செய்திகள் :

`என்.டி.ஏ கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எத்தனை தொகுதிகள்?' - பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி

post image

ஏப்ரல் மாதம் 23-ம் தேதி தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கி திமுக அதிமுக என இரு கட்சியிடையேயும் இழுபறியாகவே நீடித்தது. இந்த நிலையில், இரண்டு கட்சிகளும் தங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து அறிவித்து வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பா.ஜ.க-வுக்கு 27 தொகுதிகளும், அன்புமணி தலைமையிலான பா.ம.க-வுக்கு 18 தொகுதிகளும், டிடிவி தினகரன் தலைமையிலான அ.மு.மு.க-வுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகளும், இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 2 தொகுதிகளும், ஜான் பாண்டியனின் த.ம.மு.க கட்சிக்கு 1 இடமும், திருமாறனின் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சிக்கு 1 இடமும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

நேற்று (மார்ச்.24) தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியலாக 23 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்திருந்த நிலையில், தற்போது கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பான விவரங்களையும் வெளியிட்டிருக்கிறார்.

` 13 திமுக அமைச்சர்கள், சபாநாயகர் தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள்' - எடப்பாடியின் அடடே மூவ்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது வியூகத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். தி.மு.க அமைச்சரவைய... மேலும் பார்க்க

"டார்ச் சின்னத்தில் போட்டியிட ஸ்டாலின் அனுமதிக்க வேண்டும்" - கமல்ஹாசனுக்காக குரல் கொடுக்கும் திருமா

வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று அறிவித்திருந்தார். இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட வேண்டும்... மேலும் பார்க்க

கன்னியாகுமரி: மாவட்டத்தில் ஒற்றைத் தொகுதியில் ஒதுங்கிய அதிமுக; 5 தொகுதிகளில் தாமரைச் சின்னம் போட்டி!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அதில் கன்னியாகுமரியில் அ.தி.மு.க-வின் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ-வாக உள்ளார். நாகர்கோவில் தொகுதியில் பா.ஜ.க-வின் எம்.ஆர்.காந்தி, பத்மநாபப... மேலும் பார்க்க

"தோழமை தொடர்வோம்; களத்தில் வெல்வோம் -175 இடங்களில் உதயசூரியன் களம் காண்கிறது!"- ஸ்டாலின் அறிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் 175 இடங்களில் உதயசூரியன் களம் காண இருக்கிறது என்று மு.க ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் கடிதத்தில், "2026 சட்டமன்றத் தேர்தல் களத்திற்கான தி.மு.க த... மேலும் பார்க்க