ராஜ ராஜ சோழன் சதய விழா: ஆப்சென்ட்டான அமைச்சர்... தவெக ஆட்சியிலும் தொடர்கிறதா சென...
'எங்க மகளை மும்பை கோயிலை பார்த்துவிட்டு வரலாம் என்று அழைத்து சென்றனர்' - கைதான பெண்களின் பின்னணி
மும்பையில் கடந்த வாரம் பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் துப்பாக்கியால் சுடப்பட்டதில் டைகர் ஷெராப் கார் ஓட்டுனர் உட்பட இரண்டு பேர் காயம் அடைந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு தேவையான ஆயுதத்தை குற்றவாளிகளிடம் சப்ளை செய்தது தொடர்பாக இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ராதா மற்றும் பபிதா ஆகிய அந்த இரண்டு பெண்களும் தோழிகள் ஆவர். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அவர்களில் ராதாவிற்கு இத்துப்பாக்கிச்சூடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள குணாலுடன் தொடர்பு இருந்துள்ளது. அந்த தொடர்பை பயன்படுத்தித்தான் குணால் ராதாவிடம் துப்பாக்கியை மும்பையில் டெலிவரி செய்துவிடும்படி கூறி இருக்கிறார்.
ராதா உடனே தனியாக செல்லாமல் தனது தோழியையும் மும்பைக்கு அழைத்து வந்தார். மும்பையில் குற்றவாளிகளிடம் துப்பாக்கியை டெலிவரி செய்துவிட்டு உடனே டெல்லிக்கு சென்றுவிட்டனர்.

அவர்கள் டெல்லி ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டு மும்பைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஆனால் பபிதாவை ராதா உண்மையை மறைத்து மும்பைக்கு அழைத்து சென்றுவிட்டதாக பபிதாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பபிதாவின் குடும்பத்தினர் இது குறித்து கூறுகையில், ராதா தான் மும்பை செல்வதற்கான உண்மையான நோக்கம் குறித்து பபிதாவிடம் தெரிவிக்கவில்லை.
கோயிலுக்கு என்று அழைத்து சென்றனர்
மும்பையில் உள்ள கோயில்களை பார்த்துவிட்டு வரலாம் என்று கூறி அழைத்து சென்றார். மேலும், ஆயுதங்கள் குறித்தோ அல்லது துப்பாக்கிச் சூடு திட்டம் குறித்தோ பபிதாவிற்கு எந்தத் தகவலும் தெரிந்திருக்கவில்லை. பபிதா இவ்விவகாரத்தில் தவறு செய்து இருந்தால் தண்டிக்கப்படவேண்டும். நீதித்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது''என்று தெரிவித்தார்.
பபிதா ஹரியானாவின் சோனிபட் என்ற இடத்தில் வேலை செய்து வந்தார். டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது தொடர்பாக பீகாரைச் சேர்ந்த ஹிருத்திக் என்கிற ரோஷன் (22), ஹரியானாவைச் சேர்ந்த ரேஹான் (18) மற்றும் பூல் சிங் (18) ஆகியோர் ராஜஸ்தானின் கோட்டாவில் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடர்பு இருந்ததாகவும், நேபாளத்திற்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் 3 பேர் கைது
நடிகர் டைகர் ஷெராஃப் மீது ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, ஹரியானாவைச் சேர்ந்த மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கித் கதக், ஜதின் மற்றும் சமீர் ஆகியோர் புதிதாக கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். இவர்களையும் சேர்த்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. சோனிபட்டைச் சேர்ந்த ஆடைக்கடை உரிமையாளரான சமீர், இந்த வழக்கில் ஒரு முக்கியமான நபராகக் கருதப்படுகிறார்.
அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திருக்கலாம் என்றும், அவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டிருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர். அவர் துப்பாக்கிச்சூட்டில் நேரடியாக தொடர்புடைய 3 பேருடன் மும்பையில் தங்கி அவர்களுக்கு உதவியதாகவும், ஆனால் ஞாயிற்றுக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு முன்பே அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர். இதற்கிடையில், துப்பாக்கிச் சூட்டில் நேரடியாக ஈடுபட்ட மூவர் கோட்டாவிலிருந்து அழைத்து வரப்பட்டு, வரும் 31-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கியால் சுட்டவர்கள், தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று ஆரம்பகட்ட தடயவியல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அந்தத் துப்பாக்கிகள் இன்னும் கண்டெடுக்கப்படவில்லை. இது குறித்து துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
















