செய்திகள் :

"எங்கள் கட்சியை வெற்றி பெற செய்தால் $5,000 தருகிறேன்" - அமெரிக்க மக்களுக்கு ட்ரம்ப் தூண்டில்!

post image

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் காங்கிரஸ் தேர்தல் வரவுள்ளது. காங்கிரஸ் என்பது அமெரிக்காவின் நாடாளுமன்றம்.

இந்தத் தேர்தலை ‘மிட்-டேர்ம் தேர்தல்’ என்று கூறுவார்கள்.

பெரும்பான்மை வேண்டும்

இதுவரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொண்டு வந்த சட்டங்கள் எளிதாக நிறைவேறி வந்தன. அதற்குக் காரணம், அமெரிக்க காங்கிரஸில் ட்ரம்பின் குடியரசுக் கட்சிதான் பெரும்பான்மையாக இருந்தது.

மீண்டும் ட்ரம்ப் இதே பிடியைத் தன் கையில் வைத்திருக்க வேண்டுமானால், வருகிற நவம்பர் தேர்தலை குடியரசுக் கட்சி வெற்றி பெற்றாக வேண்டும்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ஈரான் போர்

ஆனால், அதற்குத் தடையாக ‘ஈரான் போர்’ வந்து நிற்கிறது.

பிப்ரவரி கடைசித் தேதியில் தொடங்கிய ஈரான் போர் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

இந்தப் போரால் உலக அளவில் எண்ணெய் சந்தை பாதிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு அமெரிக்காவும் விதிவிலக்கல்ல. அமெரிக்காவில் பெட்ரோல் விலை அதிகரித்திருக்கிறது... மேலும், இந்தப் போரால் அமெரிக்காவின் கையிருப்பு ஆயுதங்கள் குறைகிறது... அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு நெருக்கடி ஏற்படுகிறது என்று வேறு அமெரிக்க மக்களுக்கு அதிருப்தி இருந்து வருகிறது.

ட்ரம்ப் என்ன சொன்னார்?

இந்த அதிருப்தியைத் தாண்டி, இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சிப் பெரும்பான்மை பெற்றுவிட வேண்டும் என்று ட்ரம்ப் கணக்குப் போடுகிறார்.

இதற்காக நேற்று அமெரிக்க மக்களுக்குத் தூண்டில் ஒன்றை விரித்துள்ளார் ட்ரம்ப்.

நேற்று (செப்டம்பர் 9) நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ட்ரம்ப், “வருகிற தேர்தலில் மேல்சபை, கீழ்சபை என இரண்டிலும் குடியரசுக் கட்சியினர் வெற்றி பெற்றால், நம்முடைய அபரிவிதமான பொருளாதார வெற்றியால், அனைத்து (adult) அமெரிக்க குடிமக்களுக்கு 5,000 டாலர் டிவிடெண்டாக வழங்குவேன்” என்று கூறியிருக்கிறார்.

ட்ரம்பின் இந்த அறிவிப்பு டிவிடெண்ட் இல்லை... இது லஞ்சம் என்று சமூக லலைத்தளங்களில் சில அமெரிக்கர்கள் விமர்சித்து வருகின்றனர்.

BRICS மாநாடு: இந்தியா வரும் ஜி ஜின்பிங், புதின், ஈரான் அதிபர் மற்றும் இன்னும் பலர் - ஏன் முக்கியம்?

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பே பிரிக்ஸ். இந்த ஆண்டு பிரிக்ஸின் தலைமை சுழற்சி முறையில் இந்தியாவிற்கு வந்துள்ளது. இதையொட்டி வருகிற 12, 13 தேதிகளில் இந்தியா ப... மேலும் பார்க்க

'புதின் முயற்சி, தென்னாப்பிரிக்கா என்ட்ரி, மன்மோகன் சிங் யோசனை' - 'BRICS' கதையைப் பகிர்ந்த காங்கிரஸ்

வருகிற செப்டம்பர் 12, 13 தேதிகளில், BRICS மாநாடு புதுடெல்லியில் நடக்கவிருக்கிறது. இந்த ஆண்டு மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்துகிறது. இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் உள்ளி... மேலும் பார்க்க

``ஆதவ் அர்ஜுனா முதல்வராகிவிடக் கூடாது என்ற பயத்தில்..." - முதல்வர் விஜய்யைச் சாடும் அப்பாவு

தமிழக முதல்வர் விஜய் இன்றிரவு லண்டனுக்குச் செல்லவிருக்கிறார். ஆனால், லண்டனில் அரசு முறையாக முதல்வர் யாரையெல்லாம் சந்திக்கிறார் என எந்தத் தகவலையும் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த நிலை... மேலும் பார்க்க

மிசா: `ஷா கமிஷன் அறிக்கை'; கைதிகள் பட்டியலில் `மிஸ்'ஸான ஸ்டாலின் பெயர் - ஏன்... என்னதான் நடந்தது?

தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் பதிலுரையின் போது, முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் குறித்தும், அவர் மிசா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட விவகாரம் குறித்தும் பேசினார். அப்போது அவரின் உடல்மொழி வி... மேலும் பார்க்க

திராவிடக் கட்சிகளின் கோட்டைகளில் `விசில்' சவால் - மதுராந்தகம் தாராபுரம் தொகுதிகளின் தேர்தல் வரலாறு!

செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம் (தனி), திருப்பூர் மாவட்டத்தின் தாராபுரம் (தனி) ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிற... மேலும் பார்க்க

'இடதுபக்கம் வீடு; வலதுபக்கம் கடற்கரை!' - முதல்வர் விஜய் டிக் அடித்த புதிய தலைமைச் செயலக ஸ்பாட்!

புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக பட்டினப்பாக்கம் போர்ஷோர் எஸ்டேட் இடத்தை தேர்வு செய்து, விரிவான திட்ட அறிக்கையை அளிக்க அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு.புதிய தலைமைச் செயலக ஸ்பாட்!1200 கோடி ர... மேலும் பார்க்க