கோபம், வெதும்பல், ஆற்றாமை, உற்சாகம்.. களேபரங்களுடன் இறுதியான கூட்டணி! யாருக்கு ல...
Rashmika: `அமைதியான காலை, மதிய நேர நீச்சல், மாலை நேர டேபிள் டென்னிஸ்' - ரஷ்மிகா நெகிழ்ச்சி பதிவு!
டோலிவுட், கோலிவுட், பாலிவுட் என பிஸியாக இயங்கி வந்த நடிகை ரஷ்மிகாவும், தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகன் விஜய தேவரகொண்டாவும் நீண்ட காலக் காதலுக்குப் பிறகு அண்மையில் கரம்பிடித்தனர். பிரம்மாண்டமாக நடந்து முடிந்த திருமணத்துக்குப் பிறகு, தற்போது தங்களது தேனிலவு நாட்களைக் கொண்டாடி வருகின்றனர். தாய்லாந்தின் புகழ்பெற்ற 'கோ சாமுயி' (Koh Samui) தீவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக ரஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ``திருமணக் கொண்டாட்டங்களுக்குப் பிறகு, ஒரு சில நாட்களுக்கு அப்படியே நிதானமாக நேரத்தைக் கழிக்க விரும்பினோம். அமைதியான காலைப் பொழுதுகள், மதிய நேர நீச்சல்கள், மாலை நேரங்களில் டேபிள் டென்னிஸ் மற்றும் நீர் விளையாட்டுகள் என அந்த நாட்கள் நகர்ந்தன.
நீண்ட நேரம் சிரித்து மகிழ்ந்த சினிமா இரவுகளுடன் கழிந்த அந்தத் தருணங்கள் மறக்க முடியாதவை. கோ சாமுயியில் நாங்கள் தங்கியிருந்த இந்த ஏர்பிஎன்பி (Airbnb) இல்லம், எங்களுக்கு அடுத்த கணமே ஒரு சொந்த வீட்டைப் போன்ற உணர்வைத் தந்தது" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
அன்புக்குரியவருடனும் மகிழ்ச்சி நிறைந்த அந்த இல்லத்தில் கழிந்த நினைவுகளைப் பகிர்ந்துள்ள ரஷ்மிகாவின் பதிவு, "நேஷனல் கிரஷ்" ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. "மேட் ஃபார் ஈச் அதர்" எனப் பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.

















