செய்திகள் :

`161 பேர், 363 மணிநேரத்தில் உருவாக்கியது' - பார்ட்னருக்கு நடிகர் ஆமிர் கானின் காதல் பரிசு!

post image

பாலிவுட் நடிகர் ஆமிர் கான் ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி, இருவரையும் விவாகரத்து செய்துவிட்டார். தற்போது கௌரி என்ற பெண்ணுடன் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்துவருகிறார்.

தனது 60-வது வயதில்தான் தன் புதிய காதலியை வெளியுலகிற்கு ஆமிர் கான் அறிமுகம் செய்தார். இப்போது எங்கு சென்றாலும் தனது புதிய துணையை அழைத்துச் செல்கிறார். அவர் தனது புதிய துணையை மனைவியாக்கிக்கொள்ள முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருவரும் சேர்ந்து ஒரு திருமண நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தனர். அதில் கௌரி அணிந்திருந்த மோதிரம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் இருந்தது.

ஆமிர் கான் தனது காதலிக்கு இரண்டு மோதிரங்கள் வாங்கிக் கொடுத்துள்ளார்.

காதல் பரிசாக கொடுத்துள்ள அந்த மோதிரம் 'QWEEN' எனும் ஆடம்பர நகைப் பிராண்டைச் சேர்ந்தவை. அந்த நிறுவனம் ஆமீர் கான் வாங்கி இருக்கும் மோதிர பிராண்டை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தக்கூட இல்லை. ஆனால் ஆமிர் கான் அதற்குள்ளாகவே அத்திறுவனத்தின் வாடிக்கையாளராகிவிட்டார். ஆமிர் கான் பிரத்யேகமாகச் செய்து கொடுத்த இரண்டு மோதிரங்களில் ஒன்றை கெளரி அணிந்து வந்ததாக கூறப்படுகிறது.

காதலை ஒரேயொரு உணர்வின் மூலம் மட்டும் வெளிப்படுத்திவிட முடியாது என்று கருதி அவர் இரண்டு மோதிரங்களைத் கெளரிக்கு வாங்கி கொடுத்து இருக்கிறார் என்று கூறுகிறார்கள் பாலிவுட் வட்டாரத்தில்.

முதல் மோதிரத்தில், பிரேசிலைச் சேர்ந்த ஒரு பிரகாசமான நீல நிற(அக்வாமரைன்) வைரங்களால் சூழப்பட்டுள்ளது. இரண்டாவது மோதிரத்தில், மடகாஸ்கரைச் சேர்ந்த ஒரு உயர்தர ரூபி கல் இடம்பெற்றுள்ளது. ரூபி காதல் மற்றும் பேரார்வத்தைக் குறிக்கிறது. அதே சமயம் அக்வாமரைன் அமைதி, தெளிவு மற்றும் உணர்ச்சியைக் குறிக்கிறது. இந்த மோதிரம் தங்கத்தில் பதிக்கப்பட்டு, 40 வைரங்களால் சூழப்பட்டுள்ளது.

இதை உருவாக்க 363 மணிநேரம் ஆனதாம். மேலும் 131 கைவினைஞர்கள் இணைந்து பணியாற்றினர். ரூபி இரத்தினக் கல் பதித்த மோதிரத்தை உருவாக்க 812 மணிநேரம் எடுத்துக்கொண்டது. ஆமிர் கான் தனது காதலிக்காகவே இந்தச் சிறப்பு மோதிரத்தை வடிவமைத்துள்ளார். எனினும், இது ஒரு நிச்சயதார்த்த மோதிரம் அல்ல என்றும், மாறாக, கௌரிக்கு அளிக்கப்பட்ட ஒரு விலைமதிப்பற்ற காதல் பரிசுதான் என்று ஆமீர் கான் தரப்பில் கூறப்படுகிறது. கௌரிக்கு ஆறு வயதில் ஒரு மகனும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

'மோசமான முறையில் நடந்துகொண்டார்' - இயக்குநர் பாலியல் தொல்லை அளித்ததாக மோனாலிசா போஸ்லே குற்றச்சாட்டு

பிரயாக்ராஜ் மகா கும்பமேளா மூலம் மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரைச் சேர்ந்த மோனலிசா போஸ்லே வைரல் நட்சத்திரமானார். கேரளத்தில் சினிமா படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ள அவர், தனது காதலனான மகாராஷ்டிராவைச் சேர... மேலும் பார்க்க

`20 முறை முயற்சி செய்தும் வேகவில்லை' - இறைச்சி வேகவில்லை என்று கூறி போலீஸாருக்கு வந்த நூதன புகார்!

போலீஸாருக்கு எத்தனையோ விதமான நூதன புகார்கள் வருவதுண்டு. அதனையும் சமாளித்து தீர்த்து வைப்பதுதான் போலீஸாரின் வேலையாக இருக்கிறது. ஆந்திரா மாநிலத்தில் ஒருவர் கொண்டு வந்த புகாரை கண்டு போலீஸார் அதிர்ச்சியடை... மேலும் பார்க்க

ஹிமாச்சல்: 6 மாதங்களுக்கு முதல்வர், எம்.எல்.ஏ, அதிகாரிகள் சம்பளத்தின் ஒருபகுதி நிறுத்திவைப்பு!- ஏன்?

ஹிமாச்சல பிரதேசத்தில் தற்போது கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து நிதிநிலையை சரி செய்ய அரசு பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் சம்பளத்தில் ஒரு பகுதியை 6 மாதத்திற்கு நிறுத்தி வை... மேலும் பார்க்க

தாக்கி வீடியோ எடுத்து மிரட்டல்; தற்கொலை செய்த அதிகாரி: பஞ்சாப் அமைச்சர் லால்ஜித் சிங் ராஜினாமா!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸில் மாநில அரசு கிடங்கில் மாவட்ட மேலாளராக இருந்த ககன்தீப் சிங் நேற்று முன் தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சமூக வலை... மேலும் பார்க்க

`நீங்கள் வராவிட்டால் விற்று இருப்பார்கள்'- ஐஏஎஸ் அதிகாரி என கூறி திருமணம்செய்து பெண்ணை விற்க முயற்சி

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவர் தனது மகளுக்கு மணமகன் தேடிக்கொண்டிருந்தார். அவரிடம் எட்டாவா நகரை சேர்ந்த பிரித்தம்குமார் என்பவர் பெண் கேட்டு வந்தார். பிரித்தம்குமார் தன்ன... மேலும் பார்க்க