செய்திகள் :

”விஜய்யிடம் கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை!” - நயினார் நாகேந்திரன்

post image

தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மிகவும் சுமுகமாக நடைபெற்று வருகின்றன. தொகுதிப் பங்கீடு குறித்த முடிவுகள் கிட்டத்தட்ட இறுதி நிலையை எட்டியுள்ளன. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும். மாநிலத் தலைவர் என்ற முறையிலும் கட்சியின் முக்கிய பொறுப்பாளர் என்ற முறையிலும் நான் இதுவரை நடிகர் விஜய்யிடமோ அல்லது அவரது தரப்பினரிடமோ எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.

நயினார் நாகேந்திரன்

யாரும் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. அப்படியிருக்கையில் இத்தகைய செய்திகள் எங்கிருந்து வருகின்றன என்று எனக்குத் தெரியவில்லை. இது ஒரு தவறான தகவல்.  அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை ஆகியவை சுதந்திரமான அமைப்புகள். தவறு செய்தவர்கள் மீது மட்டுமே அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். இதற்கும் பா.ஜ.கவிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. பல அமைச்சர்கள் மீது 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு முன்பே வழக்குகள் உள்ளன.

எனவே இதனைத் தேர்தல் நடவடிக்கையாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. பா.ஜ.க எந்த ஒரு சாதியையோ அல்லது மதத்தையோ சார்ந்த கட்சி கிடையாது. நாங்கள் அனைத்து மதத்தினரையும் சமமாகவே நடத்துகிறோம். இஸ்லாமியர்களின் நோன்புத் திறப்பு நிகழ்வுகளில்கூட நான் கலந்துகொள்கிறேன்.

நயினார் நாகேந்திரன்

உண்மையில் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராகப் பேசுவது தி.மு.க.,தான். இந்து மதப் பண்டிகைகளுக்கு அவர்கள் வாழ்த்துச் சொல்வதில்லை, ஆனால், மற்ற பண்டிகைகளுக்குச் சொல்கிறார்கள். தேர்தல் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மிக விரைவில் வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கை குறித்த அறிவிப்புகள் வெளியாகும்” என்றார்.  

'ஈரானிடம் அணு ஆயுதம் இல்லை; கமேனி தன் இறப்பிற்கு பயப்படவில்லை!' - ஜோ கென்ட் 'பரபர' தகவல்கள்

"ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போர் இஸ்ரேலின் அழுத்தத்தால் தொடங்கப்பட்டது... மனசாட்சிக்கு விரோதமாக ட்ரம்ப் நிர்வாகத்தின் ஈரான் போரை ஆதரிக்க முடியாது..."- என்று கூறி நேற்று முன்தினம் தனது அமெரிக்காவின... மேலும் பார்க்க

கைகூடாத கூட்டணி கணக்கு! - தடுமாறும் தைலாபுரம்… தனித்துவிடப்பட்ட `ராமதாஸ்' பாமக!

``தனித்துப் போட்டியிடலாம்”`அன்புமணி அணி' `ராமதாஸ் அணி' என இரண்டாக பிரிந்து கிடக்கிறது பா.ம.க. அதேசமயம் கட்சியின் சின்னமும், பெயரும் அன்புமணியிடம் இருப்பதால், பெரும்பாலான நிர்வாகிகளும், தொண்டர்களும் அவ... மேலும் பார்க்க

'உதய சூரியனில் நிற்க முடியாது; டார்ச் லைட்தான் வேண்டும்!' - அறிவாலயத்தில் அடம் பிடித்த கமலின் மநீம!

திமுக மற்றும் கூட்டணி கட்சிகளிடையேயான தொகுதி பங்கீடு இழுபறியாகவே சென்று கொண்டிருக்கிறது. விசிகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஏற்கனவே முரண்டு பிடித்துக் கொண்டிருக்கின்றன.அருணாச்சலம் - மநீம பொத... மேலும் பார்க்க

`தமிழ்நாடுக்கு 5 தலைநகரங்கள்; பெண்களுக்கு தனித்தொகுதி!' - தேர்தல் அறிக்கையை வெளியிட்ட சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில் பல்வேறு திட்டங்கள் பட்டியலிட்டு பேசி வருகிறார். அதின் முக்கிய வாக்குறுதிகள் தொகுப்பு... * நாதக ஆ... மேலும் பார்க்க

திருச்சி: தோழர் நிர்மலா ராணியின் திடீர் மரணம்! - அதிர்ச்சியில் கம்யூனிஸ்ட்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M) மூத்த தலைவர்களான ஆர். உமநாத் மற்றும் பாப்பா உமநாத் ஆகியோரின் இளைய மகள் உ.நிர்மலாராணி. CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் உ.வாசுகி அவர்களின் தங்கை, திர... மேலும் பார்க்க