செய்திகள் :

உலக வங்கியின் முதல் டிஜிட்டல் திட்டம்: நான்கு முக்கிய தூண்கள் ; இந்தியாவுக்கு என்ன பலன்?

post image

உலக நாடுகளின் டிஜிட்டல் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், தனது முதலாவது ஒருங்கிணைந்த டிஜிட்டல் வியூகத்தை உலக வங்கி குழுமம் அறிவித்துள்ளது.

வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் 60 கோடி மக்களுக்கு மலிவு விலையில் இணைய இணைப்பையும், 40 கோடி மக்களுக்கு டிஜிட்டல் சேவைகளையும் கொண்டு சேர்ப்பது இந்தத் திட்டத்தின் முதன்மை இலக்காகும்.

வேலைவாய்ப்பு இடைவெளியைக் குறைக்கும் முயற்சி

அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில், வளரும் நாடுகளில் சுமார் 120 கோடி இளைஞர்கள் உழைக்கும் வயதை எட்டுவார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் 42 கோடியாக மட்டுமே இருக்கும் சூழல் நிலவுகிறது. இந்த பெரும் இடைவெளியைக் குறைப்பதற்கும், தொழிலாளர்களின் உற்பத்தித்திறனை கூட்டுவதற்கும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைச் சரியாகப் பயன்படுத்துவதே உலக வங்கியின் இந்த வியூகத்தின் முக்கிய நோக்கமாகும்.

world bank group

நான்கு முக்கிய தூண்கள்

இணைய இணைப்பை பரவலாக்குவது, ஸ்மார்ட்போன் மற்றும் இணையச் சேவைகளுக்கான கட்டணத்தைக் குறைப்பது, டிஜிட்டல் சேவைகளுடன் திறன் பயிற்சிகளை வழங்குவது மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டுக்கான உள்கட்டமைப்பை உருவாக்குவது ஆகிய நான்கு அம்சங்களை மையமாகக் கொண்டு இந்தத் திட்டம் செயல்படவுள்ளது.

எளிய தேவைகளுக்கான 'Small AI'

பிரம்மாண்டமான டேட்டா சென்டர்கள் இல்லாமல், குறிப்பிட்ட தேவைகளுக்காக மட்டுமே குறைந்த செலவில் செயல்படும் சிறிய அளவிலான 'Small AI' தொழில்நுட்பங்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. விவசாயத்தில் பயிர் நோய்களைக் கண்டறிதல், கிராமப்புற சுகாதாரப் பணிகளுக்கு வழிகாட்டுதல், சிறு நிறுவனங்களின் கணக்கு மற்றும் சரக்கு மேலாண்மையை எளிமைப்படுத்துதல் போன்ற அன்றாடப் பணிகளுக்கு இது பெரிதும் பயன்படும்.

இந்திய நிறுவனங்களுக்கான வாய்ப்புகள்

இந்தியாவின் UPI, India Stack மற்றும் MOSIP போன்ற முன்னுதாரணமான டிஜிட்டல் கட்டமைப்பு மாதிரிகள், பிற வளரும் நாடுகளுக்கான தொழில்நுட்பத் தீர்வுகளாக மாறக்கூடும். இதன்மூலம் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குச் சர்வதேசச் சந்தையில் புதிய கதவுகள் திறக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், இத்திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு எனத் தனியாக நிதி ஒதுக்கீடு எதுவும் அறிவிக்கப்படவில்லை.

அதேவேளையில், இந்த டிஜிட்டல் வளர்ச்சியின் பலன்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டுமானால், குறைந்த விலை சாதனங்கள், டிஜிட்டல் பயிற்சிகள் மற்றும் தரவுப் பாதுகாப்பு ஆகியவற்றை அரசு முழுமையாக உறுதிசெய்ய வேண்டியது அவசியமாகிறது.

ஆயுதபூஜை: 'அரிசி விலை உயர்வால், உயர்ந்த பொரி விலை!' - கரூரில் பொரி வியாபாரம் மும்முரம்

நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ஆயுதபூஜையின்போது, தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை சுத்தம் செய்து, அவற்றுக்க... மேலும் பார்க்க

மதுரையில் நடைபெற்ற 'CEDOI Awards 2026': 2500-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் பங்கேற்பு!

CEDOI – Consummate Entrepreneurs Development Organisation of India என்ற அமைப்பு, கடந்த 2022-ஆம் ஆண்டு மதுரையில் வெறும் 8 உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்டது. இன்று, தமிழகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட மண... மேலும் பார்க்க

வேல்ஸ் குழுமம்: முதல்வர் விஜயை பூங்கொடுத்துடன் வரவேற்ற ஐசரி கணேஷ்

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவரும் வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவன வேந்தருமான டாக்டர் ஐசரி கே கணேஷ் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் தலைவர், வேல்... மேலும் பார்க்க

``தேசிய அளவிலான அங்கீகாரம்; பெருமை கொள்கிறோம்" - தங்கமயில் ஜுவல்லரி

தேசிய அளவிலான அங்கீகாரத்தை பெற்றிருக்கும் நமது தங்கமயில் ஜுவல்லரி. சில சாதனைகள் மட்டுமே ஒரு நிறுவனத்தின் பயணத்தில் சிறப்புமிக்க அத்தியாயங்களாக பெயர் பெறுகின்றன. இன்று தங்கமயில் ஜுவல்லரி அத்தகைய தருணத்... மேலும் பார்க்க

இலையைக் கலையாக்கி வருமானம்... ₹500 முதலீட்டில் வெற்றிபெற்ற காஞ்சிபுரம் இளைஞர்!

அதிகாலை 6 மணி… கையில் ஒரு பை… இயற்கை கொடுக்கும் இலைகளைத் தேடி ஒரு பயணம்! குப்பையாகக் கருதப்படும் இலைகளுக்கு உயிரூட்டி, அவற்றைக் கலைப்படைப்புகளாக மாற்றி வருமானம் ஈட்டுகிறார் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சே... மேலும் பார்க்க

"Starlink-ஐ இந்தியாவுக்குள் வரவிடாமல் பெருமுதலாளிகள் தடுக்கிறார்கள்" - எலான் மஸ்க் குற்றச்சாட்டு

உலகின் டாப் பணக்காரர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் செயற்கைக்கோள் இணைய நெட்வொர்க்தான் ஸ்டார்லிங்க்.செயற்கைக்கோள் மூலம் கிடைக்கும் இந்த இண்டர்நெட் சேவையை இந்தியாவில் தொடங்குவதற்கான அனைத்து ம... மேலும் பார்க்க