செய்திகள் :

'ஈரானிடம் அணு ஆயுதம் இல்லை; கமேனி தன் இறப்பிற்கு பயப்படவில்லை!' - ஜோ கென்ட் 'பரபர' தகவல்கள்

post image

"ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போர் இஸ்ரேலின் அழுத்தத்தால் தொடங்கப்பட்டது... மனசாட்சிக்கு விரோதமாக ட்ரம்ப் நிர்வாகத்தின் ஈரான் போரை ஆதரிக்க முடியாது..."

- என்று கூறி நேற்று முன்தினம் தனது அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் பதவியை ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தினார் ஜோ கென்ட்.

தனது ராஜினாமா குறித்து நேற்று பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் ஜோ கென்ட். அதில் அவர் பேசியிருப்பதாவது...
கமேனி
கமேனி

"ஈரான் திரும்ப தாக்குதல் நடத்தும் என்று தெரிந்து தான் இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியது.

தங்களால் போரை தொடங்க முடியும் என்றும், அதற்கு அமெரிக்கா எதிர்வினையாற்றினால் மட்டும் போதும் என்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அரசுக்கு நன்கு தெரியும்.

இப்போதும் சரி... கடந்த ஜூன் மாதத்தில் அமெரிக்கா தாக்குதலை தொடங்கிய போதும் சரி... ஈரான் அணு ஆயுதத்தைத் தயாரிக்கவில்லை.

கமேனிக்கு இறப்பிற்குப் பயப்படவில்லை

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியைக் கொன்றது அமெரிக்காவிற்கு சாதகமாக அமையவில்லை. அதற்குப் பதிலாக, அவருடைய ஆதரவாளர்கள் தான் இன்னும் வலுவானார்கள்.

அயோதுல்லா இறப்பது குறித்து அவர்கள் பயப்படவில்லை. இது அவர் பைத்தியக்காரர் என்பதால் அல்ல. தான் கொல்லப்பட்டாலும், ஈரானில் நடக்கும் ஆட்சி தொடரும் என்று அவருக்கு தெரிந்ததால், அவர் பயப்படவில்லை" என்று கூறியுள்ளார்.

தேனி: திமுக-வில் பன்னீர்; களத்தில் டிடிவி மனைவி? இழந்த செல்வாக்கை மீட்குமா அதிமுக? | முந்துவது யார்?

முந்துவது யார்?தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?'தேனி மாவட்டம்முந்துவது யார்?1. ஆண்டிப்பட... மேலும் பார்க்க

”விஜய்யிடம் கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை!” - நயினார் நாகேந்திரன்

தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மிகவும் சுமுகமாக நடைபெற்று வருகின்றன. தொகுதிப் பங்கீடு குற... மேலும் பார்க்க

கைகூடாத கூட்டணி கணக்கு! - தடுமாறும் தைலாபுரம்… தனித்துவிடப்பட்ட `ராமதாஸ்' பாமக!

``தனித்துப் போட்டியிடலாம்”`அன்புமணி அணி' `ராமதாஸ் அணி' என இரண்டாக பிரிந்து கிடக்கிறது பா.ம.க. அதேசமயம் கட்சியின் சின்னமும், பெயரும் அன்புமணியிடம் இருப்பதால், பெரும்பாலான நிர்வாகிகளும், தொண்டர்களும் அவ... மேலும் பார்க்க

'உதய சூரியனில் நிற்க முடியாது; டார்ச் லைட்தான் வேண்டும்!' - அறிவாலயத்தில் அடம் பிடித்த கமலின் மநீம!

திமுக மற்றும் கூட்டணி கட்சிகளிடையேயான தொகுதி பங்கீடு இழுபறியாகவே சென்று கொண்டிருக்கிறது. விசிகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஏற்கனவே முரண்டு பிடித்துக் கொண்டிருக்கின்றன.அருணாச்சலம் - மநீம பொத... மேலும் பார்க்க

`தமிழ்நாடுக்கு 5 தலைநகரங்கள்; பெண்களுக்கு தனித்தொகுதி!' - தேர்தல் அறிக்கையை வெளியிட்ட சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில் பல்வேறு திட்டங்கள் பட்டியலிட்டு பேசி வருகிறார். அதின் முக்கிய வாக்குறுதிகள் தொகுப்பு... * நாதக ஆ... மேலும் பார்க்க