செய்திகள் :

எடப்பாடியுடன் சந்திப்பு; வரவிருக்கும் அமித் ஷா - டெல்லி பயணமான நயினார் நாகேந்திரன்

post image

இந்த ஆண்டின்‌ தொடக்கத்தில் இருந்தே, தமிழ்நாட்டில் தேர்தல் பரபரப்புகள் தொற்றி கொண்டன.

இப்போது தேர்தலுக்குச் சில மாதங்கள்‌தான் உள்ளன. அதனால், பரபரப்புகள் பற்றி சொல்லவே தேவையில்லை.

தமிழ்நாட்டில் இப்போது வரை திமுக கூட்டணி வலுவாக உள்ளது. இடையில், காங்கிரஸ் வேறு கூட்டணிக்கு மாறலாம் என்கிற கணிப்புகள்‌ இருந்தன. ஆனால், அந்தக் கணிப்புகள் மாறி இப்போது திமுகவும், காங்கிரஸும்‌ மாறி மாறி நெருக்கம் காட்டி வருகின்றன.

எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன்
எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன்

சந்திப்பு

இந்த நிலையில், நேற்று முன்தினம் (டிசம்பர் 11) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியைச் சந்தித்தார் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.

அடுத்ததாக, இன்று டெல்லிக்குப் பயணித்திருக்கிறார் நயினார் நாகேந்திரன். அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்க உள்ளார்.

இந்தச் சந்திப்பில் தேர்தல் வியூகம், கூட்டணி குறித்து பேசப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

அமித் ஷா தமிழ்நாடு வருகை

வரும் 15-ம் தேதி, தமிழ்நாடு வருகிறார்‌ அமித் ஷா. டெல்லி சந்திப்பில் நடக்கும் ஆலோசனைகளின் படி, அமித்ஷாவின் தமிழ்நாடு வருகையின் நிகழ்வுகள் கட்டமைக்கப்படலாம் என்கிறது பாஜக தரப்பு.

தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜக மூத்த தலைவர்கள் வருகை, அடுத்தடுத்த சந்திப்புகள், தேர்தல் வியூகங்கள், கட்சிகளைக் கூட்டணிக்குள் இழுப்பது என பணிகள் தீவிரம் அடைகிறது.

திரண்ட அதிமுக, அமமுக பிரபலங்கள், வாழ்த்திய சசிகலா; ஜெயலலிதா உதவியாளர் வீட்டுத் திருமணம்

மறைந்த அஇஅதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த ரவிராஜின் மகள் திருமணம் ஒரத்தநாடு அருகே நேற்று நடந்தது.மறைந்த ஜெ ஜெயலலிதா முதல்வராவதற்கு முன் அவரிடம் உதவியா... மேலும் பார்க்க

"அமித் ஷா, மோடி ஆகியோர் தமிழ்நாட்டிற்கு இனிமேல் படையெடுத்து தான் வர வேண்டும்!" - அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் புறநகர் மற்றும் நகரப் பகுதிகளுக்கு செல்ல ஏழு புதிய பேருந்து சேவைகளை மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு பிற... மேலும் பார்க்க

புதிய மேயர் யார்? - மும்பை உட்பட மகா., முழுவதுமுள்ள 29 மாநகராட்சிளுக்கு வரும் ஜன.,15ம் தேதி தேர்தல்

மும்பை மாநகராட்சி உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளின் பதவிக்காலம் கடந்த 2022ம் ஆண்டே முடிந்துவிட்டது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. உள்ளாட்சி அமைப்புகளில் எத்தனை... மேலும் பார்க்க