செய்திகள் :

திடீர் `மர்ம' ட்ரோன்களால் பரபரப்பு: வாஷிங்டன் ராணுவ தளம் மீதும் ஈரான் தாக்குதல் நடத்த திட்டமா?

post image

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது மட்டும் தாக்குதல் நடத்துகின்றன. ஆனால் ஈரான் அண்டை நாடுகளாக பஹ்ரைன், கத்தார், துபாய் போன்ற அமெரிக்க ஆதரவு நாடுகளில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள ஃபோர்ட் லெஸ்லி ஜே. மெக்நாயர் ராணுவ தளத்திற்கு மேலே மர்ம ட்ரோன்கள் தொடர்ந்து பறப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலில் அமெரிக்க ராணுவம் மிகுந்த எச்சரிக்கையுடன் அச்சுறுத்தல்களைத் தீவிரமாகவும் கண்காணித்து வருகிறது.

கடந்த 10 நாட்களில் ஒரே இரவில் ஃபோர்ட் லெஸ்லி ஜெ.மெக்நாயர் ராணுவ தளத்திற்கு மேலே பல ட்ரோன்கள் (ஆளில்லா விமானங்கள்) பறந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கத்தார் எண்ணெய் கிணறு எரிகிறது.

இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கவும், இதற்கு எப்படிப் பதிலடி கொடுப்பது என்பது குறித்து வெள்ளை மாளிகையில் அதிகாரிகள் கூடி முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர்.  இந்த ராணுவ தளத்தில்தான் அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்புச்செயலாளர் பீட் ஹெக்சேத் ஆகியோர் வசிக்கின்றனர்.

ட்ரோன் எச்சரிக்கையை தொடர்ந்து இந்த இரண்டு பேரையும் வேறு பாதுகாப்பான இடத்திற்கு இடமாற்றம் செய்வது குறித்தும் வெள்ளை மாளிகையில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஃபோர்ட் மெக்நாயர் தளம் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் (National Defense University) மற்றும் பென்டகனின் மிக உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் தங்கும் இடமாகும்.

இங்கு அரசியல்வாதிகள் தங்குவது கிடையாது. ஆனால் தற்போது மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக பல அரசியல் தலைவர்கள் இங்கு வந்து தங்கி இருக்கின்றனர்.

ஏற்கனவே மத்திய கிழக்கில் நடந்து வரும் போர் காரணமாக உலகம் முழுவதும் உள்ள தனது தூதரகங்கள் மற்றும் ராணுவ நிலைகளை அமெரிக்கா எச்சரித்து இருக்கிறது. சில நாடுகளில் தூதரகங்களை அமெரிக்கா மூடிவிட்டது. அதோடு இந்த வாரத்தில் புளோரிடாவில் உள்ள அமெரிக்க மத்திய தலைமையகமான மேக்டில் விமானப்படைத்தளம் இரண்டு முறை மூடப்பட்டது.

அங்கு கிடந்த ஒரு சந்தேகத்திற்கிடமான பொட்டலம் காரணமாக அந்த தளத்தின் பார்வையாளர்கள் மையத்தை பல மணிநேரம் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. புதன்கிழமை அன்று நடந்த பெயரிடப்படாத ஒரு பாதுகாப்பு சம்பவம் காரணமாக அந்த தளம் பல மணிநேரம் வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக இருங்கள் என்ற உத்தரவின் கீழ் இருந்தது. ஈரானில் உள்ள தெற்கு பார்ஸ் எரிவாயு மையத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து ஈரான் கத்தாரில் உள்ள எரிவாயு மற்றும் எண்ணெய் கிணறு மீது தாக்குதல் நடத்தி இருக்கிறது.

சேற்றுத்தண்ணீரில் மிதந்தபடி ப்ரீ வெடிங் போட்டோஷூட்; `இதெல்லாம் ரொம்ப ஓவர் பாஸ்' நெட்டிசன்கள் ட்ரோல்

திருமணத்திற்கு முன்பு அல்லது திருமணத்திற்கு பிறகு தம்பதியினர் புகைப்படக் கலைஞரை வரவழைத்து விதவிதமாக புகைப்படம் எடுத்துக்கொள்வது வழக்கம். இது போன்று புகைப்படம் எடுத்துக்கொள்ள ஒரு தம்பதி செய்த காரியம் இ... மேலும் பார்க்க

தாவூத் இப்ராகிம் குடும்ப சொத்துக்கள் : போராடி ஏலத்தில் விற்பனை செய்து முடித்த மத்திய அரசு!

மும்பையில் தொடர் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்திய தாவூத் இப்ராகிம் இப்போது தனது குடும்பத்துடன் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கிறான். அவனுக்கும், அவனது குடும்பத்திற்கும் மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் ரத்னகி... மேலும் பார்க்க

VanDyke : கிளர்ச்சியாளர்களுக்கு பயிற்சி; மர்மம் நிறைந்த கதைகள்! இந்தியாவில் சிக்கிய அமெரிக்கர் யார்?

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லி உட்பட இரண்டு இடங்களில் இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டதாகவும், இந்தியாவில் உளவு பார்த்ததாகவும் 6 உக்ரைன் பிரஜைகள் கைது செய்யப்பட்டனர். அவர்களோடு அமெரிக்காவை சேர்ந... மேலும் பார்க்க

ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் அறிமுகப்படுத்துகிறது ஸ்வர்ண யுகாதி! - தங்கத்தின் பிரகாசமான புதிய தொடக்கம்!

1964 முதல் பாரம்பரியத்தில் வேரூன்றிய ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், தலைமுறைகளை கடந்து வந்த நம்பிக்கையின் சின்னமாக திகழ்கிறது. நுணுக்கமான கைவினைத் திறனும், நிலையான மதிப்புகளுக்கு காரணமாக புகழ்பெற்ற இந்த நிறுவனம்.... மேலும் பார்க்க

`உறுதிப்பத்திரம் கொடுத்தால்தான் அனுமதி' - கேதார்நாத் வரும் இந்து அல்லாதவர்களுக்கு புது கட்டுப்பாடு

இந்துக்களின் புனித இடங்களான கேதார்நாத் மற்றும் பத்ரிநாத்திற்கு வரும் இந்துக்கள் அல்லாத பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் புதிய நிபந்தனைகளை விதித்து இருக்கிறது. அதன்படி,இந்து அல்லாதவர்கள் பத்ரிநாத் மற்றும... மேலும் பார்க்க

விஐடி மொரீஷியஸ் சார்பில் தொழில்நுட்ப ஐடியாத்தான் போட்டி! - 5 நாடுகளை சேர்ந்த 1600 பேர் பங்கேற்பு

வேலூர் விஐடி மொரீஷியஸ் சார்பில் தொழில்நுட்ப ஐடியாத்தான் போட்டி இணையவழியில் நடத்தப்பட்டது.இந்த நிகழ்வு பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. இதில், உலகம் முழுவதும் இருந்... மேலும் பார்க்க