செய்திகள் :

ஈரான் 'இதை' செய்யவில்லை என்றால், இஸ்ரேல் தாக்குதல் நடத்தாது! - ட்ரம்ப்

post image

இஸ்ரேல் ஈரானின் தலைவர்கள் மற்றும் எரிசக்தி ஆலைகளைத் தொடர்ந்து தாக்கி வருகிறது. இதற்குப் பதிலடியாக ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள எரிசக்தி ஆலைகளைத் தாக்கி வருகிறது.

அப்படித் தான் நேற்று கத்தாரில் உள்ள எரிவாயு ஆலையை தாக்கியிருக்கிறது ஈரான்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...
ஈரான் போர்
ஈரான் போர்

"வளைகுடா நாடுகளில் நடத்தப்படும் தாக்குதல் மீதான கோபத்தில் இஸ்ரேல், ஈரானில் உள்ள மிகப்பெரிய எரிசக்தி வசதியான தெற்கு பார்ஸ் எரிவாயு வயல் மீது தாக்குதல் நடத்தியது. ஆனால், அந்தத் தாக்குதல் எரிவாயு வாயலின் மிகச் சிறிய பகுதியையே பாதித்தது.

அமெரிக்காவிற்கு இந்தத் தாக்குதல் குறித்து எதுவும் தெரியாது. கத்தாருக்கும் இந்தத் தாக்குதல் நடக்கும் என்று தெரியாது... அது இந்தத் தாக்குதலிலும் ஈடுபடவில்லை.

ஈரானுக்கும் இது குறித்து தெரியவில்லை. அதனால், அது கத்தாரின் எல்.என்.ஜி எரிவாயு வசதியை தவறாக தாக்கியுள்ளது.

இஸ்ரேல் தாக்காது

கத்தார் மீதான தாக்குதல் போல, ஈரான் அறிவீனமான எந்தத் தாக்குதலையும் நடத்தவில்லை என்றால், இஸ்ரேல் எரிசக்திகள் மீது தாக்குதல் நடத்தாது.

ஒருவேளை, கத்தார் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால், ஈரான் இதுவரை பார்த்திராத போல, மிகப்பெரிய தாக்குதலில் தெற்கு பார்ஸ் எரிவாயு வயலை முழுவதுமாக அழிக்கும் அமெரிக்கா.

இந்தத் தாக்குதல் நீண்ட காலத்திற்கு ஈரானை பாதிக்கும் என்பதால், அந்த மாதிரியான வன்முறை மற்றும் அழிவிற்கு நான் இதுவரை அனுமதி கொடுக்கவில்லை.

ஆனால், கத்தார் எல்.என்.ஜி மீது மீண்டும் தாக்குதல் நடந்தால், நான் தயங்கமாட்டேன்".

”விஜய்யிடம் கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை!” - நயினார் நாகேந்திரன்

தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மிகவும் சுமுகமாக நடைபெற்று வருகின்றன. தொகுதிப் பங்கீடு குற... மேலும் பார்க்க

கைகூடாத கூட்டணி கணக்கு! - தடுமாறும் தைலாபுரம்… தனித்துவிடப்பட்ட `ராமதாஸ்' பாமக!

``தனித்துப் போட்டியிடலாம்”`அன்புமணி அணி' `ராமதாஸ் அணி' என இரண்டாக பிரிந்து கிடக்கிறது பா.ம.க. அதேசமயம் கட்சியின் சின்னமும், பெயரும் அன்புமணியிடம் இருப்பதால், பெரும்பாலான நிர்வாகிகளும், தொண்டர்களும் அவ... மேலும் பார்க்க

'உதய சூரியனில் நிற்க முடியாது; டார்ச் லைட்தான் வேண்டும்!' - அறிவாலயத்தில் அடம் பிடித்த கமலின் மநீம!

திமுக மற்றும் கூட்டணி கட்சிகளிடையேயான தொகுதி பங்கீடு இழுபறியாகவே சென்று கொண்டிருக்கிறது. விசிகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஏற்கனவே முரண்டு பிடித்துக் கொண்டிருக்கின்றன.அருணாச்சலம் - மநீம பொத... மேலும் பார்க்க

`தமிழ்நாடுக்கு 5 தலைநகரங்கள்; பெண்களுக்கு தனித்தொகுதி!' - தேர்தல் அறிக்கையை வெளியிட்ட சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில் பல்வேறு திட்டங்கள் பட்டியலிட்டு பேசி வருகிறார். அதின் முக்கிய வாக்குறுதிகள் தொகுப்பு... * நாதக ஆ... மேலும் பார்க்க

திருச்சி: தோழர் நிர்மலா ராணியின் திடீர் மரணம்! - அதிர்ச்சியில் கம்யூனிஸ்ட்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M) மூத்த தலைவர்களான ஆர். உமநாத் மற்றும் பாப்பா உமநாத் ஆகியோரின் இளைய மகள் உ.நிர்மலாராணி. CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் உ.வாசுகி அவர்களின் தங்கை, திர... மேலும் பார்க்க