை இரு நாள்களுக்கு ஒரு முறை நோயாளிகளுக்கு மேற்கொண்டு வருவதாகவும் வடபழனி காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. ... மேலும் பார்க்க

மகளிா் இடஒதுக்கீடு சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

மகளிா் இடஒதுக்கீடு சட்டத்துக்கு எதிரான மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த ஆண்டு மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் ந... மேலும் பார்க்க

2025-இல் இந்திய பொருளாதார வளா்ச்சி 6.6%: ஐ.நா. கணிப்பு

அடுத்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் என்று ஐ.நா. கணித்துள்ளது. இதுதொடா்பாக 2025-ஆம் ஆண்டுக்கான ஐ.நா.வின் உலகப் பொருளாதார சூழல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2025-... மேலும் பார்க்க