செய்திகள் :

ஹிமாச்சல்: 6 மாதங்களுக்கு முதல்வர், எம்.எல்.ஏ, அதிகாரிகள் சம்பளத்தின் ஒருபகுதி நிறுத்திவைப்பு!- ஏன்?

post image

ஹிமாச்சல பிரதேசத்தில் தற்போது கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து நிதிநிலையை சரி செய்ய அரசு பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் சம்பளத்தில் ஒரு பகுதியை 6 மாதத்திற்கு நிறுத்தி வைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து முதல்வர் சுக்விந்தர் சிங் வெளியிட்ட அறிவிப்பில், முதல்வர் சம்பளத்தில் 50 சதவீதம் 6 மாதத்திற்கு நிறுத்தி வைக்கப்படும்.

இதுதவிர துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தில் 30 சதவீதம் நிறுத்தி வைக்கப்படும். எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிற அரசு துறை தலைவர்களின் சம்பளத்தில் 20 சதவீதம் நிறுத்தி வைக்கப்படும். மாநில தலைமைச் செயலாளர், கூடுதல் தலைமைச் செயலாளர்கள். டிஜிபி, ஏடிஜிபி-க்கள், முதன்மைச் செயலாளர்கள் மற்றும் மூத்த வனத்துறை அதிகாரிகளுக்கு சம்பளத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்.

செயலாளர்கள், துறைத் தலைவர்கள், ஐஜிபி-க்கள், டிஐஜிக்கள், எஸ்பி-க்கள் மற்றும் பிற வனத்துறை அதிகாரிகளின் சம்பளத்தில் 20 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். குரூப் ஏ மற்றும் பி பிரிவில் இருக்கும் அதிகாரிகளின் சம்பளத்தில் 3 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். அதேசமயம் குரூப் சி மற்றும் குரூப் டி பிரிவு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படாது. நீதித்துறையின் அரசியலமைப்புச் சுதந்திரத்தை மதிக்கும் வகையில், உயர் நீதிமன்றத்திற்கு ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளது.

அதன்படி, நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளும் தாமாக முன்வந்து ஆறு மாத காலத்திற்குத் தங்கள் ஊதியத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை பிடித்தம் செய்ய பரிசீலிக்கவேண்டும்.உயர் நீதிமன்ற நீதிபதிகள் 30% சதவிதத்தையும், மாவட்ட நீதிபதிகள் 20% சம்பளத்தையும், குரூப் ஏ மற்றும் பி பிரிவு நீதித்துறைகள் 3 சதவீத சம்பளத்தையும் தாங்களாக முன்வந்து 6 மாதத்திற்கு நிறுத்தி வைக்க அரசிடம் கேட்டுக்கொள்ள வேண்டும்.

முன்னதாக முதல்வர் சுக்விந்தர் சிங் தனது 4வது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சுக்விந்தர் சிங் தனது நான்காவது பட்ஜெட்டில், 2025-26 நிதியாண்டில் ரூ.54,928 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்தார். முதன்மையாக வருவாய் பற்றாக்குறை மானியம் நிறுத்தப்பட்டதாலும், மாநிலத்தின் அதிகரித்து வரும் கடன் சுமையாலும், முந்தைய நிதியாண்டில் இருந்து 3,568 கோடி ரூபாய் பட்ஜெட்டில் குறைக்கப்பட்டு இருந்தது.

மேலும் பசும்பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.51ல் இருந்து ரூ.61ஆகவும், எருமைப்பால் லிட்டருக்கு ரூ.61ல் இருந்து ரூ.71ஆகவும் அரசு உயர்த்தி இருக்கிறது. சமூக நலத் திட்டங்களுக்கு நிதி திரட்டுவதற்காக, பெட்ரோல் மற்றும் அதிவேக டீசல் மீது வரியை அறிவித்துள்ளது. இதன் படி லிட்டருக்கு ரூ.5 வரி வசூலிக்கப்படும்.

தாக்கி வீடியோ எடுத்து மிரட்டல்; தற்கொலை செய்த அதிகாரி: பஞ்சாப் அமைச்சர் லால்ஜித் சிங் ராஜினாமா!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸில் மாநில அரசு கிடங்கில் மாவட்ட மேலாளராக இருந்த ககன்தீப் சிங் நேற்று முன் தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சமூக வலை... மேலும் பார்க்க

`நீங்கள் வராவிட்டால் விற்று இருப்பார்கள்'- ஐஏஎஸ் அதிகாரி என கூறி திருமணம்செய்து பெண்ணை விற்க முயற்சி

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவர் தனது மகளுக்கு மணமகன் தேடிக்கொண்டிருந்தார். அவரிடம் எட்டாவா நகரை சேர்ந்த பிரித்தம்குமார் என்பவர் பெண் கேட்டு வந்தார். பிரித்தம்குமார் தன்ன... மேலும் பார்க்க

பேஸ்புக்கில் மனைவி வெளியிட்ட சிமென்ட், டிரம் பதிவு; மனைவியை காதலனுடன் அனுப்பிய கணவன்- உ.பி அதிர்ச்சி

உத்தரப்பிரதேச மாநிலம், மீரட்டில் முஸ்கான் என்ற பெண் கடந்த ஆண்டு தனது கணவனை காதலன் துணையோடு கொலைசெய்து ஊதா கலர் டிரம்மில் போட்டு சிமென்ட்டால் நிரப்பிய சம்பவம், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அத... மேலும் பார்க்க

சேற்றுத்தண்ணீரில் மிதந்தபடி ப்ரீ வெடிங் போட்டோஷூட்; `இதெல்லாம் ரொம்ப ஓவர் பாஸ்' நெட்டிசன்கள் ட்ரோல்

திருமணத்திற்கு முன்பு அல்லது திருமணத்திற்கு பிறகு தம்பதியினர் புகைப்படக் கலைஞரை வரவழைத்து விதவிதமாக புகைப்படம் எடுத்துக்கொள்வது வழக்கம். இது போன்று புகைப்படம் எடுத்துக்கொள்ள ஒரு தம்பதி செய்த காரியம் இ... மேலும் பார்க்க

திடீர் `மர்ம' ட்ரோன்களால் பரபரப்பு: வாஷிங்டன் ராணுவ தளம் மீதும் ஈரான் தாக்குதல் நடத்த திட்டமா?

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது மட்டும் தாக்குதல் நடத்துகின்றன. ஆனால் ஈரான் அண்டை நாட... மேலும் பார்க்க